அக்னிப்புரட்சி இன்றைய (25.08.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (25.08.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (25.08.2020) முக்கிய செய்திகள்.

* உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.38 கோடியாக உயர்வு.

இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 8.16 லட்சமாகும்.

கொரோனாவிலிருந்து இதுவரை 1.63 கோடி பேர் மீண்டுள்ளனர்.

61,767 பேர் அபாய கட்டத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

* இந்தியாவில் கொரோனா தொற்று:
பாதிப்பு எண்ணிக்கை 31,06,348 லிருந்து 31,67,323 ஆக அதிகரிப்பு.

குணமடைந்தோர் எண்ணிக்கை  23.38 லட்சத்திலிருந்து 24 லட்சமாக அதிகரிப்பு.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 57,542 லிருந்து 58,390 ஆக அதிகரிப்பு- மத்திய சுகாதார அமைச்சகம்.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,270  பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,27,949 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 107 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 6,721 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 6,998 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 3,32,454 பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9 காசு அதிகரித்து ரூ.84.73-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு லிட்டர் டீசல், விலை மாற்றமின்றி தொடர்ந்து ரூ.78.86-க்கு விற்பனையாகிறது.

தமிழகத்தில் இ பாஸ் குறித்து இறுதி முடிவு எடுக்க 29 ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை. மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

* பிரபல ஓட்டபந்தய வீரர் உசேன் போல்ட்க்கு கொரோனா வெருவித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

* தூத்துக்குடியில்  குண்டரை பிடிக்கச் சென்றபோது வெடி குண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர்  சுப்பிரமணியனின் உயிரிழப்பு குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது வேதனை அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது

* தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்தியைத் திணிக்க முற்பட்டால் தமிழகமெங்கும் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்!
- சீமான் | நாம் தமிழர் கட்சி.

* சட்டமன்ற உரிமை மீறல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

கடந்த 2017ம் ஆண்டு தடைசெய்யப்பட்ட குட்காப் பொருட்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வந்ததாக, ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டு சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையில், உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

அந்த மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு காலை 10.30 மணியளவில் தீர்ப்பளிக்க உள்ளது.

* ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு தடுப்பு மருந்து 2 ஆவது கட்ட மனித சோதனை.

கோவிஷீல்டு மருந்தை தயாரிக்கும் அனுமதி புனே சீரம் இன்ஸ்ட்டியூட்டுக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் 2ஆவது கட்ட மனித சோதனை தொடக்கம். இந்தியாவில் 17 மருத்துவமனைகளில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

* வானத்தைப் போல பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், மரியாதையையும் பெற்றவர் விஜயகாந்த். -  தெலங்கானா ஆளுநர் தமிழிசை.

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து .

* மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராகுல்காந்தி இரங்கல்.

காயமடைந்த மற்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களுக்கு மாநில அரசு விரைவாக உதவ வேண்டும் - ராகுல்காந்தி.

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 360 குறைந்துள்ளது.
ஒரு சவரன் 39 ஆயிரத்து 584 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ 4,948-க்கு விற்பனை.

* நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து சேவை செய்யுங்கள் - விஜயகாந்திற்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து.

குட்காவை சட்டப்பேரவைக்கு கொண்டு வந்ததாக திமுகவினருக்கு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால் மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்.

* குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து மற்றும் புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், கொறடா சக்ரபாணி உள்ளிட்டோருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

* அதிமுக கூட்டணியில் தொடர்ந்து தேமுதிக நீடிக்கிறது - பிரேமலதா விஜயகாந்த்.

கூட்டணி குறித்து டிசம்பர் அல்லது ஜனவரியில் பொதுக்குழு, செயற்குழு கூடி முடிவெடுக்கும் - பிரேமலதா விஜயகாந்த்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உரிய நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வார் - பிரேமலதா விஜயகாந்த்.

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் பிரச்சினை அவர்களது உட்கட்சி விவகாரம் - பிரேமலதா.

* தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் - வானிலை மையம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.
_ வானிலை ஆய்வு மையம்.

* நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காப்பது ஏன்? மருத்துவ சேர்க்கை தொடர்பாக அரசு கையறு நிலையில் இருப்பதால் பெற்றோர்கள், மாணவர்கள் தவிப்பு. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

* கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டை சென்னையில் உள்ள 2 மருத்துவமனைகள் பரிசோதிக்க அனுமதி:

சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் ராமச்சந்திரா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஒப்புதல்.

இந்தியாவில் 17 நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சோதனை நடத்தப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் 2ஆவது கட்ட மனித சோதனை தொடக்கம்.

* ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு':
திமுக எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்தது ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு.
- மு.க.ஸ்டாலின்.

* தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை" சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

* சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் ஜாமீன் மனு தள்ளுபடி:

2017 முதல் பாலியல் தொல்லை அளித்தது சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தெரிகிறது; சிறுமியின் வாழ்க்கையை அவரது தாயே சிதைத்துள்ளார் - நீதிபதி கருத்து.

* தனித்தேர்வர்களுக்கான தேர்வு செப்டம்பர் இறுதியில் நடக்கிறது; அக்டோபரில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

பள்ளி மாணவர்களை போல தனித்தேர்வர்களையும் தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்க உத்தரவிட முடியாது. - உயர்நீதி மன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை தகவல்.

* நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமைத்த கூட்டணி தற்போதும் தொடர்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்.

பிரேமலதாவின் கருத்தால் அதிமுக பலவீனமடைந்ததாக கூற முடியாது.
அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி

* தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து: விஜயகாந்த் பல்லாண்டு வாழவும்,  நலமும் குணமும் திடமும் பெற விரும்புகிறேன் - ஸ்டாலின்.

* பிரசாந்த் பூஷணை உச்சநீதிமன்றம் மன்னிக்க வேண்டும்; தண்டனை எதுவும் அளிக்காமல் எச்சரிக்கை மட்டும் செய்யவும் தனிப்பட்ட முறையில் கோரிக்கை. - மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால்.

* சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 13 பேர் கொண்ட கும்பலை  கைது செய்துள்ளோம்.

கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸப் குரூப் மூலம் கஞ்சா விற்பனை ; செல்ஃபோன் பறிமுதல் செய்து அதில் உள்ள தகவல்களை ஆய்வு செய்து வருகிறோம். - தியாகராய நகர் காவல் துணை ஆணையர்.

உச்சநீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குறித்த கருத்துகளை திரும்பப்பெற பிரசாந்த் பூஷணுக்கு அரை மணி நேரம் அவகாசம். - உச்சநீதிமன்றம்.

பிரசாந்த் பூஷண் இதுவரை தவறை உணர்ந்ததாக தெரியவில்லை; மன்னிப்பு கடிதமும் அளிக்கவில்லை - நீதிபதிகள்.

* தமிழகத்தில் கொரோனா காலத்திலும் தொய்வில்லாமல் இதர சிகிச்சைகள் சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் முதல் இதுவரை 20,550 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

கடந்த 20ஆம் தேதி பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது லட்சுமணன், சுனில் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

* கரூரைச் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை டெல்லியில் முரளிதரராவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த என்னால் ஆன முயற்சிகளை செய்வேன். - அண்ணாமலை.

திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியை பாராடினார்.
பதவியை எதிர்பார்த்து பாரதிய ஜனதாவில் சேரவில்லை; சாதாரண தொண்டராகவே வந்துள்ளேன்.
- அண்ணாமலை.

* மக்கள் அதிகளவில் கூடுவர் என்பதால் தமிழகத்தில் திரையரங்கு களை திறக்க தற்போது வாய்ப்பில்லை.
கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரே தியேட்டர்களை திறக்க வாய்ப்பு. - அமைச்சர் கடம்பூர் ராஜூ.

*கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவரை நாற்காலியில் அமரவிடாமல் தடுத்த விவகாரம் தொடர்பாக 3 வார காலத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.

*ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு:

சூதாட்ட விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னா உள்ளிட்டோரை கைது செய்ய கோரிக்கை. மத்திய மாநில அரசுகள் 3 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

* நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தண்டனை விவரம் ஒத்திவைப்பு.

உச்சநீதிமன்றத்தை நாம் ஒருவருக்கு ஒருவர் அவமதிக்க தொடங்கினால், அதன் மீது எப்படி நம்பிக்கை வரும்? - நீதிபதி.

* 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையில் தலையிட முடியாது:

8 மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களுக்கு பதில் திருப்புதல் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்க மனுதாரர்கள் கோரிக்கை.

மாணவர்கள் நலன் கருதி அரசு எடுத்த கொள்கை முடிவில் தலையிட முடியாது - உயர் நீதிமன்றம்.

* சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர்கள் முருகன், முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் ஆகியோருக்கு ஜாமீன் மறுப்பு-உயநீதிமன்றம்.

ஜெயராஜ் உடலில் 17 காயங்கள் இருந்தது. அவரது மகனுக்கு 13 காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தகவல்.

* திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு செப்.18,19,20 ல் நடைபெறும் என அறிவிப்பு.

* ஊரடங்கு நீட்டிப்பது குறித்து வரும் 29ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.

29ம் தேதி காலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் பிற்பகலில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை. இ பாஸ் ரத்து செய்வது அன்றைய தினமே முதல்வர் அறிவிக்கிறார்.

* பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது-எஸ்.பி.பி. சரண் வீடியோ வெளியீடு.

90% மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார்.
விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறோம் - சரண்

* கொரோனா விதிமுறைகள், கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க புதிய சட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு.

விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய சட்டம். தொற்றுநோய் சட்டத்தில் அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு. விரைவில் புதிய சட்டம் அமலுக்கு வரும் எனத் தகவல்.

* நாளை பிற்பகல் 3 மணி முதல் +1 விடைத்தாள் நகல்’:

+1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தினையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆக.31 முதல் செப்.2ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

* சென்னை எஸ்எஸ்சி போஸ் சாலையில் உள்ள நகைக்கடை ஒன்றில் 10 கிலோ தங்கம் கொள்ளை.

கடை உரிமையாளர்கள் ராஜ்குமார், சுபாஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* கேரள தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து. தங்கக்கடத்தல் ஆவணங்களை அழிக்க முயற்சிப்ப தாகக் கூறி தலைமைச் செயலகம் முன் எதிர்க் கட்சியினர் போராட்டம்.

*சாதனையை படைத்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்: டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் இங்கிலாந்து வீர‌ர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

* ஸ்ரீவைகுண்டம் அருகே ரவுடியை பிடிக்கச் சென்றபோது உயிரிழந்த காவலர் சுப்ரமணியன் வீட்டிற்கு நேரில் சென்று திமுக எம்பி கனிமொழி ஆறுதல் கூறி சுப்ரமணியன் குடும்பத்திற்கு, 2 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினார்.

* திட்டமிடப்பட்ட தேதிகளில் நீட், ஜே.இ.இ தேர்வுகள் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

ஜேஇஇ தேர்வுகள் : செப்டம்பர் 1-6 வரை நடக்கும். நீட்  தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நடக்கும்.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது - என்டிஏ.

ஜேஇஇ மெயின் தேர்வுக்கு ஏற்கனவே அட்மீட் கார்டுகள் வழங்கப்பட்டுவிட்டது.

நீட் தேர்விற்கு விரைவில் அட்மீட் கார்டு வழங்கப்படும்.

99% மாணவர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்ட தேர்வு மையங்கள் தரப்படும்.

ஜேஇஇ தேர்வு மையங்களின் எண்ணிக்கை 570ல் இருந்து 660 ஆகி உயர்த்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வு மையங்கள் 2546ல் இருந்து 3843 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

8.58 லட்சம் பேர் இந்த முறை ஜேஇஇ தேர்வு எழுதுகிறார்கள்.

15.97 லட்சம் பேர் இந்த முறை நீட் தேர்வு எழுதுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages