செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் - மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு. - Agnipuratchi

செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் - மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு.

Share This

செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் - மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு.

ஊரடங்கில் 4-ஆம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு.

செப்.30-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது - மத்திய அரசு. கல்வி நிலையங்களில், 50% ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதி.

9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதி - மத்திய அரசு.

மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கு அமல் படுத்தக் கூடாது - மத்திய அரசு.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிக்கக் கூடாது.

மாநிலம் விட்டு மாநிலம் செல்ல முழுமையான அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலத்திற்குள்ளோ அல்லது மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பாஸ் தேவையில்லை - மத்திய அரசு.

செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்.

செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி கலையரங்கம், திறந்தவெளி திரையரங்குகள் செயல்படலாம் - மத்திய அரசு.

வெளிநாட்டு விமான சேவைக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் - மத்திய அரசு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages