பாசமிகு பாட்டாளி சொந்தங்களுக்கு,
சுக்கா.. மிளகா.. சமூகநீதி ? தொடரின் பதினைந்தாம் தேர்வில் பங்குகொண்ட அனைத்து பாட்டாளி சொந்தங்களுக்கும் நன்றிகள். பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா
பதினைந்தாம் தேர்வின் முடிவுகளை காண கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தவும்.
http://pmkresults.in/
உங்கள் ஆர்வமும், அறிவும் வியக்க வைக்கின்றன. நாளுக்கு நாள் பங்குகொள்ளும் பாட்டாளிகளின் எண்ணிக்கை அதிகமாவதை எண்ணி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அத்தியாயம் 31 மற்றும் 32 ஆம் பகுதிகள் உள்ளடக்கிய பதினாறாம் தேர்வு நாளை ஞாயிறு (30.08.2020) அன்று நடைபெறுகிறது. அனைவரும் விரைந்து தயாராகுங்கள்.
நீங்கள் வாங்கிய மதிப்பெண் குறைவோ அதிகமோ என தயக்கம் கொள்ளாது உங்களின் மதிப்பெண்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு மேலும் பலரை வரும் தேர்வில் பங்கெடுக்க செய்து, சமூக நீதியின் முக்கியத்துவத்தை பலருக்கு அறிய செய்யும் அரும்பணியை செய்திட வேண்டும் என்று பாட்டாளிகள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்த்துகள்
என்றும் அன்புடன்
மருத்துவர் ச. ராமதாஸ்
29.08.2020
No comments:
Post a Comment