அக்னிப்புரட்சி இன்றைய (31.08.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (31.08.2020) முக்கிய செய்திகள்.

Share This


அக்னிப்புரட்சி இன்றைய (31.08.2020) முக்கிய செய்திகள்.

* உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 2,53,77,704 பேர் பாதிப்பு.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 850,149 பேர் இதுவரை மரணம்.

கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் 17,700,949 பேர் மீண்டுள்ளனர்.

* இந்தியாவில் கொரோனா பாதிப்பு 36,21,245ஆக உயர்வு:

இதுவரை 27.74 லட்சம் பேர் குணமடைந்துள்ள நிலையில் 64,469 பேர் உயிரிழப்பு.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 78,512 பேர் கொரோனா தொற்று - 971 பேர் உயிரிழப்பு.

கொரோனாவில் இருந்து மேலும் 60,868 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,28,041 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,150 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,35,597 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 91 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 7,322 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 6,008 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 3,68,141 பேர் குணமடைந்துள்ளனர்.

* இந்தியாவில் ஒரே நாளில் 8.46 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 4.23 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. - ஐ.சி.எம்.ஆர்.

* இன்று ஓணம் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம். மலையாள மொழி பேசும் மக்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து.

* சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.85.00 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.78.86க்கு விற்பனை.

* நாளை முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.
தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு நாளை முதல் அமலாகிறது.

* கொரோனா சிகிச்சைக்கான 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

* டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைந்து வீடு திரும்பினார்: கொரோனாவுக்கு பிந்தைய உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 18ம் தேதி அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

* மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையை திறந்துவைத்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்:
அணையில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது; முதல்கட்டமாக விநாடிக்கு 900 கன அடி நீர் திறப்பு. நீர்திறப்பின் மூலம் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

* இது தீப்பிடித்த காடு - பறவைகளே! பத்திரம்’: ஊருக்கு வழங்கப்பட்ட ஊரடங்கின் தளர்வில் உயிர்க்கொல்லி நுழைந்து விடக்கூடாது. - கவிஞர் வைரமுத்து ட்வீட்.

* தமிழக பாஜக தலைவர் முருகன், பாஜகவின் அடையாளத்தையே மாற்றி வருகிறார் ; இராமர் இடத்தில் முருகனை வைத்திருக்கிறார், அது நமக்கு மகிழ்ச்சியாகதான் இருக்கிறது.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பாராட்டு…

* திமுகவுக்கு தேர்தல் பணியாற்ற பாமக நிர்வாகிக்கு அழைப்பு விடுத்த பிரசாந்த் கிஷோர்

* மின்னணு முறைகள் மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றங்களுக்கு வங்கிகள் கூடுதல் கட்டணம் பெறக் கூடாது என்று நடுவண் நேரடி வரி வாரியம் (CBDT) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

புதிய விதி 2020 சனவரி 1 முதல் பொருந்தும். ஏற்கனவே கட்டணம் பெறப்பட்டிருந்தால் வாடிக்கையாளர்களுக்கு  வங்கிகள் அதை திருப்பி அளிக்க ஆணை!

* தென் மண்டல காவலர்கள் சார்பில் 86.5 லட்சம் ரூபாய் நிதி:
சுப்பிரமணியன் குடும்பத்திற்கு, தென்மண்டல ஐஜி முருகன் நிதியை வழங்கினார். காவலர் சுப்பிரமணியன் இல்லத்தில் தென்மண்டல ஐ.ஜி.முருகன் நேரில் ஆறுதல்.

கிராம புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம்:

* இடஒதுக்கீடு வழங்குவதற்கு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை - உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
இடஒதுக்கீடு அளிக்கும் விதிமுறைகள் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தை மீறுவதாக உள்ளன.

"முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏற்கனவே இட ஒதுக்கீடு இருந்தால் இந்த தீர்ப்பு அதனை பாதிக்காது".

முதுநிலை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

* லடாக் எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல்:
பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலில் சீன ராணுவம் எல்லை மீறியதாக தகவல். நேற்று மற்றும் நேற்று முன்தினம் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறியதாக தகவல்.

* சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மறைந்த எம்.பி வசந்தக்குமார் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை:
டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோரும் மரியாதை.

* சென்னையில் நாளை முதல் மாநகர பேருந்துகளுக்கான பாஸ் பெற்றுக்கொள்ளலாம்:

தினசரி பாஸ், மாதாந்திர பாஸ், விருப்பம் போல் பயணம் செய்யும் 1000 ரூபாய் பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.
- போக்குவரத்துத்துறை.

* பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது:

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இல.கணேசன் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.

* ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்வு:
ஒரு சவரன் 39 ஆயிரத்து 632 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.4,954-க்கு விற்பனை.

* தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் வசூலிப்பது, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதை அரசே ஏற்க கோரி வழக்கு: தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* மருத்துவ உயர் படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநிலங்கள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம்: உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு

இதனை தடுக்க இந்திய மருத்துவ குழுவிற்கு அதிகாரம் கிடையாது எனவும் தீர்ப்பு

சிற்றூர் பகுதிகள் மற்றும் மலையடி பகுதிகள் போன்றவற்றில் இருக்கக்கூடிய மக்கள் தரமான மருத்துவ சேவையை பெறுவதற்காக அந்தப் பகுதிகளில் பணி செய்யக்கூடிய இளம் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேல் படிப்பில் சிறப்பு இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு வழங்கி வருகிறது.

நீதிமன்ற உத்தரவை மீறி பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என்ற தீர்ப்பு செல்லும்: - உச்சநீதிமன்றம்.

* பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என்று தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா தொடர்ந்த சீராய்வு மனு தள்ளுபடி .

* கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சமூக ஆர்வலர்-வக்கீல் பிரசாந்த் பூசணுக்கு ஒரு ரூபாய் அபராதம்.

வருகிற 15-ந்தேதிக்குள் அபராதத்தை செலுத்த வேண்டும்.
அபராதத்தை செலுத்தாவிட்டால் 3 ஆண்டுகள் வக்கீலாக செயல்பட தடை மற்றும் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும். - உச்சநீதிமன்றம்  தீர்ப்பு.

‘பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்’:
ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை உடனே விடுவிக்க வேண்டும். - முதல்வர் பழனிசாமி.
நடப்பாண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை முழுவதுமான வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்.

* செப்.30ஆம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை:

மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவிப்பு.

மத்திய அரசு அனுமதித்த வழித் தடங்களில் விமானங்கள் இயக்க தடை இல்லை.

சிறப்பு விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு.

"சரக்கு போக்குவரத்து சேவை தொடரும்"

'வந்தே பாரத்' திட்டத்திற்கு வெளிநாடுகளுக்கு செல்லும் சேவை தொடரும் என்று அறிவிப்பு.

* தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது - தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு:

மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் லாபம் கிடைக்காது - தனியார் பேருந்து உரிமையாளர்கள்.

இருக்கைகள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் - தனியார் பேருந்து உரிமையாளர்கள்.

* ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு:

வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.

* வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.

தமிழகம் முழுவதும் நாளை வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் அரசு அறிவிப்பு.

தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களை அனுமதிக்க கூடாது.
முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அனுமதி இல்லை என்பதை அறிவிப்பு செய்ய வேண்டும்.

65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

நுழைவாயிலில் கிருமி நாசினி வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

* ரேஷன் பணியாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நாளை தொடங்கும் - ரேஷன் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன்.

* தமிழகத்தில் சிமெண்ட் விலையை நிர்ணயிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு:

பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் அதிக விலைக்கு சிமெண்ட் விற்கப்படுவதாக மனு புகார்.
நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.

* திருவண்ணாமலையில் நாளை நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை - மாவட்ட நிர்வாகம்.

* கோவை: கணுவாய் பகுதியில் யானை தாக்கியதில் கட்டட தொழிலாளி நாகராஜ் உயிரிழப்பு:
வனப்பகுதியில் இருந்து வெளியேறி வாயில் காயத்துடன் சுற்றும் யானைதான் தாக்கியதா என விசாரணை.

* நீட், ஜெ.இ.இ தேர்வுகளை நடத்தியே தீருவது என மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது:

* இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். நீட் தேர்வு ரத்து கோரி அரியலூர் அங்கனூரில் போராட்டம் நடத்தியபின் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.

* கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு: சென்னை: திருவொற்றியூர் அருகே திருச்சினாங்குப்பம் கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு.

நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற விஜய், ராகுல் ஆகிய சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

* செங்கல்பட்டில் மேலும் 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,210ஆக அதிகரிப்பு.

* தேனி அருகே வெங்கலா கோயில் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்:
2 டன் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கணேசன், மணிகண்டன், ராஜாகுரு ஆகியோர் கைது.

* தமிழக நிதி நிர்வாகம் நிதி நிலைமையில் மூச்சுத் திணறி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
தமிழக மக்களுக்கு ஆக்கப்பூர்வமான முறையில் உதவிட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்.

கொரோனா பேரிடரைக் காட்டி மக்களை ஏமாற்றியதும் பொருளாதாரத்தை சீரழித்ததும் போதும். முதல்வர் ஆய்வுக்குச் சென்ற மாவட்டங்களில் எல்லாம் கொரோனா அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை - மு.க.ஸ்டாலின்.

* கடலூர்: வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார் அமைச்சர் எம்.சி.சம்பத்.
வீராணம் ஏரி நீர்திறப்பின் மூலம் 100 கிராமங்களை உள்ள 44,856 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

*;நாளை முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:

வணிக வளாகங்களில் மக்கள் 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்திருப்பது கட்டாயம்.

வாடிக்கையாளர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வாசல்கள் இருக்க வேண்டும்.

நோய் அறிகுறி உள்ளவர்களை அனுமதிக்க கூடாது.

* உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.

ஊழியர்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிவதும் கட்டாயம் - அரசு. உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் - அரசு.

உணவகங்களில் வயதானவர்கள், கர்ப்பிணிகளை பணியமர்த்தக்கூடாது - அரசு. வாகன நிறுத்துமிடங்களில் உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் - அரசு

* அதிமுக - பாஜக கூட்டணி உறவு சிறப்பாக உள்ளது - பாஜக தலைவர் எல்.முருகன்.

மும்மொழி கொள்கையில் யாரும் அரசியல் செய்ய கூடாது. வரும் சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க தனித்து நின்றாலும், 60 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது - எல்.முருகன்.

* பூங்காக்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு:

பூங்காக்களுக்கு வருவோர் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவசியம்.
உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே பூங்காக்களில் நுழைய அனுமதி.

* பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது.

ஐ.சி.யூ.வில் உள்ள எஸ்.பி.பி.க்கு வெண்டிலேட்டர், எக்மோ உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை. - மருத்துவமனை நிர்வாகம்.

* புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்திய பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு  தமிழக பா.ஜ.கட்சி சார்பில் நன்றி - தமிழக பா.ஜ.க தலைவர் முருகன்.

மும்மொழி கல்விக்கொள்கையை தமிழக பாஜக வரவேற்கிறது.

கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் திமுக உள்ளது என்ற எங்களின் குற்றச்சாட்டிற்கு மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - முருகன்.

தமிழகத்தில் 60 சட்டமன்ற தொகுதிளில் தனித்தே போட்டியிட்டு பாஜக வெல்லும் நிலையில் உள்ளோம் - முருகன்.

பாஜகவில் யார் வேண்டுமானாலும் இணையலாம். மிஸ்டு கால் மூலமும் இணைகின்றனர். குற்றப் பின்னணி உள்ளவர்கள் கட்சியில் இணைவது குறித்த கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் முருகன் பதில்.

* தூத்துக்குடியில் ரவுடி துரைமுத்துவால் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்ரமணியத்தின் குடும்பத்திற்கு ₹ 86.5 லட்சம் நிதி சக காவலர்களால் வழங்கப்பட்டது.

இன்று காவலர் சுப்பிரமணியனின் இல்லத்திற்கு சென்ற தென் மண்டல ஐ.ஜி முருகன், 86.5லட்சம் ரூபாய் தனியார் வங்கியில் வைப்பு நிதி வைக்கப்பட்ட ரசீதை, காவல் துறையினரின் பங்களிப்பாக  மரணமடைந்த காவலரின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

* சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை முடக்கியது, வருமான வரித்துறை- பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை.

2017ஆம் ஆண்டு சசிகலா, உறவினர்களுக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரிதுறை சோதனை நடத்தியது.

ஏற்கனவே ரூ.1600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித் துறையால் முடக்கம்.

* பிரணாப் முகர்ஜியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது
பிரணாப் முகர்ஜியை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் - ராகுல் காந்தி.

* பிரணாப் முகர்ஜி மறைவு - பிரதமர் மோடி இரங்கல்:
பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி நாட்டின் வளர்ச்சியில் நிரந்தரமான தடத்தை பதிவு செய்துள்ளார். தேசத்தின் வளர்ச்சியில் அழிக்க முடியாத முத்திரையை பதித்து சென்றுள்ளார் பிரணாப் முகர்ஜி- பிரதமர் மோடி

* முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்: முதல்வர் பழனிசாமி இரங்கல்.

குடியரசு தலைவர், நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சராக திறம்பட செயலாற்றியவர் பிரணாப் என பழனிசாமி புகழாரம்.

பிரணாப் முகர்ஜியின் மறைவு தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

* பிரணாப் முகர்ஜி மறைவு - ராம்நாத் கோவிந்த் இரங்கல்.
இந்திய தேசம் தனது தகுதியான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்.

* புதுச்சேரியில் இரவு 8 மணி வரை கடைகள் செயல்படு அனுமதி.
செப். 31ம் தேதி வரை பெட்ரோல் பங்குகள், கடைகள், ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட புதுவை அரசு அனுமதி வழங்கி உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப். 14ஆம் தேதி முதல் அக்.1ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

* மக்களவை காலை 9 மணிக்கும், மாநிலங்களவை பிற்பகல் 3 மணிக்கும் கூடுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களிலும் கூட்டத்தொடர் நடைபெறும்.
கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது எனவும் அறிவிப்பு.

* புதுச்சேரியில் இரவு 8 மணி வரை கடைகள் செயல்படு அனுமதி:
செப். 30 ம் தேதி வரை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு.

அத்தியாவசிய கடைகள், மதுபான கடைகள், பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி.

செப்டம்பர் 20ம் தேதி வரை சுபநிகழ்ச்சிகள், துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages