சென்னை, ரவுடிகள் 9 பேருக்கு குண்டாஸ் - Agnipuratchi

சென்னை, ரவுடிகள் 9 பேருக்கு குண்டாஸ்

Share This

சென்னை, ரவுடிகள் 9 பேருக்கு குண்டாஸ்

சென்னை, ரவுடிகள் ஒன்பது பேரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.சென்னை, டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர், தட்சிணாமூர்த்தி, 44. இவர் மீது, மூன்று கொலை உட்பட, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கீழ்ப்பாக்கம், சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர், சதீஷ், 27. இவர் மீது, ஐந்து அடிதடி வழக்குகள் உள்ளன.பூந்தமல்லி, கீழைமா நகரைச் சேர்ந்தவர், சதீஷ், 31. இவர் மீது, கொலை உட்பட, 14 வழக்குகள் உள்ளன. டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர், சுதாகர், 35. இவர் மீது, நான்கு கொலை உட்பட, 19 வழக்குகள் உள்ளன. இவர்கள் உட்பட, ரவுடிகள் ஒன்பது பேரை, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி, போலீசார் நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages