விஜயகாந்த் வீடு முன் தகராறு போதை ஆசாமிக்கு எச்சரிக்கை
விருகம்பாக்கம், விருகம்பாக்கத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து, தகராறில் ஈடுபட்டவரை, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள், 25ம் தேதி, சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது. விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்காக, வெற்றி வேல், 37, என்பவர், நேற்று முன்தினம் இரவு, அங்கு சென்றார்.அப்போது, வெற்றிவேல் குடிபோதையில் இருந்ததால், விஜயகாந்த் வீட்டின் காவலாளி, அவரை தடுத்தி நிறுத்தி, திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினார்.இதனால், கோபம்அடைந்த வெற்றிவேல், விஜயகாந்த் வீட்டிற்கு எதிரே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை, கையால் உடைத்தார். தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார், வெற்றிவேலை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.இதில், வெற்றிவேல், திருவண்ணாமலையைச் சேர்ந்தவர், என்பதும், உடல் நலன் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருவதும் தெரிய வந்தது.இது குறித்து, புகார் அளிக்கப்படாததால், போலீசார், வெற்றிவேலை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.ஔ
No comments:
Post a Comment