நினைவூட்டல் செய்தி: சென்னை ஒருங்கிணைந்த மாவட்டம். பாட்டாளி மக்கள் கட்சி.
மு ஜெயராமன்,
அமைப்புச் செயலாளர்,
அன்புடையீர் வணக்கம்
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட மாநில துணைப் பொதுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் மற்றும் இளைஞர் சங்க,மாணவர் சங்க, இளம் பெண்கள் சங்க,மகளிர் சங்க, தொழிற்சங்க, தேர்தல் பணிக்குழு, வனியர்சங்க, அமைப்பு நிர்வாகிகள் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த மாநில, மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் உங்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் மீண்டும் பணிவான வேண்டுகோள்.
2019 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழினப்போராளி மருத்துவர் அய்யா, இளைஞர்களின் எழுச்சி நாயகர் மாண்புமிகு மருத்துவர் சின்னையா அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நமக்கு இட்ட மிக மிக மிக முக்கியமான கட்சி பணி வாக்குச்சாவடிகள் வாரியாக அன்புமணி தம்பிகள் படை , தங்கைகள் படு, மக்கள் படை ஆகிய முப்படை அமைக்கும் செயல் திட்டமாகும். கிட்டத்தட்ட 14 மாதங்கள் ஓடிவிட்டன.இடையில் கொடிய வைரஸ் கொரோனா பாதிப்பு நம்மை வீட்டுக்கு உள்ளேயே முடக்கி போட்டு விட்டது. நமது பாட்டாளி சொந்தங்கள் பலபேர் பாதிக்கப் பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். பொருளாதார ரீதியாகவும் நாம் பாதிக்கப்பட்டு உள்ளோம். மீண்டும் விரைவில் அனைவரும் அனைத்து பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.
நமது குடும்ப தலைவர் மருத்துவர் அய்யா அவர்களும், மாண்புமிகு மருத்துவர் சின்னய்யா அன்புமணி ராமதாஸ் அவர்களும் மற்றும் மாநிலத் தலைவர் தியாகச் செம்மல் ஜிகே மணி அவர்களும் வடக்கு மண்டல இணைப் பொதுச் செயலாளர் முன்னாள் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சருமான ஏகே மூர்த்தி அவர்களும் நமது நிர்வாகிகளிடம் தொலைபேசி மூலமாகவும், கானொளி மூலமாகவும் நம்மை நலம் விசாரித்தும், நமது குடும்பத்தினர் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறித்தி வருகிறார்கள். நாம் அனைவரும் பாதுகாப்புடன் இருப்போம். குடும்பத்தை காப்போம்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் மருத்துவர் அய்யா அவர்களும் மாண்புமிகு மருத்துவர் சின்னையா அன்புமணி ராமதாஸ் அவர்களும் நமக்கு சொன்ன பணியான அன்புமணி முப்படை செயல்திட்டத்தை மீண்டும் தொடங்கி ஆகவேண்டும். எதற்காகவும் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பில்லை.ஆகவே சென்னை மாவட்டத்திற்குட்பட்ட உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிக்கும் வட்ட வாரியாக அனைத்து வட்டங்களுக்கும் வாக்குச்சாவடி வாரியாக. மாநகராட்சி தேர்தல் வாக்குச்சாவடி எண், சட்டமன்ற தேர்தல் வாக்குச்சாவடி எண், வாக்குச்சாவடிக்கு உட்பட்ட தெருக்கள் விவரம், வாக்குச்சாவடிக்கு உட்பட்ட ஆண்-பெண் இதர வாக்காளர் விபரம், வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம் , வாக்குச்சாவடி வாரியாக அன்புமணி தம்பி தங்கைகள் படைகள் மக்கள் படைகள் அமைத்து அந்த விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டிய படிவங்கள் இவை அனைத்தும் அனைத்து வட்டங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.அந்த விவரங்களை பயன் படுத்தி மீண்டும் அந்த பணியினை தொடங்க ஆவன செய்ய வேண்டும் என்று துணைப் பொதுச் செயலாளர், மற்றும் மாவட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் ஆகியோர்களை கேட்டுக் கொள்கிறேன்.
மேற்கண்ட விவரங்களை தவற விட்ட நிர்வாகிகள் என்னை தொடர்பு கொண்டால் உங்கள் வீட்டில் இருந்த படியே வாக்குச்சாவடி வாரியாக அனைத்து விவரங்களையும் உடனடியாக தெரிந்து கொண்டு அங்கேயே பிரின்டவுட் எடுத்து கொள்ள இணையதள முகவரியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
அன்புடன்
மு ஜெயராமன்,
அமைப்புச் செயலாளர்,
சென்னை ஒருங்கிணைந்த மாவட்டம். பாட்டாளி மக்கள் கட்சி.
No comments:
Post a Comment