விவசாயிகளின் குடும்பத்தில் பெண்களும் படிக்கும் மாணவிகளும் மாடுகள்போல் ஏர் இழுக்கும் வறுமையின் சின்னம்.நெஞ்சை நிலைகுலையச்செய்யவும்,கண்ணீர் வடிக்கச் செய்யும் சோக நிலை - பாமக தலைவர் ஜி.கே.மணி கண்டனம். - Agnipuratchi

விவசாயிகளின் குடும்பத்தில் பெண்களும் படிக்கும் மாணவிகளும் மாடுகள்போல் ஏர் இழுக்கும் வறுமையின் சின்னம்.நெஞ்சை நிலைகுலையச்செய்யவும்,கண்ணீர் வடிக்கச் செய்யும் சோக நிலை - பாமக தலைவர் ஜி.கே.மணி கண்டனம்.

Share This

விவசாயிகளின் குடும்பத்தில் பெண்களும் படிக்கும் மாணவிகளும் மாடுகள்போல் ஏர் இழுக்கும் வறுமையின் சின்னம்.நெஞ்சை நிலைகுலையச்செய்யவும்,கண்ணீர் வடிக்கச் செய்யும் சோக நிலை - பாமக தலைவர் ஜி.கே.மணி  கண்டனம்.          
        
கொரோனா பாதிப்பு காலத்தில் தக்காளி போன்றவற்றை பயிர் செய்து விற்க முடியாமல் நட்டத்திற்கு ஆளான விவசாயி அடுத்து பயிர் செய்ய டிராக்டர் வைத்தோ, ஏர் மாடுகள் வைத்தோ நிலத்தை உழவு செய்ய கூலி கொடுக்க கையில் பணம் இல்லாததால் கல்லூரியில் படிக்கும் தனது இரண்டு மகள்களை மாடுகள்போல் ஏர் இழுக்கச் செய்யும் பரிதாப நிலை. இதேபோல் வேறு ஒரு விவசாயி 6 ஆம் வகுப்பு, 7 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள்களை பள்ளிய விட்டு நிறுத்தி ஏர் இழுக்கச் செய்தும் விவசாய வேலைகளில் ஈடுபடுத்தும் கண்ணீர் சிந்தும் நிலை. சுதந்திரம் பெற்று 73 ஆண்டுள் ஆகியும் 5 ஆண்டுத் திட்டங்கள், புது சட்டங்கள், சட்ட திருத்தங்கள், ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்ந்தும் பெண்கள் ஏர் மாடுகளான நிலை நெஞ்சை தாக்குகிறது. விவசாயிகளின் சோகக் கதை. வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் கொடுமை. விவசாயிகள் நிலம் வைத்திருந்தும் பயிர் செய்தும் மாடாய் உழைத்தும், வியர்வை சிந்தியும் இரக்கக் கண்ணீர் வடிக்கும் சொல்லொணா வறுமையின் சின்னம்.
    
நமது இந்திய நாட்டின் விவசாயிகளின் சோக நிலை தொடர்ந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் சொல்லாணாத் துயர நிலை மாற வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages