வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம். - Agnipuratchi

வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்.

Share This

வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்.

(மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அலுவலகப் பதிவு)

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் மருத்துவர்களாக பதிவு செய்வதற்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை 50  விழுக்காட்டிலிருந்து  30 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு பா.ம.க. இளைஞரணித்  தலைவர்  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் விபரம்:

To

Dr. Harsh Vardhan
Minister for Health and Family Welfare
Government of India

Sub: registration of Foreign Medical Graduates - request to reduce eligibility marks to 30% - in the Foreign Medical Graduates Examination (FMGE) conducted by the National Board of Examinations- regarding

--------------

I am writing this letter to draw your kind attention regarding the decreasing pass percentage in theForeign Medical Graduates Examination (FMGE) conducted by the National Board of Examinations and the need to address this issue that has made the future of thousands Indian students who are studying Medicine in various foreign countries a big question mark.

Large numbers of students from our country are studying undergraduate medical courses (Equivalent of MBBS) in Russia, US, Philippines, Kirgizstan, Ukraine, China, Germany and other countries. Around 52,000 students from India are studying in these countries. Every year around 9,000 to 10,000 students go abroad to join Medical education. After returning to India all except those who have studied in US, United Kingdom, Canada, Australia and New Zealand have to pass the FMGE to make them eligible to register with the various State Medical Councils or the Medical Council of India (MCI).

Around 50,000 medical graduates have completed their education in foreign countries and are awaiting registration in India. Various restrictions and the FMGE, which is deliberately made difficult and nearly impossible to pass, have made their services not available to Indian public. The pass percentage in these examinations is around 16%. 84% of students fail in these examinations. Mathematically, when the pass percentage is more than 50%, over the years the backlog will decrease. When pass percentage is 16% and 84% of students rewrite the examinations the backlog will increase to unmanageable numbers over the years.

The reason for this high failure rates are the very difficult question papers. These graduates who have studied in foreign medical colleges that have good infrastructure are not able to get 50% marks (150 marks out of 300 marks) because the question paper is set in such high standard, much above the ones set for local graduates in their qualifying examinations. There is a demand that the eligibility marks should be reduced to 30%. The representation of these foreign medical graduates presented to the Secretary of the Medical Council of India had been forwarded by him to the Secretary, Ministry of Health and Family Welfare on the 30th June. The Minister of Health, Manipur has also written to the Health Ministry making similar request.

The Corona pandemic has been a huge public health challenge. The World Health Organization has warned that the pandemic may continue for few more years. In this situation it is vital to increase our health manpower, particularly medical personnel to tackle the pandemic. Increasing seats in various Indian medical colleges and training more graduates will take several years. Permitting these fully qualified doctors who have graduated in foreign countries to register with MCI and State Medical Councils and practice in India is a simple, available and practical alternative.

This is the logic behind the Ministry reducing the eligibility marks for admission to undergraduate medical courses under NEET to 30th percentile for general category and 20th percentile for reserved categories as recommended by the Medical Council of India. It is a welcome initiative.

Hence, I submit that following the same model, the eligibility marks for passing the FMGE to be conducted on the 31st of this month may be reduced to 30% to enable thousands of medical graduates languishing for years to register with various medical councils and start providing medical services in our country.

Thanking you,

(Dr. AnbumaniRamadoss)
Former Minister of Health

To

Dr. Harsh Vardhan
Honorable Minister for Health
Ministry of Health and Family Welfare
NirmanBhawan
New Delhi 110011

கடிதத்தின் தமிழாக்கம்:

மாண்புமிகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களுக்கு,
வணக்கம்!

பொருள்: வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் மருத்துவர்களாக பதிவு செய்வதற்கான தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்களை 30% ஆக குறைப்பது & தொடர்பாக

தேசிய தேர்வு வாரியம் நடத்தும், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வுகளில் (திஷீக்ஷீமீவீரீஸீ விமீபீவீநீணீறீ நிக்ஷீணீபீuணீtமீs ணிஜ்ணீனீ - திவிநிணி) தேர்ச்சி பெறும் மருத்துவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், அதை சரி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

இந்தியாவில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் பல்வேறு வெளிநாடுகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். ரஷ்யா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், உக்ரைன், சீனா, ஜெர்மனி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 52,000-க்கும்  கூடுதலான மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். இன்றைய நிலையில், பிற நாடுகளில் மருத்துவம் படித்து இந்தியாவில் மருத்துவ சேவையாற்றுவதற்காக 50,000க்கும் கூடுதலான மருத்துவர்கள் தயாராக உள்ளனர். ஆனால், நடைமுறை எதார்த்தங்களுக்கு சற்றும் பொருந்தி வராத தகுதித் தேர்வும், பிற கட்டுப்பாடுகளும் தான் அவர்களின் சேவைகளை பெறுவதில் தடையாக உள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் மருத்துவர்களாக பணியாற்ற வேண்டும் என்றால், அதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், இத்தேர்வுகள் மிகவும் கடுமையாக இருப்பதால், இந்தத் தேர்வுகளில் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பவர்களில், சராசரியாக 16 விழுக்காட்டினர் மட்டும் தான் தேர்ச்சி பெறுகின்றனர்; மீதமுள்ள 84 விழுக்காட்டினர் இந்தத் தேர்வுகளில் தோல்வியடைகின்றனர்.

வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் தரமான கல்வி வழங்கப்படுகிறது. நிறைவான கட்டமைப்புகளும்  உள்ளன. ஆனாலும், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதித் தேர்வுகளில் 84 விழுக்காட்டினர்  தேர்ச்சி பெற முடியாததற்கு காரணம் தேர்வுகளில் கடைபிடிக்கப்படும் கடுமையான விதிமுறைகள் தான். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வில் 150 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டும் தான் தேர்ச்சி பெற முடியும். ஆனால், அந்த அளவுக்கு மதிப்பெண்களை பெறுவது மிகவும்  சிரமம் என்பதால் தான் தேர்ச்சி மதிப்பெண்ணை 30% ஆக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக மாணவர்கள் அனுப்பிய கோரிக்கை மனுவை மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு இந்திய மருத்துவக் குழுவின் செயலாளர் கடந்த ஜூலை 30&ஆம் தேதி அனுப்பியுள்ளார். மணிப்பூர் சுகாதார அமைச்சரும் இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

உலகத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் பாதிப்புகள் இனிவரும் காலங்களிலும் தொடரக்க்கூடும் என்று  உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அத்தகைய சூழலை சந்திக்க இந்தியாவுக்கு அதிக அளவில் மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். மிக அதிக எண்ணிக்கையில் புதிய மருத்துவர்களை உடனடியாக  உருவாக்குவது சாத்தியமில்லை என்பதால், வெளிநாடுகளில் மருத்துவம் படித்து விட்டு, இந்தியாவில் சேவையாற்ற விரும்பும் மருத்துவர்களை அனுமதிப்பது தான் எளிதான, பயனுள்ள செயலாக  இருக்கும்.

இதே நோக்கத்துடன் தான் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக  மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவக் குழுவின் கோரிக்கையை ஏற்று, தேர்ச்சி மதிப்பெண்களை பொதுப்பிரிவுக்கு 30&ஆவது பெர்சென்டைல், பிற பிரிவுக்கு 20&ஆவது பெர்சென்டைல் என மத்திய சுகாதார அமைச்சகம் குறைத்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். அதேபோல்,  இம்மாதம் 31&ஆம் தேதி நடைபெறவுள்ள  வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை இப்போதுள்ள 50 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாக குறைக்க வேண்டும்; அதன்மூலம், வெளிநாடுகளில் மருத்துவம் படித்த அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள், இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என்று தங்களைக்ம்கேட்டுக் கொள்கிறேன்.

                                     மிக்க நன்றி,

                                   தங்களன்புள்ள,

      (மருத்துவர் அன்புமணி இராமதாஸ்)

பெறுநர்:
திரு. ஹர்ஷவர்தன்,
மாண்புமிகு மத்திய அமைச்சர்,
சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை,
நிர்மாண் பவன், புதுதில்லி - 110011

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages