சீன முகவரி பார்சலில் ஆபத்தான மர்ம விதைகள் : மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட மத்திய அரசு அறிவுறுத்தல்
இந்தியாவின் பல்லுயிர்தன்மைக்கு அச்சுறுத்தலாக அனுப்பப்படும் மர்ம விதை பார்சல் விவகாரத்தில், மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கா, கனடா போன்ற பல்வேறு நாடுகளில் கடந்த சில வாரங்களாக, சீனாவில் இருந்து அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்ட மர்ம பார்சலில் விதைகள் மட்டும் இடம்பெற்று இருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், அந்த மர்ம விதைகள் விவசாயத்தை அழிக்கும் அங்கீகரிக்கப்படாத உயிரி ஆயுதமாகக் கூட இருக்கலாம் என, அமெரிக்காவின் வேளாண் துறை எச்சரித்து இருப்பதை குறிப்பிட்டு மத்திய வேளாண் அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எனவே, மாநில அரசுகள், இந்திய வேளான் கவுன்சில், வேளாண் பல்கலைக்கழகங்கள் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment