சொந்தமாக வாகனம் வாங்க முடியாத சூழ்நிலையில் தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுத்து அரசு வழித்தடத்தில் இயக்கலாம் போக்குவரத்து கழகங்களுக்கு அரசு அனுமதி - Agnipuratchi

சொந்தமாக வாகனம் வாங்க முடியாத சூழ்நிலையில் தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுத்து அரசு வழித்தடத்தில் இயக்கலாம் போக்குவரத்து கழகங்களுக்கு அரசு அனுமதி

Share This

சொந்தமாக வாகனம் வாங்க முடியாத சூழ்நிலையில் தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுத்து அரசு வழித்தடத்தில் இயக்கலாம் போக்குவரத்து கழகங்களுக்கு அரசு அனுமதி

சென்னை, ஆக.9-

சொந்தமாக வாகனம் வாங்க முடியாத சூழ்நிலையில், தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அரசின் வழித்தடங்களில் இயக்கலாம் என்று போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கூடும் சுமைகள்

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேவை நோக்கில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து கழகங்கள் மூலம் அரசுக்கு லாபம் கிடைக்கவில்லை.

மாறாக, செலவு, கடன், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத்தொகை போன்ற சுமைகள்தான் கூடிக்கொண்டே இருக்கின்றன.

வரைவு அறிவிப்பாணை

இந்தநிலையில், தமிழக உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநில போக்குவரத்து கழகம் எந்தவொரு தனியார் வாகனத்திற்கும் வாடகை கட்டணத்தை நிர்ணயித்து அதை வாடகைக்கு எடுத்து இயக்குவதற்கு வழிவகை செய்யும் வகையில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் 288 ஏ என்ற பிரிவை புகுத்துவதற்கு ஏற்ப திருத்தம் கொண்டு வருவதற்கான வரைவு அறிவிப்பாணையை கடந்த ஜனவரி 9-ந் தேதி அரசு வெளியிட்டது.

இதுபோன்ற வாகனங்களுக்கு எஸ்.சி.பி.ஏ. விண்ணப்பத்தின் மூலம் ‘பெர்மிட்‘ வழங்கப்படுகிறது. இதுசம்பந்தமான வரைவு அறிவிப்பாணை கடந்த ஜனவரி 29-ந்தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு இருந்தது.

ஆட்சேபனை இல்லை

இதற்கு எந்தவொரு கருத்தும் ஆட்சேபனையும் பெறப்படவில்லை. எனவே அந்த வரைவு அறிவிப்பாணையை உறுதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக புதிய அறிவிப்பாணையை அரசு வெளியிடுகிறது.

அதுதொடர்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டு வந்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாநில போக்குவரத்து கழகங்களால் தேசிய மயமாக்கப்பட்ட வழித்தடங்களில் சொந்தமாக இயக்குவதற்காக, சொந்தமாக வாகனங்களை வாங்க முடியாத அவசர சூழ்நிலை எழும்போது, அந்த போக்குவரத்து கழகம் எந்தவொரு தனியார் வாகனத்தையும் வாடகை கட்டணத்தில் எடுத்து, ‘பெர்மிட்’ பெற்று இயக்க உரிமை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages