கல்பனா சாவ்லா " விருது பெற்ற பா.ம.கவைச் சேர்ந்த செந்தமிழ்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவல்லி ஆகிய மூன்று வீர மங்கையர்க்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

கல்பனா சாவ்லா " விருது பெற்ற பா.ம.கவைச் சேர்ந்த செந்தமிழ்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவல்லி ஆகிய மூன்று வீர மங்கையர்க்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

"கல்பனா சாவ்லா " விருது பெற்ற பா.ம.கவைச் சேர்ந்த செந்தமிழ்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவல்லி ஆகிய மூன்று வீர மங்கையர்க்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி         
        
15.8.2020  இன்று சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வீரதீர செயலுக்கான "கல்பனா சாவ்லா" விருதும் ரூபாய் 5 இலட்சம் ரொக்கமும் முதலமைச்சர் அவர்களிடம் பெற்ற பா.ம.கவைச் சேர்ந்த பெரம்பலூர் மாவட்டம், ஆதனூர் கிராமம் செந்தமிழ்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவல்லி ஆகிய மூன்று வீர மங்கையர்க்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். சென்னையில் விருது பெற்றபிறகு உடனிருந்த பா.ம.க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தியிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு மூன்று வீராங்கணைகளுக்கும் பா.ம.க சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தேன்.                      
            
சமீபத்தில் பெரம்பலூர் மாவட்டம், கொட்டரை அடுத்து மருதையாற்றில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் குளிக்கச் சென்ற சிறுவாச்சூர் கிராம இளைஞர்கள் ரவி, பயிற்சி மருத்துவர் ரஞ்சித், கார்த்திக், பவித்ரன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி துடித்துக் கொண்டிருந்த சத்தம் கேட்ட அருகில் ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்கள் செந்தமிழ் செல்வி, முத்தம்மாள்,ஆனந்தவல்லி மூவரும் ஓடி துடித்துப்போய் தங்களின் புடவைகளை கயிறாக வீசி பள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருந்த ரவி, கார்த்திக் இவருவரை வீரதீரத்துடன் மீட்டு காப்பாற்றியுள்ளனர். அதற்குள் இருவர் இறந்து விட்டனர்.              
       
இந்த வீரதீரச் செயலை பாராட்டி மூன்று வீரப் பெண்களுக்கும் அரசு விருது வழங்க வேண்டுமென மருத்துவர் அய்யா அவர்கள் அரசுக்கு அறிக்கையின் மூலம் தெரியப்படுத்தினார்கள். இன்று 3 வீர மங்கையரும் அரசின் மூலம் " கல்பனா சாவ்லா " விருதும் ரொக்கம் ரூபாய் 5 இலட்சமும் பெற்றிருப்பது பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages