வீட்டுக்குள் வந்த விருந்தினர் - தேன்சிட்டு - மருத்துவர் இராமதாசு அய்யா
எங்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு விதவிதமான பறவைகள் படையெடுத்து வந்திருப்பதாக கூறியிருந்தேன் அல்லவா? அவற்றில் ஒரு பறவையான தேன்சிட்டு இன்று எனது வீட்டுக்குள் நுழைந்து விட்டது. நான் அமர்ந்திருக்கும் பகுதியில் உள்ள மின்விசிறி உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளையாடி விட்டு வெளியில் சென்றது.
தேன் சிட்டுகளில், ஊதா தேன்சிட்டு (பர்ப்பிள் சன்பேர்டு - Purple Sunbird), ஊதாப்பிட்டத் தேன்சிட்டு (பர்ப்பிள் ரம்ப்டு சன்பேர்டு - Purple-rumped Sunbird), என இரண்டு இனங்கள் உள்ளன. இவை பூக்களில் உள்ள தேனை உறிஞ்சுவதில் ஆர்வம் கொண்டவை என்பதால் இவற்றுக்கு தேன்சிட்டு என்று பெயர்.
ஆண் ஊதாப்பிட்டத் தேன் சிட்டுகள் ஊதா நிறத்திலும், வயிற்றுப் பகுதி மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பெண் பறவை, முழுவதும் மாம்பழ நிறத்தில் இருக்கும்.
No comments:
Post a Comment