அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
* உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.4 கோடியாக உயர்வு.
கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 8.22 லட்சமாக உயர்வு.
கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 1.6 கோடியாக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் ஒரே நாளில் 67,151 பேருக்கு கொரோனா பாதிப்பு’:
இந்தியாவில் ஒரே நாளில் 63,173 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்; மேலும் 1,059 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31,67,323இல் இருந்து 32,34,474 ஆக உயர்வு.
கொரோனா பாதிப்பு - 32,34,474.
கொரோனாவிலிருந்து குணம் - 24.67 லட்சம்.
கொரோனாவால் உயிரிழப்பு - 59,449.
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.84%; குணம்டைந்தோர் விகிதம் 75.92% ஆக உள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்..
* இந்தியாவில் ஒரே நாளில் 8.23 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன:
இந்தியாவில் இதுவரை 3.76 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. - ஐசிஎம்ஆர்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,97,261 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,287 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,29,247 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 118 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 6,839 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,606 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 3,38,060 பேர் குணமடைந்துள்ளனர்.
* காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், சோனியாகாந்தி காணொலி மூலம் இன்று ஆலோசனை:
ஜி.எஸ்.டி. மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து காங். இடைக்காலத்தலைவர் சோனியாகாந்தி ஆலோசிக்க உள்ளார்.
* சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.84.73 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.78.86க்கு விற்பனை.
* சென்னை: டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றிய அமைச்சுப் பணியாளர், கொரோனாவால் உயிரிழப்பு:
சி.பி.சி.ஐ.டி பிரிவு அலுவலக மேலாளர் சந்திரசேகர், கொரோனாவால் உயிரிழப்பு. கடந்த 17ஆம் தேதி முதல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சுவாசக் கோளாறு காரணமாக வென்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
* மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டட விபத்து - உயிரிழப்பு 15 ஆக அதிகரிப்பு':
மகாராஷ்டிரா ராய்காட் மாவட்டம் மஹாத்தியில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 15 ஆக அதிகரிப்பு.
* சுங்கச்சாவடிக் கட்டணத்தை உயர்த்தும் முடிவைக் கைவிட்டு, அடுத்த ஓராண்டிற்காவது சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும். - சீமான் | நாம் தமிழர் கட்சி.
விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டும் என விருப்பப்படுவது தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகளின் உரிமை. அதிமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதாகவே தேமுதிக தெரிவித்துள்ளது. - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
* பொருளாதாரம் சீர்குலைந்ததை மறக்கடிக்க முடியாது. ஊடகங்கள் மூலம் கவனத்தை திசை திருப்புவதன் மூலம் ஏழைகளுக்கு உதவ முடியாது.
- ராகுல் காந்தி விமர்சனம்.
* 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதை பொறுத்தே அவர்களுக்கு தேர்வு நடத்த நடவடிக்கை.
- அமைச்சர் செங்கோட்டையன்.
* ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 16 குறைந்துள்ளது.
ஒரு சவரன் 39 ஆயிரத்து 352 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ 4,919-க்கு விற்பனை.
* நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை - அமைச்சர் செங்கோட்டையன்.
நடப்பாண்டில் தற்போது வரை 2.35 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன்.
கொரோனா தாக்கம் குறைந்ததும், பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் - செங்கோட்டையன்.
* வங்கிக் கடன் தவணை வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்:
மத்திய அரசு சுயமாக முடிவெடுக்க வேண்டும் வணிக நலனில் மட்டும் அக்கறை செலுத்தக்கூடாது - உச்சநீதிமன்றம்.
மக்கள் படும் துன்பங்கள் மீதும் மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும்
வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை செப்டம்பர் 1-க்கு ஒத்திவைப்பு.- உச்சநீதிமன்றம்.
* கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்த வழக்கு:
சுரேந்திரனின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும்.
தமிழக அரசு, சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
* திருச்சியில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,790, கிராம் வெள்ளி ரூ.68.30க்கு விற்பனை; சென்னையை விட திருச்சியில் ஒரு கிராமுக்கு ரூ.200 வரை குறைத்து விற்பனை செய்ய திருச்சி தங்க நகை விற்பனையாளர்கள் முடிவு.
* ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது சரி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
* செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் காவல்நிலைய தலைமைக்காவலர் சதீஷ்குமார் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு. திருப்பதி தொகுதி எம்.எல்.ஏவுக்கு கொரோனா':
* ஆந்திரா: திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ கருணாகர ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரும் வழக்கு - உச்சநீதிமன்ற அறிவுரைபடி நாளை விசாரணை நாளை காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலமாக சபாநாயகர் தனபால் விசாரிக்கிறார்
தகுதி நீக்க கோருவது தொடர்பாக, 11 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டு இருந்த நிலையில் நாளை விசாரணை.
* அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகோய்-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
* ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு 5300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை. நடப்பாண்டில் 6584 சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு.
* கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் நடைமுறையை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேவைப்பட்டால் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்.
கொரோனா உயிரிழப்புகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்.
* நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு:
செப்.13ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு.
ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்!
* டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட 450 பணியாளர்கள் இடமாற்றம்:
450 பேரும் டாஸ்மாக் குடோன்களுக்கு மாற்றப்பட்டனர். சென்னையில் 25 டாஸ்மாக் பணியாளர்கள் இடமாற்றம்.
டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து நேற்று போராட்டம் நடத்தினர்.
* பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் இருவரும் நலமுடன் உள்ளனர்.
- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
* கோவையில் 13 வயது சிறுவனை காவலர் தாக்கிய விவகாரம்:
கோவை மாநகர காவல் ஆணையர் விளக்கம் அளிக்க நோட்டீஸ்.
கோவையில் கடந்த ஞாயிறன்று 13 வயது சிறுவனை சிங்காநல்லூர் காவல் நிலைய காவலர் லத்தியால் தாக்கியதாக புகார்.
காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், கோவை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.
3 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.
* கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்களுக்கு யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி மதிப்பெண்.
உயர்மட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் முதலமைச்சர் அறிவிப்பு.
* கறுப்பர் கூட்டம் யூ டியூப்பைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு நிபந்தனை முன் ஜாமீன்:
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மத்திய குற்றப்பிரிவு முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை.
* ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி ஆய்வை தமிழகத்தில் நடத்த முதல்வர் உத்தரவு:
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி சோதனை நடைபெற உள்ளது.
- முதல்வர் பழனிசாமி.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை யில் தலா 300 பேரிடம் பரிசோதனை.
இந்த தடுப்பூசி வெள்ளை அணுக்களை 14 நாட்களில் மனித உடலில் உருவாக்கும். இந்த வெள்ளை அணுக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கும்.
28 நாட்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கும்.
* தமிழகத்தில் 969 உதவி ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்து தேர்வில் முறைகேடு புகார்:
தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த கோரி டிராபிக் ராமசாமி வழக்கு.
தேர்வு அறைகளில் சிசிடிவிக்கள் பொருத்தப்படவில்லை, செல்போன்கள் பயன்படுத்த அனுமதி அளித்ததாகவும் புகார். தமிழக அரசு, சீருடை பணியாளர் தேர்வாணையம், மற்றும் டி.ஜி.பி. பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
* பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.
பொறியியல் படிப்புகளில் சேர 1,60,834 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பி.இ படிப்புகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்திய 1,31,436 பேருக்கு ரேண்டம் எண் வெளியீடு.
*2ஜி வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை செப்.10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு:
மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.
* நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு புதுச்சேரியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்:
காரைக்காலில் இருந்து புதுச்சேரி மையங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து.
பேருந்து முன்பதிவுக்கு 04368-228801, 227704ல் தொடர்பு கொள்ளாலம்.
- காரைக்கால் மாவட்ட ஆட்சியர்.
*பண மோசடி வழக்கில் இருந்து திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு:
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.2.80 கோடி மோசடி செய்தது தொடர்பான புகாரில் வழக்கு.
*சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.39,224-க்கு விற்பனை:
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ.4,903-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.60 குறைந்து ரூ.69.80க்கு விற்பனை
*காங்கிரஸிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஷகீல் அகமது மீண்டும் கட்சியில் சேர்ப்பு.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை எதிர்த்து பீகாரில் சுயேட்சையாக போட்டியிட்டதால் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
*கொரோனா பரிசோதனை முடிவினை குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் நடைமுறை; சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவனையில் தொடக்கம். - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
* தமிழகத்தில் கல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அரியர்ஸ் தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தால் தேர்ச்சி என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி.
அனைத்து கல்லூரி மாணவர்களும் அரியர் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தியிருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். இறுதி பருவத்தேர்வைத் தவிர பிற செமஸ்டர்களில் தேர்ச்சி அறிக்கப்படும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொறியியல், கலை மற்றும் அறிவியல் மாணவர்கள் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியிருந்தாலே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
*மேற்கு வங்கம் மாநிலத்தில் செப்டம்பர் 20-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.
* நீட், ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும்.
தேர்வு எழுத வருவதற்கு மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.
*தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வு மையங்கள் தயாராக உள்ளன. - தேசிய தேர்வு முகமை இயக்குநர் வினித் ஜோஷி.
*ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புச் சட்டத்தின்கீழ் புகாரை விசாரிக்க அனுமதி வழங்க பின்பற்றப்படும் நடைமுறை என்ன? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி.
அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார் மீது தனிநபர்கள் அனுமதி பெற என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது ?ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஆணையர், தலைமை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
* அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பணி நியமனங்களில் முறைகேடு புகார் - விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனுதாக்கல்.
*ஆயுதப்படை காவலர் தற்கொலை விவகாரம் - இரண்டு எஸ்.ஐ.க்கள் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் - எஸ்பி உத்தரவு
விழுப்புரம்: ஆயுதப்படை குடியிருப்பில்; அண்மையில் ஆயுதப்படை காவலர் ஏழுமலை என்பவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில்; இரண்டு ஆயுதப்படை எஸ்.ஐ.க்கள் மற்றும் காவலர் ஆகிய 3 பேர் பணி இடைநீக்கம் செய்து; விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன் உத்தரவு.
* கொரோனா சூழலை கருத்தில்கொண்டு இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம்.
மருத்துவ படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தவும் வலியுறுத்தல்.
*மத்திய அரசின் முக்கிய, அவசர சட்டங்களை ஆராய்ந்து காங்கிரஸ் நிலைப்பாட்டை உருவாக்க முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு: குழுவில் ப.சிதம்பரம், திக்விஜய் சிங், அமர்சிங், கவுரவ் கோகாய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
*சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியானதை அடுத்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கூடுதல் ஆணையர் அனுமதி.
*நீட் தேர்வை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறாராம் அமைச்சர் விஜயபாஸ்கர்.
ஏமாற்றுவதை விடுத்து செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்.
- மு.க.ஸ்டாலின் ட்வீட்.
No comments:
Post a Comment