நாகப்பட்டினம் மாவட்ட பா.ம.க முன்னாள் செயலாளர், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் நீடூர் ஹாஜி அப்துல் அமீது மறைவுக்கு - பாமக தலைவர் ஜி. கே.மணி ஆழ்ந்த இரங்கல் - Agnipuratchi

நாகப்பட்டினம் மாவட்ட பா.ம.க முன்னாள் செயலாளர், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் நீடூர் ஹாஜி அப்துல் அமீது மறைவுக்கு - பாமக தலைவர் ஜி. கே.மணி ஆழ்ந்த இரங்கல்

Share This

நாகப்பட்டினம் மாவட்ட பா.ம.க முன்னாள் செயலாளர், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் நீடூர் ஹாஜி அப்துல் அமீது மறைவுக்கு  - பாமக தலைவர் ஜி. கே.மணி  ஆழ்ந்த இரங்கல்
        
நீடூர் ஹாஜி அப்துல் அமீது இறப்பு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். அஞ்சலி செலுத்துகின்றோம். ஹாஜி அப்துல் அமீது நாகப்பட்டினம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளராக நீண்ட காலம் செயல்பட்டு வந்தவர். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்தவர். ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பா.ம.க சார்பில் சிறப்பாக பணியாற்றியவர். அவர் உயிர் உள்ள வரை பா.ம.கவின் கொள்கை பிடிப்போடு உறுதியாக செயல்பட்டு வந்த பெருமைக்குரியவர். அவரது இறப்பு பா.ம.கவுக்கும் அவர் குடும்பத்திற்கும் அந்தப் பகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும்.     
         
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மகன்கள் மசூத் அகமது, முகமது உஸ்மான் மற்றும் அவரது தம்பி சசக்கத்துல்லா ஆகியோரிடம் கைப்பேசியில் தொடர்பு கொண்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோம். பா.ம.க சார்பில் துணை பொதுச்செயலாளர் பழனிசாமி, துணைத் தலைவர் தங்க அய்யாசாமி, மாவட்டச் செயலாளர் காமராஜ், குத்தாலம் கணேசன், து.த பாக்கம் சக்திவேல்,விமல் மற்றும் நிர்வாகிகள் நிறைய பேர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages