குவைத்தில் வேலைக்குச் சென்ற இடத்தில் இறந்த பெரம்பலூர் மாவட்டம், கோனேரிப்பாளையம் V. கேசர், அவரது மகன் எஸ். இரகுநாத் இருவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - ஜி. கே. மணி - Agnipuratchi

குவைத்தில் வேலைக்குச் சென்ற இடத்தில் இறந்த பெரம்பலூர் மாவட்டம், கோனேரிப்பாளையம் V. கேசர், அவரது மகன் எஸ். இரகுநாத் இருவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - ஜி. கே. மணி

Share This

குவைத்தில் வேலைக்குச் சென்ற இடத்தில் இறந்த பெரம்பலூர் மாவட்டம், கோனேரிப்பாளையம் V. கேசர், அவரது மகன் எஸ். இரகுநாத் இருவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - ஜி. கே. மணி               
     
பெரம்பலூர் மாவட்டம், கோனேரிப்பாளையம் பா.ம.க குடும்பத்தின் V. சேகர் அவரது மகன் எஸ். இரகுநாத் இருவரும் குவைத் சென்று தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர்கள் இறந்தார்கள் என்ற செய்தியை நேற்று கைபேசியில் தொடர்பு கொண்டு  சொன்னவுடன் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தந்தை மகன் இருவரும் வெளிநாட்டில் இறந்தது மிகவும் வேதனையளிக்கிறது. இருவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களை இழந்து மிகுந்த துயரத்திலும் வேதனையிலும் வாடும் குடும்பத்தினர்க்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.                   
       
நேற்று குவைத்திலிருந்து எனக்கு செய்தி சொன்னவுடன் உடனடியாக பெரம்பலூர் மாவட்ட பா.ம.கவினருக்கு தகவல் கொடுத்து கோனேரிப் பாளையம் கிராமத்தில் அவர்களது குடும்ப உறவினர்களுக்கும் தகவல் கூறினேன். இன்று 13.8.2020 குவைத்திலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு இருவரின் சடலும் வந்தடைந்தது. அங்கு அவர்களது உறவினர் பா.ம.க பெரம்பலூர் வடக்கு ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் தம்பி மனோகரன் சடலங்களை உறவினர் என கையொப்பமிட்டு முறையாக பெற்றுக்கொள்கிறார்.. இன்று சென்னை விமான நிலையத்தில் தம்பி மனோகரனிடமும் கைபேசியில் பேசினேன். இருவரின் சடலங்களும் கோனேரிப்பாளையம் சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. குவைத்தில் வேலை செய்துகொண்டிருந்த, திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம், மேலப்பிடாகை கிராமத்தைச் சேர்ந்த வீரமணி இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.                          

திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம், சீதக்கமங்கலம் அடுத்துள்ள மேலப்பிடாகை கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் மகன் வீரமணி குவைத்தில் வேலை செய்துகொண்டிருந்த இடத்தில் இறந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். தனது மகனை இழந்து வேதனையில் அழுதுகொண்டிருக்கும் தந்தை சாமிநாதன் மற்றும் குடும்பத்தினரிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு தூக்கம் விசாரித்து ஆறுதல் கூறினேன். குவைத்திலிருந்து பா.ம.க பொறுப்பாளர் எனக்கு தகவல் கொடுத்தார். உடல் குவைத்திலிருந்து விமானம் மூலம் கொண்டுவர வெளிநாட்டவர் என்ற முறைப்படி பதிவு செய்து ஏற்பாடு செய்துகொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages