அக்னிப்புரட்சி இன்றைய (04.09.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (04.09.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (04.09.2020) முக்கிய செய்திகள்.

* உலகளவில் கொரோனா தொற்று:
பாதிப்பு எண்ணிக்கை  2.64  கோடியாக அதிகரிப்பு.

குணமடைந்தோர் எண்ணிக்கை  1.86 கோடியாக உயர்வு.

உயிரிழந்தோர் எண்ணிக்கை  8.72 லட்சமாக அதிகரிப்பு.

* இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 83 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39.36 லட்சமாக உயர்வு.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 30.37 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு 8.31 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11.69 லட்சம் மாதிரிகள் பரிசோதனை - இதுவரை 4.66 கோடி மாதிரிகளில் கொரோனா பரிசோதனை.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,51,827 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 992 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,39,720 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 79 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 7,687 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 6,334 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 3,92,507 பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.04-க்கும், டீசல் ரூ.78.71-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* சேலத்தில் நள்ளிரவில் தீ விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு.

சேலம் குரங்குசாவடி பகுதியில் மர ஆலை உரிமையாளர் வீட்டில் நள்ளிரவில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ விபத்தில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் சிக்கினர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கருகி உயிரிழந்தனர்.

கார்த்திக், புஷ்பா, மகேஷ்வரி மற்றும் சிறுவர்களான சர்வேஷ், முகேஷ் ஆகியோர் தீயில் கருகினர். கார்த்திக்கின் சகோதரர் அன்பழகன் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.

* சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 17,937 கன அடியில் இருந்து 21,339 கன அடியாக அதிகரிப்பு:

டெல்டா பாசனத்தேவைக்காக காவிரியில் 9,000 கன அடி, கிழக்கு-மேற்கு கால்வாயில் 700 கன அடி நீர் திறப்பு.

நீர் மட்டம் - 90.36 அடி.
நீர் இருப்பு - 53.06 டிஎம்சி.

* நடப்பு செமஸ்டர் கட்டணம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பை எதிர்த்த வழக்கு இன்று விசாரணை:

இந்திய மாணவர் சங்கத்தின் முறையீட்டை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை இன்று விசாரிக்கிறது.

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியது:

tnhrce.gov.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் அனுமதிச்சீட்டுக்கு முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்யலாம்; முன்பதிவு செய்து அனுமதிச்சீட்டு பெறாத பக்தர்களுக்கு அனுமதியில்லை.

* தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என அறிவிப்பு. டிசம்பர் மாதம் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங் கள் செயல்படும் என அரசு அறிவிப்பு.

* அரும் பணியாற்றுபவர்களுக்கு உளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்’:

வருங்காலத் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு அழிவில்லா கல்விச்செல்வம் தந்து ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சியை போதித்து அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து. - முதல்வர் பழனிசாமி.

* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.39,088க்கு விற்பனை.
கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.4,886க்கு விற்பனை.

* பெங்களூருவில் தமிழ் நடிகை ராகினி திவேதி கைது. போதைப் பொருள் விவகாரத்தில் பெங்களூரு போலீசார் அதிரடி.

* பள்ளி மாணவர்களுக்கு 10 முட்டைகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்: பள்ளிகள் திறக்கும் வரை வழங்குமாறு அரசு உத்தரவு.
பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகளை வழங்க அறிவுறுத்தல்.

* EIA வரைவு அறிக்கை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு:

தமிழ் உள்பட 22 மொழிகளில் EIA வரைவு அறிக்கை வெளியிட உத்தரவிட்டதற்கு எதிராக மேல் முறையீடு.

டெல்லி உயர்நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு மேல்முறையீடு.

* ஐபிஎஸ் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி உரையாடல்:

தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதியுடன் பிரதமர் மோடி உரையாடல்.
கொரோனா காலத்தில் காவல்துறை அதிகாரிகளின் மனிதநேயமிக்க முகம் மக்களின் மனதில் பதிந்துள்ளது - பிரதமர் மோடி.

* தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு: வரும் 28ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார்  பள்ளிகளுக்கு கல்வி செலவுத் தொகை வழங்கவில்லை
என வழக்கு.

* நடப்பு செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசத்தை வரும் 19ஆம் தேதி வரை நீட்டித்தது அண்ணா பல்கலைக்கழகம்.

* பிற்பகல் 1 மணி முதல் விரைவுப்பேருந்து போக்குவரத்துக் கழக பேருந்து முன்பதிவு தொடங்கும்:
தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு.

பேருந்து ஒன்றிற்கு 26 பயணிகளுக்கு மட்டுமே முன்பதிவு. முதல் கட்டமாக 524 பேருந்துகளை இயக்க முடிவு.

* கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடியில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.

பெண்கள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்.
உடல்களை மீட்கும் பணியில் தீணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

* மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் திட்டங்கள் மக்கள் நலனுக்கு விரோதமானவை - திமுக தலைவர் ஸ்டாலின்:

திட்டங்கள், தொழிற்சாலைகளை தி.மு.க. எதிர்க்கவில்லை.
சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வகையில் தொழிற்சாலைகள் இருக்க கூடாது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையானது தனியார் மயமாக்க வழி வகுக்கிறது - ஸ்டாலின்.

* உரிய தகுதி இருந்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கவில்லை என கூறி தாக்கல் செய்த மனு தள்ளுபடி:

தமிழக மாவட்ட நீதிபதிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மனுவில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் ஏற்கத்தக்கவை அல்ல - நீதிபதிகள்.

* ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி பேரறிவாளனுக்கு பரோல் இல்லை:
அவரது தாய் அளித்த மனுவை நிராகரித்து விட்டது, தமிழக அரசு.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் தகவல்.

90 நாட்கள் பரோல் கோரிய வழக்கில் செப்டம்பர் 8ஆம் தேதி உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம்.

தளர்வுகள் இருந்தாலும் நோய் பரவலை தடுக்க மாஸ்க் அணிவது கட்டாயம்: - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

* கடலூர்: காட்டுமன்னார் கோயில் வெடி விபத்து - மேலும் 2 பேர் உயிரிழப்பு:

வெடி விபத்தில் 7 பேர் பலி - மேலும் 2 பேர் கவலைக்கிடம் போலீசார் விசாரணை.

தீபாவளிக்கு தயார் நிலையில் இருந்த வெடி பாக்ஸ்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து.

* வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டை பதிவுகளை நீக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவு.

ஒரு வாக்குச்சாவடியில் 1,500 வாக்காளருக்கு மேல் இடம் பெற்றிருந் தால் புதிய சாவடி உருவாக்க ஆலோசனை. - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தகவல்.
- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

* தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடைவிதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு.
இடைக்கால தடை விதிக்கக்கோரிய திருச்சி அசோகன் மனு தள்ளுபடி.

* அரியர்ஸ் தேர்ச்சியை ஏற்க மறுப்பு?
பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது- அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு முடிவு என தகவல்.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு கடிதம் என தகவல்.
ஏழு லட்சம் பொறியியல் மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல்.

பொறியியில் இறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் அரியர்ஸ் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.

இதனை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு ஏற்க மறுப்பதாக பல்கலை வட்டார தகவல்.

* கடலூர் அருகே காட்டுமன்னார் கோவிலில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி- முதல்வர் பழனிசாமி.

* பீகார் சட்டமன்ற பொதுத்தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 64 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் உரிய நேரத்தில் நடத்தப்படும்- இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

* தமிழகத்திற்கு மேலும் 4 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு:
சென்னையிலிருந்து செங்கோட்டை, கன்னியாகுமரி, மேட்டுப்பாளையத் திற்கு சிறப்பு ரயில்கள்.

திருச்சி - நாகர்கோவில் இடையேயும் சிறப்பு ரயில் அறிவிப்பு. நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது.

* நீட் மற்றும் ஜே இ இ தேர்வுகளை ரத்து செய்ய மறுத்த உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரிய மனுக்கள் தள்ளுபடி.

மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

* அரியர் தேர்ச்சி விவகாரத்தில் அரசின் முடிவில் மாற்றமில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

AICTE எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை என அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.
சூரப்பாவின் கருத்தை, AICTE  கருத்தாக திணிக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல் வந்திருப்பின் அதனை சூரப்பா வெளியிட வேண்டும் என்று அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

* கலை, அறிவியல், பொறியியல் கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து வழக்கு. சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை.
அரியர் தேர்வுகளை தள்ளிவைக்க முடியுமே தவிர ரத்து செய்ய முடியாது என மனு.

* கடலூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு.

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உடன் இணைந்து கொரோனா வார்டு மற்றும் பரிசோதனை மையங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் எந்த இடத்திலும் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் தட்டுப்பாடு கிடையாது - விஜயபாஸ்கர்

* கடலூர் மாவட்டம் குருங்குடியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணமாக தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் - திருமாவளவன், விசிக

* விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சக்கரபாணிக்கு கொரோனா தொற்று உறுதி.

* குருங்குடி கிராம பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர்விபத்தில் 7நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற துயரச்செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். எதிர்பாரா இவ்விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். - ஓ.பன்னீர் செல்வம், துணை முதல்வர்

* ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சீன ராணுவ அமைச்சருடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு:

இந்திய சீன எல்லையில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் இரு அமைச்சர்களும் சந்திப்பு. எல்லைப் பதற்றத்தை தணிப்பது குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்.

* சிபிஎஸ்இ 10 & 12-ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு:

சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 முதல் 28 வரை தேர்வு நடைபெறும்.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 முதல் 29 வரை தேர்வு நடைபெறும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages