அக்னிப்புரட்சி இன்றைய (05.09.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (05.09.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (05.09.2020) முக்கிய செய்திகள்.

* உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.6 கோடியாகும்.

இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 8.78 லட்சமாகும்.

கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 1.8 கோடியாகும்.

* தமிழகத்தில் புதிதாக 5,870 பேருக்கு கொரோனா பாதிப்பு: மொத்த பாதிப்பு 4,57,697ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழப்பு. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 7,748. பேர்

சென்னையில் இன்று 965 பேருக்கு கொரோனா உறுதி - 19 பேர் உயிரிழப்பு.

தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  1,39,720ல் இருந்து 1,40,685 ஆக அதிகரிப்பு.

சென்னையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12,003ல் இருந்து 11,412 ஆக குறைந்தது.

தமிழகத்தில் இன்று மட்டும்  81,793 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 52,12,534 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
குணமடைந்தோர் - 3,98,366
சிகிச்சை பெறுவோர் - 51,583
இதுவரை பரிசோதனைகள் - 52,12,534.

* சென்னையில் பெட்ரோல் விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.85.04 க்கும், டீசல் விலை 13 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.78.58 க்கும் விற்பனை.

* சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது :தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ள நிலையில், அதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

* பிரதமரின் கிசான் உதவி திட்டத்தில் மோசடி தொடர்பாக விசாரணையை துவங்கியது சிபிசிஐடி:

கடலூர் மாவட்டம், விஜய மாநகரத்தில் சிபிசிஐடி ஆய்வாளர் தீபா தலைமையில் போலீசார் விசாரணை.

பிரதமர் கிசான் உதவி திட்டத்தில் விவசாயிகள் அல்லாத பயனாளிகள் சேர்க்கப்பட்டு நிவாரணம் பெற்று கோடிக்கணக்கில் மோசடி என புகார்.

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாத 37 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் ஏற்கனவே முடக்கம்.

* நாடு முழுவதும் எப்போது தியேட்டர்களை திறப்பு என்பது குறித்து வரும் 8ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை:

தியேட்டர் உரிமையாளர்களுடன் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு ஆலோசனை நடத்துகிறது.

* நடிகர் விஜயால் எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்ப முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்.

மீசை வைத்தவர்களெல்லாம் கட்டபொம்மனாகிவிட முடியாது.

செஞ்சிக்கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜாதேசிங்கு ஆகிவிட முடியாது.

நடிகர் விஜயை எம்.ஜி.ஆராக சித்தரித்து ஒட்டிய போஸ்டர் குறித்து அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர்களுக்கு கட்டளையிடும் அதிகாரம் ஹெச்.ராஜாவுக்கு கிடையாது" - அமைச்சர் ஜெயக்குமார்.

* புதிய கல்வி கொள்கை- மாநிலங்களின் ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை:

வரும் 7-ந்தேதி , காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார். பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் என்பதால், ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை நடத்துகிறார்.

* செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணையில் பங்கேற்கும் வழக்கறிஞர்கள் வெள்ளை சட்டையுடன் கழுத்துப்பட்டை மட்டும் அணிந்து ஆஜராக அனுமதி:

கொரோனா பரவல் காரணமாக கோட், கவுன் அணிய விலக்கு அளித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

* காணொலி காட்சி வாயிலாக தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா:
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி வருகிறார்.

இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது.தமிழகத்திலிருந்து திலீப் மற்றும் சரஸ்வதி ஆகிய 2 பேருக்கு 'நல்லாசிரியர் விருது'.

குடியரசுத் தலைவர் மாளிகையில் காணொலி காட்சி வாயிலாக விழா.
சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதிக்கு விருது.

விருது பெறுகிறார் விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப்.

* திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு ஆலோசனை.

திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினருடன் 8ஆம் தேதி  கலந்தாலோசனை.

இந்த கூட்டத்தில் தென்னிந்தியாவில் உள்ள எந்த சங்கத்திற்கோ, தியேட்டர்
உரிமையாளர்களுக்கோ அழைப்பு இல்லை என தகவல்.

* தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை காலை 8 மணிக்கு பதிலாக 7 மணிக்கு இயக்கப்படும் - அமைச்சர் எம்.சி.சம்பத்.

* பிரதமரின் கிசான் உதவித் திட்டத்தில் திருச்சியிலும் முறைகேடு அம்பலம்:
திருச்சியில் மொத்தம் 1.51 லட்சம் விவசாயிகள் பதிவு - ஏப்ரலுக்கு பிறகு மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு.

முறைகேடு குறித்து வேளாண், வருவாய்த்துறை அதிகாரிகள் 15 வட்டங்களில் ஆய்வு.

வெளி மாவட்டத்தினர், விவசாயிகள் அல்லாதோர் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தகவல்.

கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர் உட்பட  பல்வேறு மாவட்டங்களில் முறைகேடு என தகவல்.

* தமிழகத்தில் மெட்ரோ ரயில் கட்டணங்களில் மாற்றங்கள் இருக்காது  - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண் இயக்குநர்:

பயணிகள் உள்நுழையும் போது உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தப்படுத்திய பின்னரே அனுமதி - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண் இயக்குநர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது இல்லை. - அமைச்சர் செங்கோட்டையன்.

வேலையில்லாத தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால் தற்காலிகப் பணி வழங்கப்படும்.

*தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்;

சென்னை கோட்டம் ரயில்வே எஸ்.பி. ஆக தருமபுரி மாவட்ட எஸ்.பி. பி.ராஜன் மாற்றம். தர்மபுரி மாவட்ட எஸ்.பி. ஆக பிரவேஷ் குமார் நியமனம்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த வருண்குமார் சென்னையிலுள்ள காவல் நவீனமய கணினி பிரிவு கண்காணிப்பாளராக நியமனம்.

சென்னையில் உரிமைப் பிரிவு துணை ஆணையராக இருந்த திருநாவுக்கரசு, சட்டம்-ஒழுங்கு உதவி ஐஜியாக நியமனம். தலைமையிட துணை ஆணையராக இருந்த விமலா, சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக நியமனம்.

*மதுரை மாவட்டம் பாப்பனோடையில் ஆதிதிராவிட நலத்துறையினர் வழங்கிய இலவச பட்டா இடத்தை காலி செய்யுமாறு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரிய வழக்கு:

3 வாரத்திற்குள் உரிய ஆவணங்களுடன் மனுதாரர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

4 வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

* ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை நாளை வெளியீடு:
ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

* வரும் 8ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.

கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்.

செப்.8 ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை:
தலைமைச்செயலகத்தில் வரும் 8 ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.

ஊரடங்கில் ஏற்கெனவே தளர்வுகள் அறிவித்த நிலையில் கூடுதல் தளர்வுகள் பற்றி ஆலோசிக்க வாய்ப்பு.

* மருத்துவர்களின் பரிந்துரை இன்றி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம்-மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு.

பரிசோதனை செய்ய விருப்பமுள்ளவர்களும் பயணம் செய்பவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.

* நாடு முழுவதும் செப். 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 80 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் 10ஆம் தேதி முதல் தொடங்கும்- ரயில்வே வாரியம் அறிவிப்பு.

* போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். தேவையான கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றித்தருவார் என்பதால் பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் காமராஜ்.

* நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் இறுதிப்பருவத் தேர்வுகள் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் நடைபெறும் - பல்கலை. பதிவாளர்:

முதுநிலை மற்றும் இளநிலை அறிவியல் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், வணிகவியல் மாணவர்களுக்கு பகல் 2 மணி முதல் 5 மணி வரையிலும் தேர்வு நடைபெறும்.

பயின்ற கல்லூரிக்கு வர இயலாத மாணவர்கள் அருகிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும் தேர்வு எழுதலாம் - பல்கலை. பதிவாளர்.

* மாநில வர்த்தக சீர்திருத்த செயல் திட்டத்திற்கான தரவரிசை பட்டியலை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்:

தொழில் தொடங்குவதற்கான சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து 2 ஆவது முறையாக ஆந்திரா முதலிடம்.

மாநில வர்த்தக சீர்திருத்த செயல் திட்டத்திற்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் தமிழகம் இடம் பெறவில்லை.

* புதுச்சேரியில் நாள்தோறும் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான ஆயத்த வேலைகளை அரசு தொடங்கி உள்ளது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி:

மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் மத்திய அரசு புறக்கணிக்கிறது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

* மத்திய அரசுப்பணிகளில் காலி பணியிடங்களை நிரப்ப கட்டுப்பாடுகளோ அல்லது தடையோ இல்லை - மத்திய நிதி அமைச்சகம்:

பணியாளர் தேர்வாணையம், யு.பி.எஸ்.சி,  ரயில்வே பணியாளர் அமைப்பு ஆகியவற்றின் மூலம் பணியிடங்களை நிரப்பும் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது - மத்திய நிதி அமைச்சகம்.

* சென்னை: திருப்போரூர் கந்தசாமி கோயில் சொத்துகளை பத்திரப் பதிவு செய்யத் தடை: - சென்னை உயர்நீதிமன்றம்.

திருப்போரூர் கந்தசாமி கோயில், ஆளவந்தான் கோயில் ஆகியவற்றிற்கு சொந்தமான ரூ.60 ஆயிரம் கோடி சொத்துக்களை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* தமிழகத்தில் செப்.14ல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதாக பரவி வரும் தகவல் தவறானது:

* அக்.1ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்படுவதாக பரவி வரும் தகவலும் உண்மையல்ல.
- தமிழக அரசு விளக்கம்.

* சென்னையில் நாளை மறுநாள் முதல் புறநகர் ரயில் சேவை இயங்கும் - தெற்கு ரயில்வே:

*சென்னையில் மின்சார ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு.
மாவட்டங்களுக்கிடையே பேருந்துகள், ரயில்கள் போக்குவரத்து துவங்கும் நிலையில் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages