அக்னிப்புரட்சி இன்றைய (07.09.2020 முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (07.09.2020 முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (07.09.2020 முக்கிய செய்திகள்.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,69,256 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 949 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,42,603 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 89 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 7,925 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,930 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 4,10,116 பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னை: சென்ட்ரலில் இருந்து  ஜூன் மாதத்திற்கு பிறகு இன்று காலை 6.10 மணி முதல் ரயில் சேவை தொடக்கம் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு ரயில்கள் இயக்கம்.
பயணிகளுக்கு உடல் வெப்ப சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

* சென்னையில் 5 மாதத்திற்குப் பிறகு மெட்ரோ ரயில் ஓடத்தொடங்கியது.
அமைச்சர் எம்.சி. சம்பத் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
மெட்ரோ ரயிலில் அமைச்சர் எம்.சி சம்பத், அதிகாரிகள் பயணம் செய்கிறார்.

* தமிழகத்தில் வெளியூர் பேருந்து சேவை தொடங்கியது மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கம்:
சென்னையில் இருந்து வெளியூர் களுக்கு 400 பேருந்துகள் இயக்கம்.

* தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்தார்!

ஒப்புதல் அளித்து கண்தான படிவத்தில் கையெழுத்திட்டார் முதலமைச்சர்!
கண்தானத்தை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கை!
கண்தானம் செய்கிறார் கண்தானம் செய்வதாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

தேசிய கண்தான தினம் நாளை கடைபிடிப்பதையொட்டி கண்தானம் செய்வதாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

* அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருந்து கடிதமோ, மின்னஞ்சலோ வரவில்லை அரசின் அறிவிப்பு படி அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும். சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கெளரி தகவல்.

* தமிழகத்தில் மின்னணு துறைக்கான புதிய தொழிற்கொள்கையை வெளியிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி:

முதலீடுகளை ஈர்க்க மின்னணு  நிறுவனங்களுக்கு சலுகை வழங்கும் வகையில் தொழிற்கொள்கை வெளியீடு.

* புதிய கல்விக்கொள்கை; ஆளுநர்கள் மாநாடு தொடக்கம்’:கல்வி கொள்கையில் அரசின் பங்களிப்பு முக்கியமானது - பிரதமர் மோடி உரை:

மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கும் நிலையில், காணொலி மாநாட்டில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்பு.

கல்வி கொள்கையில் பங்கெடுத்துள்ள ஆசிரியர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்றனர்.

கொள்கை வகிப்பதில் கல்வியாளர்கள் கருத்து கூற பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கல்வி கொள்கையை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தேசிய கல்வி கொள்கை வடிவத்தை முடிவு செய்து நாம் முன்னேறி செல்ல வேண்டும்.

கல்வி கொள்கை தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

புதிய கல்விக்கொள்கை  மாணவர்களின் திறனையும், அறிவையும் வளர்க்கும்.

புதிய கல்விக்கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.

* கொரோனா சிகிச்சை - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு:

விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம்.

கொரோனா நோயாளிகளுக்கான முறையான சிகிச்சை. இறந்துபோன கொரோனா நோயாளிகளின்
உடல்களை கண்ணியமாக கையாளுதல்.

கொரோனாவால் இறந்தவர்களின் அடக்கம் செய்தல் தொடர்பாக விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு.

* ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் வழக்கு : அயினாவரம் இஸ்பெக்டர் நடராஜன், எஸ்ஐ யுவராஜ் மற்றும் காவலர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்.

* பள்ளி சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரிப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலம்

2019-ம் ஆண்டு 2,410 சம்பவங்கள் நடந்துள்ளன- 
2018ம் ஆண்டு 2,052 குற்ற சம்பவங்கள் பதிவு.

2006ம் ஆண்டு முதல் படிப்படியாக பாலியல் குற்ற சம்பவங்கள்
அதிகரிப்பு.

* தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.

* குட்கா விவகாரம் - உரிமைக் குழு கூட்டம்:

குட்கா விவகாரம் தொடர்பாக பேரவை உரிமைக் குழு கூட்டம். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
தலைமையில் நடைபெற்று வருகிறது.

* உடுமலை சங்கர் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு:

தமிழக அரசு, சங்கரின் சகோதரர் விக்னேஸ்வரன், கவுசல்யாவின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை.

மனுக்கள் மீது பதிலளிக்க கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 10 எதிர்மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

* ராணி வேலு நாச்சியார் குறித்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் கட்டுரை!

https://m.facebook.com/story.php?story_fbid=769758153592100&id=167328870501701

💥US Open Tournament defaulted Top player Novak Djokovic from 2020 US Open

* ஒடிசா கலாம் தீவில் நடைபெற்ற ஹைப்பர் சோனிக் அதிவேக விமான சோதனை வெற்றி: டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து.

* கோவையில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா  ரூ.1 லட்சம் நிதியுதவி - முதல்வர் பழனிசாமி.

* சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதால் கூடுதலாக தண்ணீர் சப்ளை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* ஈமு கோழி மோசடி வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது கோவை நீதிமன்றம்:

* ஜே.பி.ஆர். நிறுவன இயக்குநர்கள் பத்மநாபன், ராஜசேகர், ஜெயக்குமாருக்கு தலா 3 ஆண்டு சிறை.

* தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு.

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் பட்டியலை தாக்கல் செய்ய  நீதிமன்றம் உத்தரவு.

* இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - மத்திய கல்வி அமைச்சருக்கு, தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் கடிதம்.

எதிர்காலத்திலும் இருமொழி கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்கும் - அமைச்சர்.

நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்றும் கருத்து.

* மின்னணு உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலீட்டு தொகையில் 30% வரை மூலதன மானியம் பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க நிலம் வாங்கும் செலவில் 50% மானியம் - தமிழக அரசு.

C பிரிவு மாவட்டங்களில் எல்காட், சிட்கோ, சிப்காட் நிலங்களுக்கு 100% முத்திரை தாள் கட்டண சலுகை - தமிழக அரசு.

வன்பொருள் நிறுவனம் உற்பத்தியை தொடங்கியதில் இருந்து 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி கிடையாது - தமிழக அரசு.

முதலில் பணியில் சேரும் பெண் தொழிலாளர்களுக்கு பயிற்சி மானியமாக ரூ 6,000 வீதம் 6 மாதங்களுக்கு வழங்கப்படும் - தமிழக அரசு.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இடிபி, அறிவுசார் மூலதனம் மற்றும் தரச்சான்றிதழ் மானியம் உள்ளிட்ட மானியங்கள் வழங்கப்படும் - தமிழக அரசு.

* பாடகர் எஸ்.பி.பி.க்கு தற்போது கொரோனா தொற்று இல்லை - மகன் சரண்.

ஐபேடில், கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை பார்த்து வருகிறார், எஸ்.பி.பி.

எஸ்.பி.பி., தான் பேச நினைப்பதை எழுதி காண்பிக்கிறார் - மகன் சரண் தகவல். நுரையீரல் தொற்று குணமடைந்துவருகிறது, பிசியோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு;

சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் குற்றச்சாட்டு.

மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரிய தலைவருக்கு கடிதம்.

“இந்தி தெரியாத தனக்கு இந்தி பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கியதில் துளியும் விருப்பமில்லை"

“இந்தி பிரிவில் உள்ள 3 அதிகாரிகளும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், இந்தி தெரியாது"

“அலுவல் கடிதங்களும், குறிப்புகளும் இந்தியில் இருப்பதால் புரியாமல் கையெழுத்திடும் நிலை"

* பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு - திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாத 1,600 பேரின் வங்கிக்கணக்குகள் முடக்கம்:

திருவாரூர் மாவட்ட வேளாண் இயக்குநர் சிவக்குமார் தலைமையில் விசாரணை குழு அமைப்பு.

* நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கின் தடயவியல் நிபுணர்கள் குழு, சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் தடயங்களை ஆய்வு செய்யும்:
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தகவல்.

* விளம்பரம் தேட நான் நடிகன் அல்ல; விவசாயி. - முதல்வர் பழனிசாமி.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கொரோனா பணிகளுக்கு 37 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை

நகரின் ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் பரிசீலனையில் இருக்கிறது.

கிசான் திட்டத்தில் மத்திய அரசின் சலுகைகளில் சில முறைகேடு நடைபெற்றுள்ளது; முறைகேடுகளை கண்டறிய குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.  - முதல்வர் பழனிசாமி.

* குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவதற்காக; மதிய உணவுத் திட்டத்தில் பாலை சேர்க்கலாம்.
- குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.

* கண்களை ஒருவருக்கு பரிசளிப்பது இப்பிரஞ்சத்தையே பரிசளிப்பதற்கு ஒப்பாகும். - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

* ஹைபர்சோனிக் என்ஜின் சோதனை வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து:

நமது விஞ்ஞானிகள் உருவாக்கிய ஸ்கிராம்ஜெட் என்ஜின் ஒலியை விட ஆறு மடங்கு வேகத்தில் இயங்கியது; மிகச் சில நாடுகளே இத்தகைய திறனை பெற்றுள்ளது.

ஹைபர்சோனிக் என்ஜின் சோதனை வெற்றி பெற்றதை அடுத்து;
- டி.ஆர்.டி.ஓ.வுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages