சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
11. மாதவி மேலும் தொடர்ந்து காதல் நோய்
கொண்டு வருந்துதல் போன்று பாடுதல்
ஆங்ஙனம் பாடிய ஆயிழை பின்னரும்
காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசை எழிஇப்
பாங்கினில் பாடி ஓர் பண்ணும் பெயர்த்தாள்.
பிரிவுத்துன்பத்தை உரைத்தல்.
நுளையர் விளரி நொடி தரும் தீம்பாலை
இளி கிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை!
இளி கிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
கொளை வல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை
பிரிந்தார் பரிந்துரைத்த பேரருளின் நீழல்
இருந்து ஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை!
உயிர்ப் புறத்தாய் நீ ஆகில் உள்ஆற்றா வேந்தன்
எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை!
பையுள் நோய்கூர பகல்செய்வான் போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை!
மாலை நீ ஆயின்மணந்தார் அவர்ஆயின்
ஞாலமோ நல்கூர்ந்தது வாழி மாலை!
தீத் துழைஇ வந்த இச்செல்லல் மருள்மாலை!
தூக்காது துணிந்த இத்துயர் எஞ்சுகிளவியால்
பூக்கமழ் கானலில் பொய்ச்சூள் பொறுக்க என்று '
மாக்கடல் தெய்வம் நின்மலரடி வணங்குதும்.
தெளிவுரை:
இவ்வாறு பாடிய மாதவி மேலும் தொடர்ந்து தன்னுடைய
காந்தள் மலர் போலும் மென்மையான விரல்களால் யாழை இசைத்துக்கைக்
இளை சேர்குரல் கொண்டு, இனிய இசையேவும்!
செவ்வழிப்பாலை என்னும் பண்ணில் பாடுதலாளாள்.
குறிப்பு:
இங்குக் கைக்களை என்பது இசைவழியில் காந்தாரப் பண்ணை
உணர்த்தியதாம். ஆயினும் இணை வகையில் இஃது ஒருதலைக்
காமத்தினை உணர்த்தும் நிலையில் கோவலன் மற்றும் மாதவி '
ஆகிய இருவருள் வேற்றுமை கொள்ளுதற்கும் உரித்தாயிற்று என்க.
மாலைப்பொழுதே! கடலில் தொழில்புரியும் வலைஞர்கள்.
பாடும் விளரிப்பாலை இரங்கல் பண்ணென விளங்க இளியானது
கைக்கிளையில் கூடுமாறு செய்தால் என்னுயிரையும் கொண்டு செல்க!
மாலைப்பொழுதே! என்னைப்பிரிந்து சென்ற தலைவர் கூறிய
அன்பு மொழிகளை நினைக்கச் செய்து என்னைச் சூழ்ந்து வருத்துகின்றாய்.
கோட்டைக்குள் பதுங்கியுள்ள அரசனோடு போரிடுவதற்கு
முற்றுகையிடும் பகையரசன் போன்றுள்ளனையே!
மயங்கச் செய்யும் மாலைப்பொழுதே! சூரியனும் மறைந்து
தலைவன் பிரிந்து சென்றதால் என்காதல் நோயும் மிகுதியாக நீ
இங்கு வந்தனை. இனி இவ்வுலகமும் துன்பத்தில் ஆழ்ந்து
வருந்துமாறு வழி வகுத்தனையே!
நெருப்பைப்போன்று துன்பம்தரும்மாலைப்பொழுதே!
தலைவர் சொன்ன மொழிகளை நம்பி மணம் பெறுவோம் என்று
மகிழ்ந்திருக்க அவர்தம்முடைய வாக்குறுதியை மீறிவிட்டார்,
பிரியேன்என்று கூறிய தலைவர்பிரிந்து சென்றார். கடல்
தெய்வமே! பொய்கூறிய தலைவரைப்பொறுத்தருள்க
No comments:
Post a Comment