அக்னிப்புரட்சி இன்றைய (09.09.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (09.09.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (09.09.2020) முக்கிய செய்திகள்.

* உலகளவில் 2.77 கோடி பேருக்கு கொரோனா:

உலகளவில் கொரோனா பாதிப்பு 2.77 கோடியாக உயர்வு.

கொரோனாவால் உயிரிழப்பு 9 லட்சமாக அதிகரிப்பு.

கொரோனாவிலிருந்து குணம் 1.98 கோடியாக அதிகரிப்பு.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,80,524 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 993 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,44,595 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 78 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 8,090 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 6,516 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 4,23,231 பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னையில் விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.04, ஒரு லிட்டர் டீசல் ரூ.78.48க்கும் விற்பனை

* பணம் வைத்து சூதாடியதாக அமமுக பிரமுகர் கைது’ கிருஷ்ணகிரி: ஓசூர் பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக அமமுக பிரமுகர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேர் கைது.
அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேரிடம் இருந்து ரூ.74,610 பறிமுதல் செய்தனர்.

* கடலூர் காட்டுமன்னார்கோவில் அருகே, கடந்த 4-ம் தேதி நிகழ்ந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு.

ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனிதா(22) என்பவர் உயிரிழப்பு.

* ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக மருந்து நிறுவனம் அறிவிப்பு.

சோதனையில் பங்கேற்றவருக்கு கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டதால் தடுப்பூசி சோதனை நிறுத்தம்.

சோதனையில் பங்கேற்றவருக்கு விளக்க முடியா பக்க விளைவு ஏற்பட்டுள்ளது - ஆஸ்ட்ராசெனெகா.

ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

* நாமக்கல் பண்ணை முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் உயர்ந்து ரூ.4.45-ஆக நிர்ணயம்

* லடாக் எல்லையில் கத்தி- கம்புகளுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சீன ராணுவ வீரர்கள்

* மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம்.கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை- அமைச்சர் செங்கோட்டையன்.
5 நாட்களிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக் லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.

* ஆன்லைன் வகுப்புக்கு தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு: ஆன்லைன் வகுப்பு நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும்.

மாவட்ட தலைமையகத்தில் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வு தீர்ப்பு.

* செப். 13-ல் நடைபெற உள்ள நீட் தேர்வை தள்ளி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு:

நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரி 20 மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் அதிரடி. ரிட் மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

யூஜிசி வழிகாட்டுதல் நெறிமுறைகள் நீட் தேர்வுக்கு பொருத்த முடியாது- உச்சநீதிமன்றம்.

*:தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

சேலம், நாமக்கல், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.

* தமிழக காவல்துறைக்கு உலக அரங்கில் சிறப்பான பெயர் உள்ளது.

நல்ல பெயருக்கு களங்கம் வர அனுமதிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து.

கொலை வழக்கில் விசாரணையின்போது உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து. விசாரணை நியாயமாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடைபெற வேண்டும்- நீதிமன்றம்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகமாகவும் உள்ளது- நீதிமன்றம்.

* நீட் தேர்வுக்கு தயாரான மாணவன்,  கிணற்றில் குதித்து தற்கொலை:
அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியை சேர்ந்த மாணவன், மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தற்கொலை என தகவல். ஞாயிறன்று நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் விக்னேஷ் விபரீத முடிவு.

* பயணிகள் கோரிக்கையை ஏற்று இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு.

நாளை முதல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பயணிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் - மெட்ரோ நிர்வாகம்.

* முல்லை பெரியாறு அணை வழக்கில் இருந்து விலகிக் கொள்கிறேன் -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அறிவிப்பு.

“அணை மேற்பார்வை குழுவால் ஏற்படுத்தப்பட்ட  துணைக்குழுவை கலைக்க கோரிய மனு மீதான விசாரணைகளில் இருந்து விலகுகிறேன்”

“தனது சகோதரர் இந்த வழக்கில் வழக்கறிஞராக ஆஜராகி இருப்பதால் விலகிக் கொள்கிறேன்"- எஸ்.ஏ.போப்டே.

இந்த மனுவை நீதிபதி ஆர்.எஃப். நரிமன் தலைமையிலான அமர்வு விசாரிக்கும்- எஸ்.ஏ.போப்டே.

* தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான முன் ஜாமின் வழக்கில் வருத்தம் தெரிவித்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொள்கிறோம்"- சென்னை உயர் நீதிமன்றத்தில், காவல்துறை தரப்பில் விளக்கம்.

எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் வழக்கு வரும் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு - அதுவரை அவரை கைது செய்யக்கூடாது- உயர்நீதிமன்றம்.

* இலங்கையில் தங்கம் மீதான 15% வரியை ரத்து செய்து அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு.
இதனால் தங்கம் விலையை சவரனுக்கு ரூ.15,000 வரை குறைக்க வேண்டிய நிலைக்கு தங்க விற்பனையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

* அரியர் தேர்வு தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப குழுமத்திற்கு எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன். அரியர் தேர்வுகளை நடத்த அரசு தயாராக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அமைச்சர் விளக்கம்.

* ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்கான வசதிகள் மாணவர்களிடம் உள்ளதா என்பது குறித்து கல்வி நிறுவனங்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
அரசுப்பள்ளிகள் வகுப்புகளை சமூக நலக் கூடங்களில் நடத்தலாம் - சென்னை உயர்நீதிமன்றம்.

* விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.836 கோடி மதிப்பிலான 398 புதிய திட்டப்பணி களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.

102 கோடி மதிப்பில் முடிவுற்ற 1508 திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

6,427 பயனாளிகளுக்கு ரூ.15.94 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

* தேர்வு எழுதாமல் எப்படி தேர்ச்சி அடைய வைக்க முடியும்?"
அகில இந்திய தொழில்நுட்ப குழு தலைவர் அனில் சகஸ்ரபூதே கேள்வி.

அரியர் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்த அதிரடி.

* நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை தொடர்கிறது, இன்று மனஉளைச்சலால் அரியலூரில் மாணவர் விக்னேஷ் என்பவர் தற்கொலை செய்துகொண்டதை குறிப்பிட்டுள்ளார்.

*மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்:
நீட் பலிபீடத்தில் மேலும் ஓர் உயிரை இழந்திருக்கிறோம்.

நீட் தேர்வுக்கு தயாரான அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியைச் சேர்ந்த மாணவன், விக்னேஷ் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கிடைத்துள்ள தகவல் மனவேதனையை ஏற்படுத்துகிறது

இன்னும் எத்தனை உயிர்களை இழக்க வேண்டும்? இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்?

இந்த நேரத்தில் மாணவச் செல்வங்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள். எத்தகைய சோதனைகளையும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக எதிர்கொள்ளுங்கள். தற்கொலை எண்ணத்தை விடுங்கள் - மு.க.ஸ்டாலின்.

அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் தெளிவில்லாத நிலை ஏற்பட்டுள்ளது - திமுக தலைவர் ஸ்டாலின்.

* உயர்கல்வித்துறை அமைச்சரும், மற்றவர்களும் முரண்பாடான கருத்தைத் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்கி விட வேண்டாம்.
மாணவர்களின் வேலைவாய்ப்புக்குரிய தேர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும்.
அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்.

* ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்தி வெருவித் தடுப்பு மருந்து ஆய்வில் பின்னடைவு. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தன்னார்வலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதால் மூன்றாம் கட்ட ஆய்வு நிறுத்தம்

* நடிகர் கங்கனா ரணாவத்தை பழிக்கு பழி வாங்கிய மும்பை மாநகராட்சி!
மராட்டிய சிவ சேனா அரசுக்கும் திரைப்பட நடிகர் கங்கனா ரணாவத்துக்கும் நாளுக்கு நாள் மோதல் முற்றிய நிலையில் திடீரென சில காரணங்களை முன்வைத்து கங்கனாவின் மும்பை அலுவலகத்தை இடித்து சேதப்படுத்தியது  வகிக்கும் மும்பை மாநகராட்சி.
மும்பை மாநகராட்சிக்கு பம்பாய் உயர்நீதிமன்றம் குட்டு!

* பொறியியல் படிப்புகளுக்கான நிலுவைத் தேர்வை நீக்கம் செய்திருக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது - அனில் சகஸ்ரபுதே, AICTE தலைவர் பேட்டி

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages