திமுக பொதுக்குழுவில் இன்னும் 8 மாதத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு - Agnipuratchi

திமுக பொதுக்குழுவில் இன்னும் 8 மாதத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

Share This

திமுக பொதுக்குழுவில் இன்னும் 8 மாதத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் காணொலி காட்சி மூலம் 3500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மு.க ஸ்டாலின் .

திமுக துணைப் பொதுச்செயலாளர் களாக ஆ.ராசா, பொன்முடி தேர்வு.
பொதுக்குழுவில் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு.

திமுக பொதுக்குழுவில் 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்:

மறைந்த திமுக நிர்வாகிகள் 140 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்.

தீர்மானங்களை திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வாசித்து வருகிறார்.

கொரோனாவின் போது சிறப்பாக செயல்பட்ட திமுக தலைவர், நிர்வாகிகள், தன்னார்வலர்களுக்கு வாழ்த்து.

104 முறை காணொலி காட்சி வாயிலாக ஸ்டாலின் பேசி செயல்பட்டதற்கு வாழ்த்து.

அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததற்கு நன்றி.

புதிய கல்வி கொள்கைக்கு கண்டனம்.

அதிமுக ஊழலுக்கு பாதுகாவலராக இருக்கும் மத்திய அரசுக்கு கண்டனம்

கொரோனா விவகாரத்தில் தமிழக அரசுக்கு கண்டனம்.

திமுக தலைவர் முதல்வராக 2021ல் ஆட்சி அமைத்திட சூளுரை உட்பட 12 தீர்மானம் நிறைவேற்றம்.

திமுக பொதுக்குழு - ஸ்டாலின்
8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

கருணாநிதியை நினைவு கூர்ந்து பொதுக்குழுவில் ஸ்டாலின் உருக்கம்.

துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் திடீரென உயரத்தை எட்டவில்லை.

அண்ணா வகித்த பொதுச்செயலாளர் பதவியை துரைமுருகன் ஏற்றுள்ளார் - திமுக தலைவர் ஸ்டாலின்.

முரசே முழங்கு நாடகம் நடத்த காட்பாடி சென்றேன்.

9 முறை சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட சூப்பர் ஸ்டார் துரைமுருகன். பல்வேறு பதவிகளை வகித்து, மக்கள் தொண்டாற்றியவர் துரைமுருகன்.

50 ஆண்டுகளாக திமுகவில் ஒளி பாய்ச்சி வரும் மின்னல் துரைமுருகன்.

திமுகவுக்கு கிடைத்த போர் வாள் டி.ஆர்.பாலு. 17 வயதில் திமுகவில் சேர்ந்தவர் டி.ஆர்.பாலு.

கருணாநிதிக்கு கார் ஓட்டிய காரணத்திற்காக கைது செய்யப்பட்டவர் டி.ஆர்.பாலு.

தேசிய முன்னணி தொடக்க விழாவின் போது, சிறப்பாக பணியாற்றியவர் டி.ஆர்.பாலு. கருணாநிதிக்காக உயிரை கொடுக்க கூட தயாராக இருந்தவர் டி.ஆர்.பாலு.

மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக இருந்து, 3 முறை அமைச்சராக இருந்தவர் - ஸ்டாலின்.

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி.

துணை பொதுச்செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆ.ராசா, பொன்முடி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages