அக்னிப்புரட்சி இன்றைய (10.09.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (10.09.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (10.09.2020) முக்கிய செய்திகள்.

* உலகளவில் 2.80 கோடி பேருக்கு கொரோனா:

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 கோடியாக அதிகரிப்பு.

கொரோனாவால் உயிரிழப்பு 9.07 லட்சமாக அதிகரிப்பு.

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் 2 கோடியாக உயர்வு.

* இந்தியாவில் 44.65 லட்சம் பேருக்கு கொரோனா நாடு முழுவதும் 44,65,863 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் 75,062 பேர் உயிரிழப்பு.

கொரோனாவிலிருந்து 34.71 லட்சம் பேர் குணம்.

* தமிழகத்தில் புதிதாக 5,528 பேருக்கு கொரோனா பாதிப்பு: தமிழக சுகாதார துறை தகவல். மொத்த பாதிப்பு 4,86,052 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழப்பு. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 8,154.

சென்னையில் மேலும் 991 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பாதிப்பு எண்ணிக்கை 1,44,580 லிருந்து 1,45,606 ஆக அதிகரிப்பு. - சுகாதாரத்துறை.

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 6,185 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.

குணமடைந்தோர் எண்ணிக்கை 4,23,231 லிருந்து 4,29,416 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 85,473 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 56,30,323 கொரோனா மாதிரிகள் பரிசோதனை. - சுகாதாரத்துறை.

*கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை சென்னையில் இன்னும் தொடங்கவில்லை:

கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்தாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்.

* சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 8 காசுகள் குறைந்து ரூ.84.96க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 10 காசுகள் குறைந்து ரூ.78.38க்கும் விற்பனை.

* இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை.சென்னையில் இன்று முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஏற்கெனவே காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் நிலையில் கூடுதலாக ஒரு மணி நேரம் சேவை.

* ஹரியானா: பிரான்சின் 5 ரஃபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் இணைப்பு.

லடாக்கில் சீனா அத்துமீற முயற்சிக்கும் நிலையில் விமானப்படைக்கு வலுசேர்க்க ரஃபேல்  விமானங்கள் சேர்ப்பு.

அம்பாலா விமானப்படை தளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில்  ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார்.

* அரையிறுதிக்கு முன்னேறினார் செரீனா: அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.

காலிறுதியில் செரீனா வில்லியம்ஸ் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பல்கேரியாவின் பிரான்கோவாவை வீழ்த்தினார்.

* டிரம்ப் புது குண்டு; ரஷ்யா, சீனா ஷாக்.
அணு ஆயுதம் ஒன்றை உருவாக்கியுள்ளேன். இதற்கு முன்னர் இந்த நாட்டில் யாரும் இல்லாத ஆயுத அமைப்பு.-டிரம்ப்.

ரஷிய அதிபர்புதின் மற்றும் சீன அதிபர் ஜி அவர்கள் கூட இதற்கு முன்னர் கேள்விப்படாத "பொருள்" அமெரிக்காவில் உள்ளது. எங்களிடம் இருப்பது நம்பமுடியாதது-டிரம்ப்.

அந்த ஆயுதம் பிப்ரவரி 2018 இல் அமெரிக்க அணு ஆயுதக் களஞ்சியத்துடன் சேர்க்கப்பட்டது. மேலும் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுகளை விட அதிக ஆற்றலை கொண்டது-டிரம்ப்.

* 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு என சி.பி.எஸ்.இ. முடிவு.

சி.பி.எஸ்.இ.யின் முடிவை ரத்து செய்யக்கோரிய வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக அரசின் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும்.

கூடுதல் மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் அரசு பள்ளியில் உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன்.

* நான் என்றைக்கும் திமுக காரன் தான்- பொறுப்புகள் அதிகமாகி உள்ளது - திமுக பொதுச்செயலாளர்  துரைமுருகன்.

கட்சியில் இதுவரை வகுத்த பொறுப்பை வைத்து புதிய பதவியை சிறப்பாக செய்வேன் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

கருணாநிதி வழியில் எனது செயல்பாடு இருக்கும் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

தலைவருக்கு உறுதுணையாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் -திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

கொரோனா குறித்து முன்பே எச்சரித்து இருந்தேன் - அரசு கேட்கவில்லை - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

* ஆகஸ்ட் 31 வரை கடன் தொகை செலுத்தாதவர்களை வாராக்கடன் பட்டியலில் சேர்ப்பதற்கான தடை தொடரும். - உச்சநீதிமன்றம்.

இஎம்ஐ வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம் .

* ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு.

ஒரு சவரன் 39 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை.

ஒரு கிராம் தங்கம் ரூ.4,925-க்கு விற்பனை.

* அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தில் மாணவர் விக்னேஷ் மரணத்திற்கு முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல்:

மாணவரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்- முதலமைச்சர்.

மாணவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்- முதலமைச்சர் உறுதி.

மாணவர்கள் இதுபோன்ற விபரீத முடிவை எடுப்பது வேதனையளிக்கிறது - முதலமைச்சர்

* அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழைக்கும்.

ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.

* அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியில் விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாமகவினர் எதிர்ப்பு.

மாலை அணிவிக்க விடாமல் தடுத்து உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றதால் திமுகவினர்-பாமகவினர் இடையே கடும் வாக்குவாதம்.

உடல் எடுத்துச் செல்லப்பட்ட பின்பு விக்னேஷ் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் உதயநிதி.

மாணவர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையை திமுக சார்பாக வழங்கினார்.

தலைமையில் இருந்து உத்தரவு வரும் வரை போஸ்டர் அடிக்க வேண்டாம்; தன்னிச்சையாக செயல்பட வேண்டாம்- ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு தலைமை நிர்வாகி உத்தரவு.

* வேலூர், மதுரை, ராமநாதபுரம், கோவை மாவட்டங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த நிலையில் அறிவுறுத்தல்.

மெரினா கடற்கரையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்- தேசிய பசுமை தீர்ப்பாயம்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தல்.

* கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்.

வியாபாரிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

அங்காடி திறக்காததால் 700க்கும் மேற்பட்ட வணிகர்கள் பாதிப்பு- மனுவில் புகார்.

* காணொலி மூலம் பிரதமர் மோடி நாளை காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார்:

புதிய கல்விக்கொள்கை தொடர்பான நிகழ்ச்சியில் ‘21ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி’ என்ற தலைப்பில் காணொலி மூலம் பிரதமர் மோடி நாளை காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார்.

* புதுக்கோட்டை: திருமயம் அருகே சந்தனவிடுதி கிராமத்தில் பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி.

மரக்கன்றுகள் நடுவதற்காக தோண்டிய பள்ளத்தில் தேங்கிய நீரில் தவறி விழுந்து விமல் (10), அன்பு (8) உயிரிழப்பு.

நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

மாணவர்கள் விரோதப்போக்கில் மத்திய அரசு செயல்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு.

மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலையை நீட் தேர்வு உருவாக்கியுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்து செண்டாக் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

* 2ஜி வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை செப்.21க்கு ஒத்திவைப்பு.

2ஜி வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரும் வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை.

* தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20ஆம் தேதி வெளியீடு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி:

ஜனவரி 15ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜன.20ல் வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்.

* திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு:

பா.ஜ.க தேசிய தலைவர்களை சந்தித்ததை அடுத்து கு.க.செல்வம் திமுகவில் இருந்து நீக்கம்.

கட்சி விதிப்படி, உறுப்பினரை நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம்.

திமுக தலைவருக்கு அதிகாரம் இல்லை- கு.க.செல்வம்.

எந்த விசாரணையும் நடத்தாமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்- கு.க.செல்வம்.

திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு.

* ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்தியா- சீன வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு வார்த்தை:

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் முன்னிலையில் பேச்சுவார்த்தை.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், சீன அமைச்சர் வாங் யி சந்தித்து பேசினர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

* முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்:

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் ரூ.110 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.

கிசான் நிதியுதவி திட்ட முறைகேட்டில் உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்.

6 லட்சம் போலி பயனாளிகள் சேருவதற்குக் காரணமான உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்.

கிசான் நிதியுதவி திட்ட முறைகேட்டில் உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்.

முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்.

* திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்ப தற்பொழுது அனுமதியளிக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ.

திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் - கடம்பூர் ராஜூ.

மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 23,446 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த பாதிப்பு 9.90 லட்சமாக உயர்வு;

*கொரோனா தொற்றிலிருந்து 7 லட்சம் பேர் குணமடைந்துள்ள நிலையில் 28,282 பேர் உயிரிழப்பு.

கொரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்து பலனளித்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தீவிரமாகவும், கடுமையாகவும் பாதித்த நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்து பலன் தந்துள்ளது.
- உலக சுகாதார அமைப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages