சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் வளர்ந்து வரும் பிரபல இளம் நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி(45) உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. - Agnipuratchi

சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் வளர்ந்து வரும் பிரபல இளம் நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி(45) உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.

Share This

சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் வளர்ந்து வரும் பிரபல இளம் நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி(45) உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடிகர் வடிவேல் பாலாஜிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும்,அதனை தொடர்ந்து அவரது கை கால்கள் செயலிழந்து பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அங்கு அதிகம் செலவானதால் சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது,அங்கு கொரோனா நோயாளிகளால் கூட்டம் அதிகமாக இருந்ததால் இன்று காலை திரும்பவும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே வடிவேல் பாலாஜி சிகிச்சைப் பலனின்றி மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயரிழந்தாக கூறுகின்றார்கள்,அவரது மறைவு திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

45 வயதே ஆன வடிவேல் பாலாஜிக்கு, மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் கணவன் மனைவி இருவரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது,அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages