அக்னிப்புரட்சி இன்றைய (12.09.2020) முக்கிய செய்திகள்.
* உலகளவில் கொரோனா பாதிப்பு 2.86 கோடியாக உயர்வு.
இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9.18 லட்சமாக உயர்வு.
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.05 கோடியாக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 61,005 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
* இந்தியாவில் 24 மணிநேரத்தில் 97,570 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை அமைச்சகம்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,201 பேர் கொரோனாவால் மரணம்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 46 லட்சத்தைக் கடந்தது.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 46,59,985.
இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 77,472.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 36,24,197.
இந்தியாவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9,58,316.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,97,066 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 978 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,47,591 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 8,307 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 6,227 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 4,41,649 பேர் குணமடைந்துள்ளனர்.
* மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் ஜோதி துர்கா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை.
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.
நாளை நடைபெற உள்ள நீட் தேர்வை எழுத இருந்தார், மதுரை காவல் சார்பு ஆய்வாளரின் மகள் ஜோதி துர்கா.
* சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்து ரூ.84.85 க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 12 காசுகள் குறைந்து ரூ.78.26 க்கும் விற்பனை.
* கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட வேளாண்துறை துணை இயக்குநர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வேளாண்துறை துணை இயக்குநர் கென்னடி ஜெயக்குமார்(பொ) நாமக்கல் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
கிசான் திட்ட முறைகேட்டில் கென்னடி ஜெயக்குமாரை இடமாற்றம் செய்து ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
* இந்திய கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் விலங்குகள் பரிசோதனையில் வெற்றி.
பரிசோதனையில் விலங்குகளிடம் நல்ல எதிர்ப்பு சக்தி கிடைத்து இருப்பதாக ஆய்வில் தகவல்.
கோவாக்சின் மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது.
* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை:
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.
சட்டப்பேரவை கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் தகவல்.
* மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்தி அறிந்து வேதனை அடைந்தேன் - துணை முதலவர் ஓபிஎஸ்.
மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு இரங்கல் - ஓபிஎஸ்.
எதிர்காலத் தூண்களாகிய மாணவச்செல்வங்களின் விபரீதமுடிவுகள் துயரத்தை தருகிறது - ஓபிஎஸ்.
* விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் கிசான் திட்டம் தற்காலிக நிறுத்தம்"-தமிழக அரசு அறிவிப்பு.
கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்ததை
தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை.
கிசான் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை.
கைது மற்றும் பண பறிமுதல் நடவடிக்கை தீவிரம்.
* திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை".
சட்டப்பேரவை கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் முடிவு.
நாளை மறுநாள் சட்டமன்ற கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.
* தமிழகத்தில் 7 மாவட்டங்களில் புதிதாக 7 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை துவங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கோவை, கரூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், விருதுநகர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் துவங்கப்படுகின்றன.
இந்த கல்லூரிகளுக்கு தேவையான அரசு கட்டிடத்தை தேர்வு செய்து நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையை நடத்தவும், அவ்வாறு அரசு கட்டடங்கள் இல்லையெனில் பொருத்தமான தனியார் கட்டிடங்களை தெரிவு செய்து அந்த கட்டிடத்தில் கல்லூரி இயங்கவும், தேவையான நடவடிக்கை எடுக்க மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு சென்ற விவகாரம்:
உரிமைக் குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.
திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மனுத்தாக்கல்.
கடந்த 7ம் தேதி கூடிய உரிமைக்குழு தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.
நாளை மறுதினம் பதிலளிக்க உரிமைக்குழு உத்தரவிட்ட நிலையில் திமுக மனுத்தாக்கல்.
*நீட் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலை அல்ல - திமுக எம்.பி. கனிமொழி.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே இவை.
மாணவர்கள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது - கனிமொழி.
* நீட் தற்கொலைகளுக்கு மத்திய அரசே காரணம் - வைகோ.
நீட் தேர்வால் நடைபெறும் மாணவர்களின் தொடர் தற்கொலைகள் அதிர்ச்சியளிக்கிறது - வைகோ.
* நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா உடலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் அஞ்சலி.
* 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு துணைத் தேர்வை எழுத உள்ளவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை செப்டம்பர் 15 முதல் dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்- தேர்வுத்துறை அறிவிப்பு.
* உலக அளவில் அரசியல் கட்சியை சேர்ந்த அதிகம் பேர் பங்கேற்ற காணொலி கூட்டங்களில் திமுக பொதுக்குழு கூட்டம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
* அமெரிக்காவில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு முதலிடத்தை பிடித்துள்ளது.
அம்மாநாட்டில் காணொலி காட்சி மூலம் 3 ஆயிரத்து 979 பேர் கலந்து கொண்டதாகவும், திமுக பொதுக்குழு கூட்டத்தில் 2 ஆயிரத்து 774 பேர் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் திமுக பொதுக்குழு கூட்டம் சர்வதேச அளவில் பாராட்டை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
* மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணம், தமக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக, அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும்.
* திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்.
தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ.89.19 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை.
* மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
நுரையீரல் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
* குத்தாலத்தில் அமையும் புதிய அரசுக்கல்லூரிக்கு கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெயரைச் சூட்ட வேண்டும்: முதலமைச்சருக்கு காவிரி அமைப்பின் தலைவர் கோமல் அன்பரசன் கோரிக்கை!
* உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் முதலிடம்,முகேஷ் அம்பானி ஐந்தாமிடம்
* புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடத்திலும், இந்தியாவின் முகேஷ் அம்பானி ஐந்தாமிடத்திலும் உள்ளனர்.
முதலிடத்தில் உள்ள ஜெப் பெசோசின் சொத்து மதிப்பு 13 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 8 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.
பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பர்க் 7 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாமிடத்திலும், ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க் 6 லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நான்காமிடத்திலும் உள்ளனர். இந்தியாவின் முகேஷ் அம்பானி 6 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஐந்தாமிடத்தில் உள்ளார்.
* 5 இளைஞர்களையும் இந்தியாவிடம் ஒப்படைத்தது சீன ராணுவம்
காணாமல் போன அருணாச்சல பிரதேச இளைஞர்கள் 5 பேரை சீன ராணுவத்தினர் இன்று ஒப்படைத்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அருணாச்சல பிரதேச மாநிலம் சுபன்சிரி (Subansiri) மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், கடந்த 1ம் தேதி முதல் காணாமல் போன நிலையில், அவர்களை சீன ராணுவத்தினர் பிடித்து வைத்திருப்பதாக கிழக்கு அருணாச்சல பிரதேச எம்.பி. தபீன்கான் குற்றம்சாட்டினார்.
ஆனால் அவர்கள் எல்லை தாண்டி வந்ததாக சீன ராணுவம் தெரிவித்தது. இந்த நிலையில் இளைஞர்கள் 5 பேரும் அருணாச்சலின் கிபிது (Kibithu) எல்லை பகுதியில் இன்று இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டனர்.
* தர்மபுரியில் நீட் தேர்வு எழுத தயாரான மாணவர் ஆதித்யா(20) தற்கொலை.
* சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நேரடி படிப்பு மற்றும் தொலைதூரக் கல்வி இறுதி ஆண்டு /இறுதி பருவ மாணவர்களுக்கு இம்மாதம் செப்டம்பர் 21 முதல் 30 வரை இணைய வழி (Online) மூலமாக தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது
பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன்அறிவிப்பு.
* இறுதி செமஸ்டர் தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கு வரும் 22 முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில், இறுதி செமஸ்டர் தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்வில் பங்கேற்க அண்ணா பல்கலை. அனுமதி .
தேர்வு கட்டணத்தை வரும் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதிக்குள் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் - அண்ணா பல்கலை.
* நீட் தேர்வு அச்சத்தால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை.
No comments:
Post a Comment