பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 13-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி சனிக்கிழமை வரையிலான வாரம் சமூகநீதி வாரமாக கடைபிடிக்கப் படவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் - Agnipuratchi

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 13-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி சனிக்கிழமை வரையிலான வாரம் சமூகநீதி வாரமாக கடைபிடிக்கப் படவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். - மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

Share This

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 13-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி சனிக்கிழமை வரையிலான வாரம் சமூகநீதி வாரமாக கடைபிடிக்கப் படவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். - மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

1987-ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூகங்களுக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; வன்னியர் மக்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; மண்டல் ஆணையப் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட ஒரு வார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையிலும், சமூகநீதி குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சமூகநீதி வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
செப்டம்பர் 13-ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சமூகநீதி சார்ந்த ஒரு தலைப்பில் வல்லுனர்கள் உரையாற்றுவார்கள்.

செப்டம்பர் 17&ஆம் தேதி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து சமூகநீதி வரலாறு குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் எழுதிய,‘‘சுக்கா.... மிளகா.... சமூகநீதி?’’ நூல் வெளியிடப்படும்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பதிவு செய்து கொள்ள விரும்புபவர்கள் www.pmkofficial.com/SJW2020Register என்ற இணைப்பில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சிகளை  www.pmkofficial.com/SJW2020Zoom    என்ற இணைப்பை நேரடியாக சொடுக்கியோ,   Zoom செயலியில்  ID: 812 6392 1196 Password: 12345 உள்ளீடு செய்தோ காணலாம். www.pmkofficial.com/SJW2020Live என்ற இணைப்பில் இந்த நிகழ்ச்சியை நேரலையில் காண முடியும். அனைவரும் சமூகநீதி வார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சமூகநீதி குறித்து விழிப்புணர்வடையும்படி  கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages