அக்னிப்புரட்சி இன்றைய (13.09.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (13.09.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (13.09.2020) முக்கிய செய்திகள்.

* உலகளவில் கொரோனா தொற்று:

பாதிப்பு எண்ணிக்கை 2.89 கோடி ஆக அதிகரிப்பு.

குணமடைந்தோர் எண்ணிக்கை 2.07 கோடி ஆக உயர்வு.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 9.24 லட்சமாக அதிகரிப்பு.

* இந்தியாவில் கொரோனா தொற்று:
பாதிப்பு எண்ணிக்கை 46,59,984 லிருந்து 47,54,356 ஆக அதிகரிப்பு.

குணமடைந்தோர் எண்ணிக்கை 36.24 லட்சத்தில் இருந்து 37.02 லட்சமாக அதிகரிப்பு.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 77,472 லிருந்து 78,586 ஆக அதிகரிப்பு- மத்திய சுகாதார அமைச்சகம்.

* தமிழகத்தில் பாதிப்பு 5 லட்சத்தைத் தாண்டியது:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,02,759 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 994 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,48,584 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 74 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 8,381 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,717 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 4,47,366 பேர் குணமடைந்துள்ளனர்.

* மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல் பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.

கொரோனா உறுதி செய்யப்பட்டு கடந்த ஆக.31 வீடு திரும்பிய நிலையில் மீண்டும் அனுமதி.

மருத்துவ பரிசோதனைக்காக அமித்ஷா மேலும் சில நாட்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார் என தகவல்.

* சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.85-க்கு விற்பனை;  டீசல் ரூ.78.26-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 3,842 மையங்களில் இன்று நடைபெறுகிறது.

நாடு முழுவதும் 15.97 லட்சம் பேர் எழுதவுள்ள நீட் தேர்வு பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

* திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தவர் கே.தங்கவேல்.

* அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார் 22 வயது நவோமி ஓசாகா:

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸை சேர்ந்த வீராங்கனை விக்டோரியா அசரங்காவை வீழ்த்தி பட்டத்தை வென்றுள்ளார் ஜப்பானை சேர்ந்த 22 வயதான நவோமி ஓசாகா.

இரண்டாவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் நவோமி ஒசாகா. கடந்த 2018இல் ஒசாகா அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றிருந்தார். 
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சர்வதேச ரேங்கிங்கில் 27வது இடத்தில் உள்ள அசரங்காவை வீழ்த்தியுள்ளார் நவோமி. 

ஆட்டத்தின் முதல் செட்டில் 1-6 என பின்தங்கியிருந்த நவோமி தடுமாறி விழுந்தாலும் எழுந்து நின்று வேகமெடுக்கும் புரவி புயலாக உத்வேகம் பெற்று 6-3, 6-3 என லீட் கொடுத்து பட்டத்தை வென்றுள்ளார். 
சுமார் 22 கோடி ரூபாயை வெற்றி பெற்றமைக்காக பரிசு தொகையாக பெற்றுள்ளார் நவோமி.

* கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது நடுவண்  கொழுமைத்துறை அமைச்சகம்

* 1400 ஆண்டுகள் பழமையான சேர மாமன்னனின் விருப்பத்தால் கட்டப்பட்ட இசுலாமிய பள்ளிவாசல்! தன் இருப்புக்கு நீதிமன்றத்தில் போராடும் கதை.
https://www.news18.com/amp/news/opinion/the-puzzling-case-of-the-renovation-of-keralas-cheraman-juma-mosque-2863347.html

* நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து.

மாணவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, நம்பிக்கையுடன் தேர்வு எழுத வாழ்த்துக்கள் - ரமேஷ் பொக்ரியால்.

* ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் ரகுவம்ச பிரசாத் சிங் உடல்நலக் குறைவால் காலமானார்.

* நீட் தேர்வுக்கு முடிவுகட்டாமல் ஆதித்யா உடலை பெறமாட்டோம் -குடும்பத்தினர் திட்டவட்டம்.

நீட் தேர்வு ஏற்படுத்திய மன உளைச்சலால் தருமபுரி மாணவர் ஆதித்யா நேற்று தற்கொலை.

உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் ஆதித்யாவின் உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு.

* கரூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு கொரோனா:

நேற்று சோதனை செய்யப்பட நிலையில் இன்று தேர்வுக்கு முன் கொரோனா சோதனை முடிவு வெளியானது.

கொரோனா உறுதியானதால் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க மறுப்பு.

'மாணவர்களின் சென்டிமென்ட்டை தவறாக திசை திருப்புகிறார்கள்'

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் நீட் தேர்வு நடக்கிறது.

* மாணவர்களின் உயிருடன் விளையாடக் கூடாது; எல்லா விஷயங்களிலும் ஸ்டாலின் அரசியல் செய்கிறார்-பாஜக மாநில தலைவர் எல்.முருகன்.

* டெல்டாவில் எண்ணெய் கிணறுகள் அமைக்க 2013ல் அளிக்கப்பட்ட அனுமதி நீட்டிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்.

* தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கவும், வளர்ச்சிக்காகவும் தேமுதிக தொடர்ந்து பாடுபடும்.

தேமுதிக 16ம் ஆண்டு தொடக்க நாளையொட்டி விஜயகாந்த் அறிக்கை.

* நீட் தேர்வு பிரச்னை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் நாளை போராட்டம்.

நீட் தொடர்பாக போராட்டம் நடத்த கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்- டி.ஆர்.பாலு

* திமுகவை இந்த மண்ணில் திரும்பவும் தலையெடுக்க விட கூடாது - டிடிவி தினகரன்.

2021ல் தமிழகத்தில் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி அமைக்க சபதமேற்போம் - டிடிவி தினகரன்.

இன்று பதுங்குவது களத்தில் சீறிப்பாய்ந்து பணியாற்றுவதற்காகத்தான்
- டிடிவி தினகரன்.

* கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றோர் நாளை மாலைக்குள் பணத்தை திருப்பி செலுத்தாவிடில் ரேஷன் பொருட்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும்- சேலம் ஆட்சியர்.

தமிழ்நாட்டில் உள்ள NEET தேர்வு மையங்களில் வைக்கப்பட்டுள்ள கொரோனா வழிகாட்டு விதிமுறைகள் பதாகையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.

தமிழில் வழிகாட்டு விதிமுறைகள் வைக்காதது ஏன் என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி!

கரூரில் NEET தேர்வு எழுத வந்த மாணவருக்கு கொரோனா வெருவித் உறுதியானதால் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க மறுப்பு.

* திருச்சி அதிமுக கூட்டத்தில் மோதல்:
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நடந்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் வளர்மதி முன்னிலையில் நடைபெற்றது.

இதில் ஒரு தரப்பினர் சரியான நபர்களுக்கு பதவி புறக்கணிக் கப்பட்டதாக கூறி மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

நாற்காலிகளை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டதால் காவல்துறை விசாரணை.

* ராணிப்பேட்டை, வாலாஜாப்பேட்டை, ஆற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தற்கொலை முயற்சி.

* நீட் தேர்வு பயம் காரணமாக நேற்று இரவு தூக்க மாத்திரை அதிகளவு உட்கொண்டதால்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

நாடு முழுவதும் 2 மணி அளவில் தொடங்கிய நீட் தேர்வு 5 மணி அளவில் நிறைவு!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages