அக்னிப்புரட்சி இன்றைய (15.09.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (15.09.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (15.09.2020) முக்கிய செய்திகள்.

* உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,94,33,080.

உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 9,32,390.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.12,64,646.

ஒருநாள் கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடம்.

இந்தியாவில் ஒரேநாளில் 81,911; அமெரிக்காவில் 37,537; பிரேசிலில் 19.089 பேருக்கு கொரோனா.

* கொரோனா மொத்த பாதிப்பில் ரஷ்யாவை முந்தியது மகாராஷ்டிரா:

ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்பு 10,68,320; மகாராஷ்டிராவில் 10,77,374.

கொரோனா மரணங்களில் ஸ்பெயினை முந்தியது மகாராஷ்டிரா.

ஸ்பெயினில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 29,848; மகாராஷ்டிராவில் 29,894.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,14,208 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 989 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,50,572 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 68 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 8,502 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,735 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 4,58,900 பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ.84.57 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 21 காசுகள் குறைந்து ரூ.77.91 க்கும் விற்பனை.

* அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை"

சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல். சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.

சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை - ஆர்டிஐ மூலம் தகவல்.

ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும் அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா விடுதலை ஒரு ஆண்டு தள்ளிப்போகும்.

* மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாள்.
அண்ணாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர், அமைச்சர்கள் மரியாதை.

* சென்னை: கலைவாணர் அரங்கில் 2 - வது நாள் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது.

அண்ணாவால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு ஆபத்து - சட்டசபையில் ஸ்டாலின் பேச்சு.

அண்ணாவின் இருமொழி கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இருமொழிக்கொள்கையை கொண்டு வந்ததுடன் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அண்ணா - மு.க.ஸ்டாலின்.

கொரோனா பாதிப்பில் ரஷ்யாவையும், இறப்பு எண்ணிக்கையில் ஸ்பெயினையும் பின்னுக்கு தள்ளிய மராட்டியம்

* அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படுமா?

நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. ஆனால், குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன், வழிகாட்டு நெறிமுறைகளுடன் சினிமா படப்பிடிப்புகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திரையரங்குகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்தியா ஒரே நாடு அல்ல.. இந்தி பொதுமொழி அல்ல.. அன்றே ராஜ்யசபாவில் கர்ஜித்த அண்ணா பிறந்த நாள் இன்று!

* 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் கணிசமாக குறைப்பு- பணிகளை முடித்தது கல்வித்துறை

குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் நடப்பு கல்வி ஆண்டில் அமல்.

* தனியார் விமான சேவைகள் வழங்கிய நிறுவனங்கள் இழப்பையே சந்தித்துள்ளன. ஏர் இந்தியா விமான சேவையை தனியார் மயமாக்கக் கூடாது.

சென்னை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும்- திமுக எம்.பி. வில்சன் மாநிலங்களவையில் பேச்சு.

* சட்ட பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றம்:

நீட் தேர்வு தொடர்பாக பேச வாய்ப்பு கேட்டு தொடர்ந்து பேரவையில் முழக்கம்.

காங்கிரஸ் உறுப்பினர்களை அவைக் காவலர் கொண்டு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு.

நீட் தேர்வு தொடர்பான கவனஈர்ப்பில் பேச காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அனுமதி மறுப்பு.

காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு.

* 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம் - முதல்வர் ஆவேசம்:

நீட் தேர்வு தொடர்பாக 13 பேர் மரணமடைந்ததற்கு திமுக தான் காரணம்.

நீட் தேர்வை மீண்டும் கொண்டு வந்ததற்கு யார் காரணம்?" - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி ஆவேசம்.

நீட் தேர்வு பிரச்சினைக்கு திமுகவே காரணம்- பேரவையில் முதலமைச்சர் குற்றச்சாட்டு:

காங்கிரஸ், திமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது- முதலமைச்சர்'.

13 மாணவர்கள் மரணத்திற்கு திமுகவே காரணம்- முதலமைச்சர்.

நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம்.

"ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை, மீண்டும் கொண்டு வந்து வரலாற்று பிழை செய்தது திமுக".

* சட்டப்பேரவையில் இன்று:

நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி ஆட்சி:

காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத்துறை இணையமைச்சர் பதவி திமுகவிடம் தான் இருந்தது!" நீட் தொடர்பான திமுகவினரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்.

* சென்னை: புளியந்தோப்பு பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம்:

மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம். புளியந்தோப்பில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த அலிமா என்ற பெண் மின்சாரம் தாக்கி பலி. உதவி கோட்ட மின் பொறியாளர் கண்ணன்,  இளநிலை பொறியாளர் வெங்கட ராமன் பணியிடை நீக்கம்.
- சென்னை மாநகராட்சி உத்தரவு.

* சென்னை பல்கலையில் தமிழ்ப்பாட வேளை குறைப்பு நடவடிக்கை வாபஸ்:

அரசியல் ரீதியிலான கடும் எதிர்ப்பால் துணைவேந்தர் நடவடிக்கை.
வழக்கம்போல் 6 தமிழ் பாடவேளைகள் இடம்பெறும் என அறிவிப்பு.

* தமிழக சட்டப்பேரவையில் இன்று:
கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்.

"மாவட்ட மருத்துவமனையில் உள்ள தொழில் நுட்பத்தை வெளியிட வேண்டும்".

மரணங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை, குழுவின் அறிக்கை என்ன ஆனது?- ஸ்டாலின்.

கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் முறையாக வழங்கப்பட்டுள்ளதா? - ஸ்டாலின்.

மருத்துவர்களுக்கு ரூ.50 லட்சம், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை முறையாக வழங்கப்பட்டுள்ளதா?- ஸ்டாலின்.

* இந்திய கலாசாரத்தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த முழுமையான ஆய்வு செய்ய திட்டம்:

புதிய ஆய்வு நடத்துவதற்கு ஒரு நிபுணர் குழு அமைத்தது மத்திய அரசு.
மத்திய கலாசாரம், சுற்றுலா துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்.

16 பேர் கொண்ட குழுவில் தென்னிந்தியர் யாரும் இடம்பெறவில்லை.

மத்திய அரசின் 16 பேர் கொண்ட குழுவில் ஒரு பெண் ஆய்வாளர் கூட இடம்பெறவில்லை.

இந்திய பொறியியலாளர்கள் நம் நாட்டைக் கட்டியெழுப்புவதிலும், உலகைக் கட்டமைப்பதிலும் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் பீகாரில் குடிநீர், கழிவு நீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பட்டு வருகின்றன- பிரதமர் மோடி.

இந்திய பொறியியலாளர்கள் நாட்டின் வளர்ச்சியில் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி

* இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்துள்ள குழுவில் ஏன் ஒரு சிறுபான்மையினர் கூட இடம்பெறவில்லை ?

சிறுபான்மையினரோ, தலித்துகளோ, இந்திய கலாச்சாரம் குறித்து பேசக்கூடாதா ?  அல்லது அவர்கள் தகுதியற்றவர்களா ? - திமுக எம்பி கனிமொழி ட்வீட்

நாளைய கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம் - சட்டப்பேரவைத் தலைவர் தனபால்..

"நீட் விவகாரத்தில் தி.மு.க.வின் யோசனையை ஏற்க தயார்":

" 8 மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறுகிறீர்கள்?".

"எப்படி நீங்கள் ரத்து செய்வீர்கள் என்ற வழியை சொல்லுங்கள்?".

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் கேள்வி.

"தி.மு.க. அதற்கான வழிகளை கூறினால் இப்போதே தமிழக அரசு செய்ய தயார்".

* சட்டப்பேரவையில் இன்று:

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். முதலிய இளநிலை மருத்துவப் படிப்புகளில் 7.5% முன்னுரிமை - முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றம்.

கொரோனா செலவு ரூ.7,167.8 கோடி -  ஓ.பன்னீர்செல்வம்:

மருத்துவக்கருவிகள்- ரூ.830கோடி, கட்டமைப்பு - ரூ.147கோடி, புதிய பணியாளர் ஊதியம் - ரூ.243கோடி, தனிமைப்படுத்தல் - ரூ.262கோடி, வெளிமாநிலத்தொழிலாளர் நிதி - ரூ.142கோடி. கொரோனா தடுப்பு - ரூ.638கோடி.

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா.

பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த சட்ட மசோதா நிறைவேறியது.

தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கு
இளங்கலை மருத்துவ படிப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை வழங்க வழிவகை.

* வீட்டிலிருந்தே தேர்வை எழுதி `விரைவு அஞ்சல்’ மூலமும், இணையம் வழியாகவும் விடைத்தாள்களை அனுப்பலாம் - சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.

சென்னை பல்கலைக் கழகத்தில் ஆன்லைன் தேர்வு இல்லை.

ஆன்லைனில் அனுப்பப்படும் கேள்வித்தாளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து வீட்டில் தேர்வு
எழுத வேண்டும்.

மாணவர்கள் ஏ4 தாளில் வீட்டில் இருந்து தேர்வு எழுதி அனுப்பி வைக்கலாம் -சென்னை பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு.

18 பக்கங்களுக்கு மிகாமல் விடை எழுதி அனுப்பி வைக்க வேண்டும்.

* மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன இந்திய எல்லை பிரச்னை தொடர்பாக விளக்கம்:

வரலாற்று உடன்படிக்கையை சீனா மதிக்கவில்லை.

சீனாவுடனான லடாக் எல்லை பிரச்னை இன்னும் தீரவில்லை.

சீன சுமார் 38 ஆயிரம் சதுர கி.மீ பகுதியை லடாக் எல்லையில் ஆக்கிரமித்துள்ளது.

லடாக் எல்லை பிரச்னை காரணமாக இந்திய சீன உறவில் தாக்கம் ஏற்படும்.

இருதரப்பு ஏற்றுக்கொள்ளும் வகையில் உடன்படிக்கை எட்டப்படவில்லை -மக்களவையில் ராஜ்நாத் சிங்.

எல்லை தொடர்பாக 1993 மற்றும் 1996ம் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை சீனா மதிக்கவில்லை.

எல்லை தொடர்பாக இரு நாடுகளுக்கு கருத்துக்கள் வேறாக உள்ளது. அதனால் ராணுவங்களுக்கு இடையே பிரச்னை எழுகிறது.

இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கிறது.

அமைதியான பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண இருநாடுகளும் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம்.

சீனா ராணுவம் லடாக் பகுதியை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க இந்திய ராணுவ வீரர்கள் உயிரை தியாக செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி சீன ராணுவத்துக்கு தக்க பதிலடியும் கொடுத்துள்ளனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

* மூத்த குடிமக்கள், பெற்றோர் நலன் மற்றும் பாராமரிப்பு சட்டத்தை முறையாக பின்பற்றுங்கள்- உயர்நீதிமன்றம்.

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* பீகாரில் ரூ. 1264 கோடியில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை அனுமதி.

100 எம்பிபிஎஸ் மற்றும் 60 பிஎஸ்சி நர்சிங் இடங்களுக்கு அனுமதி.

இந்த மருத்துவமனை 750 படுக்கைகள் கொண்டதாக இருக்கும்.

* ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீரழிக்கிறது- சென்னை உயர் நீதிமன்றம் கருத்து.

வழக்கு விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

தேர்வு நடத்துவதற்கான செலவினங்கள் குறித்த அண்ணா பல்கலைக்கழக அறிக்கை மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி.

முழு விவரங்களுடன் புதிய அறிக்கையை தாக்கல் செய்ய அண்ணா பல்கலை.க்கு செப். 24ஆம் தேதி வரை அவகாசம்.

திருச்சி என்.எஸ்.பி சாலையில் உள்ள 2 பிரபல நகைக்கடைகளில் 15 பேர் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் குழு 6மணி நேரமாக சோதனை.

கேரளாவில் தங்கக்கடத்தல் விவகாரத்தில் கைதாகி உள்ள ஸ்வப்னாவுடன் தொடர்பு உள்ளதா என ஆவணங்கள் ஆய்வு செய்யப்படுவதாக தகவல்.

* கள்ளக்குறிச்சி: கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டதாக 2 இடைத்தரகர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

* முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான
கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான
கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க கோரி தமிழக அரசு மனுதாக்கல் செய்தது.

போலீஸ் காவல் மரணங்களில் மத்திய பிரதேஷ் முதலிடத்திலும், தமிழகம், குஜராத் இரண்டாமிடத்திலும் உள்ளன:

2019 ஏப். முதல் 2020 மார்ச் வரை நாடுமுழுவதும் 113 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

- சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை குறைப்பதற்கான மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்.

கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க எம்.பி.க்களின் ஊதியத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.

* பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இறுதி பருவத் தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதியளித்து அரசாணை வெளியீடு:

சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தலாம்.

பல்கலைக்கழக தேர்வு தேதிகள்:

சென்னை பல்கலை. - செப்.21 முதல் 25 வரை.

அண்ணா பல்கலை. - செப். 22 முதல் 29 வரை.

மதுரை காமராஜர் பல்கலை. - செப்.17 முதல் 30 வரை.

பாரதியார் பல்கலை. - செப். 21 முதல் அக்.7 வரை.

பாரதிதாசன் பல்கலை. - செப். 21 முதல் 25 வரை.

நீட் மரணங்கள் : தற்கொலை என சொல்ல மாட்டேன்; கொலை என சொல்வேன் - மு.க.ஸ்டாலின்

கொரோனா மருத்துவ சிகிச்சை பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு:

மருத்துவ பணியாளருக்கான காப்பீடு பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு.

கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1,090 பேரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.40.06 லட்சம் மீட்பு. - மாவட்ட ஆட்சியர்.

* மதுரை AIIMS மருத்துவமனைக்காக 7.89 கோடி ரூபாய் செலவு செய்துள்ள நடுவண் அரசு!

5 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட AIIMS திட்டத்தில் மிக குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ள, எந்த பணியும் நடக்காமல் உள்ளது மதுரை AIIMS திட்டத்திற்கு தான்.

இறுதி பருவ தேர்வை வீட்டிலேயே மாணவர்கள் எழுத சென்னை பல்கலைக்கழகம் அனுமதி!

https://www.dtnext.in/News/City/2020/09/15175757/1251197/Final-semester-exams-to-be-conducted-from-home-Madras-.vpf

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages