அக்னிப்புரட்சி இன்றைய (16.09.2020) முக்கிய செய்திகள்.
* உலகளவில் கொரோனா தொற்று:
பாதிப்பு எண்ணிக்கை 2.97 கோடியாக அதிகரிப்பு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 2.15 கோடியாக உயர்வு.
உயிரிழப்பு எண்ணிக்கை 9.38 லட்சமாக அதிகரிப்பு.
* இந்தியாவில் 50 லட்சத்தை தாண்டியது கொரோனா.
பாதிப்பு எண்ணிக்கை 49,30,236லிருந்து 50,20,359 ஆக அதிகரிப்பு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 38.59 லட்சத்திலிருந்து 39.42 லட்சமாக உயர்வு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 80,776லிருந்து 82,066 ஆக அதிகரிப்பு
- மத்திய சுகாதார அமைச்சகம்.
இந்தியாவில் ஒரே நாளில் 90,123 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 82,961 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
1,290 பேர் உயிரிழந்துள்ளனர்- மத்திய சுகாதார அமைச்சகம்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,19,860 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 983 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,51,560 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 57 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 8,559 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,768 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 4,64,668 பேர் குணமடைந்துள்ளனர்.
* சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.57-க்கும், டீசல் ரூ.77.91-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
* இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும்- அண்ணா பல்கலைக்கழகம்.
உறுப்புக் கல்லூரிகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
* சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் 103வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் மற்றும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே கெலமங்கலம் ஒன்றிய பாஜக இளைஞர் அணி தலைவர் ரங்கநாதன் வெட்டிக்கொலை. கொலை சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்.
* சேலம்: மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் திடீர் போராட்டம் கோவிட் வார்டில் பணிபுரிபவர்களுக்கு முறையான வசதி, கூடுதல் செவிலியர்களை நியமிக்க கோரிக்கை.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ,39,560-க்கு விற்பனை.
கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு தருவதை பாஜக வரவேற்கிறது. - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.
* திமுக தலைவர் ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்..?
கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தபோது நீட் தேர்வை எதிர்த்து திமுக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
- தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.
* 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி, அவர்கள் வேண்டிய எந்த சாமியும் செய்யாததை செய்தார் எடப்பாடி பழனிசாமி
4 ஆண்டுகளில் எத்தனையோ சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர். 40 ஆண்டு அத்திவரதரையும் பார்த்துவிட்டீர்கள், நாற்றங்காலும் நட்டு விட்டீர்கள் - பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்
* கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் இறுதி பருவத்தேர்வு நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
* அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வழக்கில் ஏஐசிடிஇ, யுஜிசிக்கும் நோட்டீஸ்.
மத்திய அரசும் செப்டம்பர் 30-க்குள் பதில்தர உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைப்பு.
* சுகாதாரத்துறை எம்.எல்.ஏக்களுக்கு தந்த மூலிகை புத்தகத்தில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி இடம்பெற்றதன் மூலம் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஆதரிக்கிறதா? -மு.க.ஸ்டாலின்
* தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தான் என முதல்வர் தெளிவுபடுத்தி விட்டார் -அமைச்சர் விஜயபாஸ்கர்.
* மாநில கல்வி உரிமையை பாதிப்பதாக புதிய கல்விக்கொள்கை இருக்கிறது புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் -மு.க.ஸ்டாலின்.
* வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 லிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை.
18 வயதுக்குட்பட்ட பெண்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தினால் ஆயுள் தண்டனை தர பரிந்துரை- தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி.
* காட்பாடி தொகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பதற்கு திமுக எம்.எல்.ஏ துரைமுருகன் எதிர்ப்பு.
கருணாநிதி கொண்டு வந்ததால் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை அரசு பிரிக்கிறதா? பல்கலை. பிரிக்கப்பட்டால் அதே பெயர் இருக்குமா? -துரைமுருகன்.
* விழுப்புரத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம்: திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2 ஆக பிரிப்பு; புதிய பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் அமைக்கப்படும்- முதல்வர் பழனிசாமி.
* முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்.
முதுநிலை மருத்துவ கலந்தாய்வை ஒரு நாள் கூட நீட்டிக்க கூடாது என மத்திய அரசு கூறியதை ஏற்று உத்தரவு.
* இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை- மத்திய அரசு.
அலுவல் மொழிகள் திட்டத்தில் திருத்தம் செய்யும் திட்டம் இல்லை என மாநிலங்களவையில் வைகோவின் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில்.
நீட் விவகாரத்தில் திமுகவின் 37 எம்பிக்களும் ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரலாமே..?
மத்திய அரசுக்கு திமுக அழுத்தம் தரும் என மு.க.ஸ்டாலின் கூறியது பற்றி அதிமுகவின் ராஜன் செல்லப்பா கேள்வி
* சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்:
உரிமை மீறல் குழு 2வது முறையாக அனுப்பிய நோட்டீஸ் மீது நாளை விசாரணை. ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கை நாளை விசாரிக்கிறது உயர் நீதிமன்றம்.
திமுக தரப்பு முறையீட்டை ஏற்று நீதிபதி ரவிச்சந்திரபாபு ஒப்புதல்.
* அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப் பட்டுள்ளதா?- உச்சநீதிமன்றம்.
“சிசிடிவி பொருத்தப்பட்ட விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
* ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம்.
சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி.
ஏற்கனவே நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு உடல்நலம் பாதித்தது.
உடல்நலம் பாதித்ததால் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் இந்தியாவில் பரிசோதிக்க ஒப்புதல்.
* சட்டமன்ற கூட்டத்தில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு:
புதிய கல்வி கொள்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து வெளிநடப்பு.
புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர்.
குழுவின் அறிக்கைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் விளக்கம்.
முதலமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததால் தி.மு.க. வெளிநடப்பு.
* கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்.
அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்பட பல்வேறு எம்.எல்.ஏக்கள் கொண்டு வந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெறுகிறது.
பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு - சட்டமன்றத்தில் அதிமுக உள்ளிட்ட அனைத்து
கட்சிகளும் கவன ஈர்ப்பு.
கிசான் திட்டம் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - திமுக எம்.எல்.ஏ பொன்முடி.
ஒப்பந்தப் பணியாளர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்
கிசான் திட்ட முறைகேட்டில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை போதாது, சிபிஐ விசாரணை வேண்டும் - பொன்முடி.
* ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விவசாயி கொடுத்த புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணை - வேளாண்மை அமைச்சர் துரைக்கண்ணு.
கிசான் திட்டத்தில் தவறு செய்த ஒருவர் கூட தப்ப முடியாது. கிசான் திட்டத்தில் புதிய பயனாளிகள் பதிவு செய்வது மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைக் கப்பட்டுள்ளது.
முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது; இதுவரை 30.36 லட்சம் பயனாளிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன- அமைச்சர் துரைக்கண்ணு.
கிசான் திட்டத்தில் முறைகேடு: இதுவரை ரூ.52.65 கோடி பறிமுதல்.
இதுவரை 30.36 லட்சம் பயனாளிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன; சிபிசிஐடி இதுவரை 41 பேரை கைது செய்துள்ளது.
கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த ஒருவர் கூட தப்ப முடியாது- அமைச்சர் துரைக்கண்ணு.
* நகராட்சி, மாநகராட்சிகளில் தனி அலுவலர் பதவிக்காலத்தை நீட்டிக்க சட்டமுன் வடிவு.
மேலும் 6 மாதங்கள் நீட்டிப்புக்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
பதவிக்காலம் நீட்டிப்புக்கு திமுக கடும் எதிர்ப்பு. நகராட்சி, மாநகராட்சித் தேர்தலை உடனே நடத்த திமுக கோரிக்கை.
* அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டமசோதாவை தாக்கல் செய்தார்.
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா தொழில்நுட்பம் - ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் பிரிக்கப்படுகிறது.
* தி.மலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வளிமண்டல சுழற்சியாக நீடிக்கிறது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்;சில இடங்களில் மழை பெய்யும்- வானிலை மையம்.
* கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் படிப்புக்கு அக்.5 வரை விண்ணப்பிக்கலாம்.
தரவரிசை பட்டியல் வெளியிடும் தேதியும் செப்டம்பர் 29-க்கு பதிலாக அக்.15 என மாற்றப்பட்டுள்ளது.
* திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்திற்கு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல். மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்யலாம்.
திருமணம் நடக்கும் இடத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் தான் பதிவு செய்ய முடியும் என்பதில் மாற்றம்.
* பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு:
லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு.
பாபர் மசூதி வழக்கில் அத்வானி, முரளி மனோகார் ஜோஷி உள்ளிட்ட 32 போர் மீது குற்றச்சாட்டு வழக்கு தொடர்பான விவாதங்கள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தன.
* ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து தீபக் வழக்கு:
ஆளுனர் செயலாளர், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயலாளர், சட்ட துறை செயலாளர் 6 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
அவசர சட்டத்துக்கு மாற்றாக சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்.
* தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில் எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை காவல்துறை ஏற்றுக்கொண்டிருந்த நிலையில் நிபந்தனை முன்ஜாமீன்.
* செமஸ்டர் இறுதி தேர்வு தவிர பிற தேர்வுக்கு, பணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி:
பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல்.
யுஜிசி, ஏ.ஐ.சி.டி.இ வழிகாட்டுதலின் படியே அரசு நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன்.
அரியர் தேர்வு தொடர்பாக ஏஐசிடிஇ தலைவர் அரசுக்கு எந்த கடிதமும் எழுதவில்லை - பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் திட்டவட்டம்.
மாணவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை - அன்பழகன்.
* ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.
* தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு:
தமிழக சட்டப்பேரவை 3-ஆம் நாள் கூட்டத்தொடர் நிறைவடைந்தது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
* அபராத தொகையை செலுத்த அனுமதிக்க கோரி சசிகலா மனுத்தாக்கல் பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்.
தனது அபராத தொகை ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தினார் சுதாகரன். சுதாகரன் அபராத தொகையை செலுத்திய நிலையில், சசிகலா மனுத்தாக்கல்.
* டெல்லிக்கு வெளியில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் கருதுகிறது!':
- உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படுமா என்ற எம்.பிக்கள் சின்ராஜ், ஜெகத்ரட்சகன் கேள்விக்கு சட்ட அமைச்சகம் பதில்.
* ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை-மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் பதில்.
ரயில்வே விரிவாக்கம், நவீனமயம் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.50 லட்சம் கோடி நிதி முதலீடு தேவைப்படுகிறது.
“2ஜி சேவையை கைவிடும் திட்டம் மத்திய அரசிடம் எதுவுமில்லை"-தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் சஞ்சய் கோத்ரே விளக்கம்
திமுக எம்.பி செந்தில்குமார் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில்.
"2ஜி சேவையை கைவிடுவது தொடர்பாக தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து பரிந்துரை எதுவும் வரவில்லை"
"எந்த தொழில்நுட்பத்துடன் தகவல் தொடர்பு சேவையை வழங்குவது என்பது தொலைபேசி சேவை நிறுவனங்களின் விருப்பம்"
* புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுகிறது டாடா நிறுவனம்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுகிறது டாடா நிறுவனம்: ஏலத்தில் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி ரூ.861.90 கோடிக்கு ஒப்பந்தத்தை கைப்பற்றியது.
* அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம் திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் செல்வம்.
No comments:
Post a Comment