சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
19. கண்ணகி மனம் கலங்கியவளாய்
மன்னனை விளித்து உரைத்தல்
“நீர்வார் கண்ணை | எம்முன் வத்தோய்!
யாரையோ நீ! மடக்கொடி யோய்!" எனத்
தேராமன்னா செப்புவது உடையேன்,
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயில் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமனி உகு நீர்நெஞ்சுசுடத் தான்தான்
அரும்பெறல் புதல்வனை ஆழியில் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார்என் பதியேஅவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்து ஈங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நிப்பாற் ்
கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பது என் பெயரே! எனப் “பெண் அணங்கே!
கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று
வெள்வேல் கொற்றம் காண் என.
தெளிவுரை:
கண்ணகி பாண்டியன் முன்னே சென்றதும் அவன், கண்ணீர்
பெருக இங்கு எமது முன்னே வந்த பெண்ணே) நீ யார் எனக்
கூறுவாய்” என்றான். உடனே கண்ணகிசிற்றம் மிகுந்தவளாய்
"ஆராய்ந்து அறியாத மன்னவனே! நான் யார் என்று கூறுகிறேன்
இகழ்தல் இல்லாத சிறப்பினையுடைய தேவர்கள் வியப்படையும்
படிப் புறாவின் துன்பத்தைத் தீர்த்த சிபிச் சக்கரவர்த்தி ஆட்சி
புரிந்தது புகார் என்னும் நகரம். அது மட்டும் அல்லாது கன்றை
இழந்த பசு ஒன்று கண்ணீர் மல்க அரசனது வாயில் மணியை
நசுங்குமாறு கொன்ற தன் அருமையுடைய மைந்தனைத் தன்னு
டைய தேர்சக்கரத்தால் மடியச் செய்து தண்டித்த மனு நீதிச்
சோழன் வாழந்த பதியும் புகார் நகரம் ஆகும். நீதி முறையில்
பெரும் புகழைப்பெற்ற 'புகார்நகரமே என்னுடைய ஊர் ஆகும்.
அவ்வூரில் பிறரால் குற்றம் சொல்லுவதற்கு இல்லாத பெருஞ்
சிறப்பால் புகழ் விளங்க மேவும் பெருங்குடி மரபில் மேவும்
மாசாத்துவான் என்னும் வணிகரின் மகனாய், வாழவேண்டும்
என்னும் விருப்பத்தோடு ஊழ்வினை துரத்த வந்து நின்னுடைய
நகரை அடைத்து இங்கு என்னுடைய காற்சிலம்பை விற்க வரும்
போது உன்னால் கொலை செய்யப்யப்பட்ட கோவலன் மனைவி
வீரக் கழல் அணிந்த வேந்தே கண்ணகி என்பது என் பெயர் என்றாள்.
அதனைக் கேட்ட பாண்டியன் பெண்ணே கள்வனை கொல்
லுதல் அநீதி அன்று, செங்கோளுக்குரிய வெற்றி என்று காண்பாய் என்றான்.
சிறப்புரை
பாண்டியன் அநீதி இழைத்தமை குறித்து மன்னன் முன்னர் தேரா மன்ன என்று அழைத்தமையும், தன்னுடைய காற் சிலம்பினை விற்க வந்தவனைப் பாண்டியன் கொல்லப் பணிந்தான் என்று பகர்ந்தமையும் அரசன் தன் செவியிற் கொள்ளானாகிப் பெசத்தலைப்பட்டான் என்க. ஆதலால் கண்ணகியின் காற் சிலம்பைக் கோவலன் விற்க வந்ததன் என்பதனை ஓர்கிலாய்க்கள்வனை. கொல்லுதல் அநீதியன்று என்று சாற்றினன் என்பதாம்.
No comments:
Post a Comment