திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.19.20 கோடியில் 11 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்:
ரூ.52.59 கோடியில் 31 முடிவுற்ற திட்டப்பணிகள் தொடங்கி வைத்தார்.
16 துறைகள் சார்பில் 18,279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
அதன் பின்னர் திருவண்ணாமலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி-
செய்தியாளர்கள் சந்திப்பில்
திருவண்ணாமலையில் ஏரிகள் புனரமைக்கும் பணிகளுக்காக ரூ.260 கோடியில் உத்தேச திட்டம்.
செய்யாறு ஆற்றின் குறுக்கே புதிதாக அணைக்கட்டு அமைக்கும் திட்டத்துக்கு பரிசீலனை.
திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்க ரூ.31 கோடியில் விடுதிகள் கட்டப்படுகிறது - முதலமைச்சர்
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை, கோவிட் சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன
பிரதமர் கிசான் திட்டம் பணத்தை திரும்ப பெற புதிய வழி.
முடக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து மாவட்ட ஆட்சியர் கணக்கிற்கு பணம் வரும்படி மாற்றியமைப்பு. கடலூர் மாவட்டத்தில் புதிய முறை அமல் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
No comments:
Post a Comment