அக்னிப்புரட்சி இன்றைய (25.09.20) முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (25.09.20) முக்கிய செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (25.09.20) முக்கிய செய்திகள்

* உலகில் கொரோனா தொற்றால் 3,23,94,830 பேர் பாதிக்கப்பபட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 987,066 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

2,39,04,687 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,69,370 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1193 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,60,926 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 72 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 9,148 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,626 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 5,13,836 பேர் குணமடைந்துள்ளனர்.

* வரும் 29ஆம் தேதி ஆட்சியர்களுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.

கொரோனா பாதிப்பு நிலவரம், மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.

* சென்னையில் விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 17 காசுகள் குறைந்து ரூ.76.55 க்கும் விற்பனை.

* செப் 28ந் தேதியன்றே காய்கறி வளாகத்துடன் பழ வணிக வளாகம் திறக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை!

* வேளாண் திருத்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு பலன் தரும்.
மசோதாக்களால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை - வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு.

விவசாயிகளுக்கு பலனளிக்க கூடிய மசோதாக்கள் என்பதால்தான் முதலமைச்சர் ஆதரிக்கிறார் - துரைக்கண்ணு.

* ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்வு:
ஓரு கிராம் தங்கம் ரூ.4805-க்கு விற்பனை.
ஒரு சவரன் தங்கம் ரூ.38,440க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.2700 உயர்வு. கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்வு.

* விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும், மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்ட  ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் விவசாயிகள் கழுத்தில் தூக்குக்போட்டும், மண்டையோட்டுடன், கைகளை சங்கிலியால் கட்டிக் கொண்டும் நூதன போராட்டம்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம்:

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கா னோர் கைது.

* அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கும்; தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு - வானிலை மையம்.

* பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் உயிரிழந்தார்.

உலகம் முழுவதும் உள்ள எஸ்பிபி ரசிகர்கள் அதிர்ச்சி. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையில் நேற்று திடீர் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது எஸ்பிபி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவிப்பு.

* போலீசார் கட்டுப்பாட்டில் எம்ஜிஎம் மருத்துவமனை.

எஸ்பிபி உடல் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

* பிரார்த்தனைக்கு பலன் இல்லை; துக்கம், வருத்தம் இருக்கும் போது வார்த்தைகள் வராது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை முன்பு இயக்குனர் பாரதிராஜா பேட்டி.

* பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன் மரணத்திற்கு வேதனை தெரிவித்து ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்! மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

* எஸ்.பி.பி. உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

* எஸ்.பி.பி மறைவு: முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல்.

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்:
பல ஆண்டுகளாக எல்லா வீடுகளிலும் ஒலித்து வந்த குரல் அடங்கிவிட்டது. எஸ்.பி.பியின் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

* எஸ்.பி.பி மறைவுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் இரங்கல்.

* பன் மொழிகளில் பாடி, பல லட்சம் இதயங்களை கவர்ந்தவர் எஸ்.பி.பி - ராகுல் காந்தி இரங்கல்.

* எஸ்.பி.பி மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்:

* காலம் அவரை பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன் குரல். எஸ்.பி.பி மறைவு : மு.க.ஸ்டாலின் உருக்கம்.

என்றும் இளமை மாறாத அந்த இனிய குரல் தந்த பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் இறவாப் புகழ்கொண்ட பாடகர் எஸ்.பி.பி அவர்கள்- மு.க.ஸ்டாலின்.

பரபரப்பான உலகில் மக்களின் மன அழுத்தத்திற்கு இயற்கையான மருந்து எஸ்.பி.பி கொரானா கொடுங்காலம் நம்மிடமிருந்து அற்புத இசை கலைஞனை பிரித்துவிட்டது.

16 இந்திய மொழிகளில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியதுடன், பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பிரபல நடிகர்களுக்கு மாற்றுக் குரல் கொடுத்தும், பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி.பி

பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பல மாநில அரசுகள், திரைப்பட விருதுகளால் பெருமை பெற்றவர் எஸ்.பி.பி.

முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பிற்குரியவர் எஸ்.பி.பி

தம்பி சரண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையில் இருக்கும் ரசிகர்களுக்கும் திமுக சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது மனம் -  மு.க.ஸ்டாலின்.

* எஸ்.பி.பி.யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. எஸ்.பி.பி. உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

* SPB: என் சங்கீத ஜாதி முல்லை சருகாகி போனது.. என் இளைய நிலா குழிக்குள் இறங்குகிறது.. வைரமுத்து கண்ணீர்

* எஸ்பிபி மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல்:

நீ எழுந்து வரவேண்டும் என கூறினேன், ஆனால் நீ வரவில்லை பாலு.
உனது மறைவால் பேச வார்த்தையின்றி தவிக்கிறேன். இளையராஜா

* எஸ்.பி.பி இறுதி ஊர்வலத்தை முழு அரசு மரியாதையுடன் நடத்த  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages