கும்முடிப்பூண்டி முன்னாள் பா.ம.க ஒன்றியச் செயலாளர், மாவட்ட துணைத் தலைவர் கவரைப்பேட்டை கி. ஜெயபால் இறப்பு செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

கும்முடிப்பூண்டி முன்னாள் பா.ம.க ஒன்றியச் செயலாளர், மாவட்ட துணைத் தலைவர் கவரைப்பேட்டை கி. ஜெயபால் இறப்பு செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

கும்முடிப்பூண்டி முன்னாள் பா.ம.க ஒன்றியச் செயலாளர், மாவட்ட துணைத் தலைவர் கவரைப்பேட்டை கி. ஜெயபால் இறப்பு செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி          
        
திருவள்ளூர் மாவட்டம், கும்முடிப்பூண்டி  ஒன்றிய பா.ம.க முன்னாள் செயலாளர், மாவட்ட துணைத் தலைவர் கவரைப்பேட்டை கி.ஜெயபால் இறப்பு செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. பா.ம.க தொடங்கிய காலத்திலிருந்து தனது இளம் வயது முதல் கொள்கை பற்றுடன் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். பா.ம.க அரசியல் பயிலரங்கத்தில் ஒன்றியச் செயலாளர் பயிற்சி பெற்று ஒன்றியச் செயலாளராக செயல்பட்டு வந்தவர். மருத்துவர் அய்யா அவர்கள்மீது மிகுந்த மரியாதையும் பற்றும் கொண்டிருந் தவர். மிகவும் அடக்கமானவர். எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவர். அடிக்கடி கைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் பேசி வந்தவர்.

உடல்நலக் குறைவாக மருத்துவமனையில் உள்ளதாக அவரது மகன் அன்பு என்னிடத்தில் தகவல் கூறியதை தொடர்ந்து மருத்துவ மனைக்கு பேசினோம். நேற்று மாலை பேசி இன்று வேறு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்தோம். திடீரென இறந்துவிட்டதாக காலையில் செய்தி கூறியது மிகுந்த வேதனையடையச் செய்துள்ளது.   கி.ஜெயபால் மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம்.
       
அவரை இழந்து மீளாத் துயரிலும் வேதனையிலும் வாடும் அவரது மனைவி, மகன்கள் அன்பு, அருண் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்
கொள்கிறோம். கைபேசியில் தொடர்புகொண்டு அவரது மகன் அன்பு மற்றும் குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages