அக்னிப்புரட்சி இன்றைய (27.092020) முக்கிய செய்திகள்.
* உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.3 கோடியாகும்.
இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 9.98 லட்சமாகும்.
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.4 கோடியாகும்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 65,360 ஆகும்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,80,808 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1280 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை 1,63,423 கொரோனா பாதிப்பு ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 80 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 9,313 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,706 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 5,25,154 பேர் குணமடைந்துள்ளனர்.
* திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை:
இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிப்பு.
சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு வீசியும் அவமதிப்பு.
சிலை அவமதிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* பாஜக கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறியது:
வேளாண் மசோதாவில் பிரதமர் மோடி விடாபிடியாக இருந்ததால் இந்த முடிவு.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதா விவசாயிகளுக்கு எதிரானது என எதிர்ப்பு.
வடஇந்தியாவில் விவசாயிகள் தொடர்ந்து பெரிய அளவில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முடிவு.
* சென்னையில் விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 13 காசுகள் குறைந்து ரூ.76.27 க்கும் விற்பனை.
* முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார்.
இவர் வெளி்யுறவு, பாதுகாப்பு, நிதித்துறை அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர் ஆவார்.
* பன்னாட்டு நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக ஹரிஹரா அருண் சோமசங்கர் நியமனம்: முதல்முறையாக தமிழருக்கு கிடைத்திருக்கும் புகழ்மிக்க பதவி
* திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு!: பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் கடுன் கண்டனம்
ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்?
திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்!
பெரியார் தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்! - திமுக தலைவர் மு க ஸ்டாலின்
* காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ்க்கு கொரோனா வெருவித் தொற்று. இவர் வெள்ளிக்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
* தமிழ் பத்திரிகை உலகில் மகத்தான புரட்சிகளை செய்த சாதனையாளர் சி.பா.ஆதித்தனார்.
சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த தினமான இன்று அவரது நினைவுகளை போற்றி வணங்குகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி.
தமிழ் பத்திரிகை உலகில் மகத்தான புரட்சிகளை செய்த சாதனையாளர் சி.பா.ஆதித்தனார்.
சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த தினமான இன்று அவரது நினைவுகளை போற்றி வணங்குகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி.
* அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தென்காசி, தஞ்சாவூர் உள்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்.
* கொரோனா தொற்றுக்கு மேலும் ஒரு காவல் அதிகாரி உயிரிழப்பு:
ஆம்பூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சண்முகம் கொரோனாவால் உயிரிழப்பு.
வாணியம்பாடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம்.
சண்முகம் குடும்பத்தினருக்கு திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் ஆறுதல்.
* ஐ.சி.எப். ரயில் பெட்டி தொழிற்சாலை பாதுகாப்பு படை வீரர் தூக்குபோட்டு தற்கொலை.
நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்ட போது பாதுகாப்பு பணியில் இருந்தவர் உதவி ஆய்வாளர் காஜா மொய்தீன்.
தீ விபத்து தொடர்பாக காஜா மொய்தீனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் தற்கொலை.
* தமிழகத்தின் வில்லுப்பாட்டு கலை குறித்து 'மன்-கீ-பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு:
இசையுடன் கதை சொல்லும் வில்லுப்பாட்டு முறை தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.
வில்லுப்பாட்டின் மூலம் புராண கதைகள் சொல்லும் பழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது.
ஒவ்வொருவரின் வீட்டிலும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.
சுதந்திரப் போராட்டம் குறித்த விஷயங்களை, குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் - பிரதமர் மோடி
குழந்தைகளுக்கு கதை சொல்லும் பெண்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
சென்னையில் வித்யா வீரராகவன் என்கிற பெண் கூட கதை சொல்லும் முறையை கடைபிடித்து வருகிறார் - பிரதமர் மோடி
* மியான்மாரில் சிக்கித் தவிக்கும் சென்னை மீனவர்கள் 8 பேர் விமானம் மூலம் வரும் 28 ஆம் தேதி டெல்லி அழைத்து வரப்படுகின்றனர்.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 8 மீனவர்களும் தங்கவைக்கப்பட்டு 29ஆம் தேதி தமிழகம் அழைத்துவர ஏற்பாடு-அமைச்சர் ஜெயக்குமார்.
* அசர்பைசான் மற்றும் ஆர்மீனியா நாடுகளுக்கு இடையே போர் பதட்டங்கள் அதிகரிப்பு. ஆர்மீனிய தரப்பில் பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழப்பு என தகவல்
அனைத்து இளைஞர்களையும் போருக்கு தயாராக இருக்கும்படி ஆர்மீனிய அரசின் முதன்மை அமைச்சர் ஆணை
* மராட்டிய மாநிலத்தில் பீடி, சிகரெட் சில்லறை விற்பனை செய்ய தடை
* திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்: காணொலிக் காட்சி வாயிலாக திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு.
பொதுக்குழுக் கூட்டத்தை காணொலி வாயிலாக பிரம்மாண்டமாக நடத்தினோம்.
50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்கும் வகையில் நடத்தியதற்கு எனது வாழ்த்துகள்.
கொரோனா காலத்திலும் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்த வேண்டும்.
சமூக வலைதளங்கள் மூலம் கொள்கைகளை பரப்பி வருகிறோம்.
* வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்.
மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குடியரசுத்தலைவர் நடவடிக்கை.
ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அரசிதழிலும் வெளியிட்டது மத்திய அரசு.
* கொரோனா காரணமாக மூடப்பட்ட
கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிகள் திறப்பு.
இரவு 8 மணியில் இருந்து செயல்பட
தொடங்குகிறது.
கடைகளுக்கு பூஜை செய்யும் மொத்த விற்பனை அங்காடி உரிமையாளர்கள்.
194 மொத்த விற்பனை கடைகள் மட்டுமே திறக்கப்பட உள்ளது.
அதிகாலை 5 மணி முதல் இரவு 9மணி வரை காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதி.
* திருப்பதி: திருக்கோயில் ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 9 ஆம் திருநாள், காலை தீர்த்தவாரி - சக்ர ஸ்நானம்......
* பண்பாடு, வரலாற்றை எழுதும் பணியை கல்வியாளர்கள், வரலாற்று அறிஞர்களிடம் விட்டுவிட வேண்டும்
கொரோனாவிலிருந்து மக்களை காக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் மத்திய அரசு அக்கறை காட்ட வேண்டும் - திருமாவளவன், விசிக
No comments:
Post a Comment