வன்னிய சொந்தங்களே! - Agnipuratchi

வன்னிய சொந்தங்களே!

Share This

வன்னிய சொந்தங்களே!

செப்.17 இடஒதுக்கீட்டு போராட்டத்தில் வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய நிகழ்ச்சிகளை கண்டு பெருமையடைகிறேன்.அந்த நாளில் "சுக்கா மிளகா சமூக நீதி"என்று நம்முடைய மக்கள் காவலர் டாக்டர் அய்யா எழுதிய கட்டுரை தொகுப்பு வெளியிடப்பட்ட நிகழ்ச்சி இணையத்தின் மூலம் கண்டு களித்தீர்ப்பீர்கள். இன்று தமிழ்நாட்டின் முதுபெரும் ராஜதந்திரியாக திகழ்கின்ற நமது டாக்டர் அய்யா அவர்களின் எண்ணத்தையே  ஈடேற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கின்றது .

சூது மதி படைத்த, சுயலாப சிந்தனை மிகுந்த அரசியல் வியாபாரிகளால் நம் வன்னிய இன மக்கள் வஞ்சிக்கப்படும் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது .இந்த நிலையே மாற்றிட மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை நாம் கொண்டுவர வேண்டும் .அதற்காக நாம் செய்ய வேண்டியது நம்மிடம் உள்ள மக்கள் சக்தியை ஒன்றுதிரட்ட வேண்டும்.
அந்த மக்கள் சக்தியை திரட்ட நம் வன்னிய இளைஞர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் . ஒரு மாவட்டத்திற்கு இரண்டாயிரம் பேர் இருபது வயதுள்ள இளைஞர்கள். +12, அதற்கும் மேலும் படித்தவர்கள், பட்டதாரிகள் இவர்களை தயார் செய்ய வேண்டும். இவர்கள் மூலமாக வன்னிய மக்களையெல்லாம் ஓரணியில் திரட்டி அதிகார மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

1.வன்னியர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வேண்டும்.

2.வன்னியர்கள் மீது சட்டத்தின் பெயரால் காவல் துறையினர் மூலம் அடக்கு முறையே பயன்படுத்தும் ஆணவ போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.

3.வன்னிய இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் குறையாமல் வருமானம் வேண்டும்.

4.கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு இருபது சதவிகித தனி ஒதுக்கீடு வேண்டும்.

5.நமதுஉயிர்நாடி தொழிலான விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் அதை லாபகரமாக செய்வது பற்றி நமது மக்கள் ஒரு கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் நிறைவேற்றபட நமது டாக்டர் அன்புமணியின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்.இதற்கான இளைஞர் படையினை திரட்ட கடலூர் மாவட்டத்தில் கிராமம் கிராமமாக நாளை செப்.26ம் தேதி முதல் சுற்று பயணம் மேற்கொள்கிறேன். ஒரு நாளைக்கு இருபது ஊர்களில்  250க்கும் குறையாத இளைஞர்கள் என  திட்டமிட்டு சுற்றுப்பயணம் தொடங்கப்படுகிறது.ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தில் பிரிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் ஒரு மாவட்டத்திற்கு இரண்டாயிரம் பேர் என  எட்டாயிரம் பேர் சேர்க்கப்படுவார்கள். இவர்கள் எல்லாம் மஞ்சள்  சீருடையில் டாக்டர் அய்யாவின் முன்னே அணிவகுத்து நிறுத்தப்படுவர்.இதை போல ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்யப்பட வேண்டும்.

வேலை தொடங்கிவிட்டது!
வேகம் குறையாமல் செயல்பட வேண்டு்ம்! விவேகத்தோடு செயல்படும் நமது செயல்திறன் மற்றவர்களை மலைக்க செய்ய வேண்டும்!
இதற்கான செயல்களை இன்றே தொடங்கிடுவீர்!

டாக்டர் அய்யாவின் பின்னே அணிவகுப்போம் ! டாக்டர் அன்புமணியின் ஆட்சி அமைப்போம்!
பு.த. அருன்மொழி
வன்னியர் சங்க தலைவர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages