சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
24. சேரமன்னன், கண்ணகியின் சிலையமைத்ததற்கு
இமயமலையிலிருந்து கல்லைக் கொண்டு
வரவேண்டும் எனச் சாற்றுதல்
மாலை வெண்குடை மன்னவன் விரும்பி
நூலறி புலவரை நோக்க, ஆங்கு அவர்,
ஒல்கா மரபில் பொதியில் அன்றியும்
வில் தலைக் கொண்ட வியன்போ் இமயத்துக்
கல்கால் கொள்ளினும் கடவுள் ஆகும்
கங்கைப் போ் யாற்றினும் காவிரிப் புனலினும்
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து எனப்
“பொதியில் குன்றத்துக் கல்கால் கொண்டு
முதுநீர்க் காவிரி முன்துறைப் படுத்தல்
மறத்தகை நெடுவாள் எம்குடிப் பிறந்தோர்க்குச்
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று
புன் மயிரச் சடைமுடி புலரா உடுக்கை
முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளரொடு பெருமலை அரசன்
மடவத்தின் மாண்ட மாபெரும் பத்தினிக்
“கடவுள் எழுத ஓர் கல்த ரான் எனின்,
வழிநின்று பயவா மாண்பில் வாழ்க்கை
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்,
முது குடிப் பிறந்த முதிராச் செல்வியை
மதி முடிக்கு அளித்த மகட்பாற் காஞ்சியும்,
தென்திசை என்றான் வஞ்சியோடு வடதிசை
நின்றுஎதிர் ஊன்றிய நீள்பெரும் காஞ்சியும்,
நிலவுக்கதிர் அலைந்த நீல்பெருஞ் சென்னி
அலர்மந் தாரமோடு ஆங்குஅயல் மலர்ந்த
வேங்கையோடு தொடுத்த விளங்குவிறல் மாலை
மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கு எனக்
குடை நிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும்
நெடுமா ராயம் நிலை இய வஞ்சியும்,
வென்றோர் விளங்கிய வியன்பெருவஞ்சியும்,
பின்றாச் சிறப்பின் பெருஞ் சோற்று வஞ்சியும்,
குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளியும்,
வட்கர் போக்கிய வான்பனந் தோட்டுடன்
புட்கைச் சேனை பொலியச் சூட்டிப்
பூவா வஞ்சிப் பொன்னகர்ப் புறத்து என
வாய்வாள் மலைந்த வஞ்சி சூடுதும் எனப்
தெளிவுரை:
இருங்கோ வேண்மாள் உரைத்ததைக் கேட்ட சேரமன்னன்
அமைச்சரை நோக்க, அதன் குறிப்பினை நன்கு உணர்ந்து கொண்ட
அமைச்சர், சிறப்பின் மிக்க பொதிய மலையிலும் அல்லது வில்
உருவம் பொறிக்கப்பெற்றுள்ள அகன்ற இமயமலையிலும். ஆக
ஒன்றினில் பத்தினித் தெய்வத்தின் சிலை அமைத்தற்குறிய
கல்லைப் பெறலாம். அதனைக் காவிரி அன்றிக் கங்கை ஆற்றிலும்
இட்டு நீர்ப்படை செய்யலாம் எனலானார்.
அமைச்சர் இவ்வாறு உரைக்கக் கேட்ட சேரமன்னன், போதிய
மலையில் கல்லைக் கொண்டு காவிரி ஆற்றில் நீர்ப்படை செய்து
புனிதப் படுத்துதல் வீரர் மரபில் வந்ததனக்கும் தன் குலத்தினர்க்
கும் பெருமை சேர்க்காது. சிவந்த சடைமுடியும், ஈர உடையும்
கொண்டு முப்புரிநூல் அணியப்பெற்றவர்களாய் மூன்று வகையான
தீயை வளர்த்து வேள்வி செய்யும் அந்தணர்கள் விளங்கும் இமய
மலையின் அரசன் பத்தினித் தெய்வத்திற்குரிய ஒப்பற்ற கல்லைத்
தாரானாயின் மாண்பின் மிக்க வாழ்க்கையுடையதாக அமையாது.
அவ்வாறு கல் தராத நிலையில் உயர்ந்த வாழ்க்கையை மேற்கோள்
ளாது வாழ்நாளை வீணாகக் ௧ழித்தவர்களாய் யாக்கை நிலையா
மையைக் காட்டியகாஞ்சியும்,தனது மகளான தாட்சாயணியைப்
பிறை சூரூடிய சிவபெருமானுக்குக் கொடுத்த மகட் பாற் காஞ்சியும்,
தென்திசையில் உள்ள வஞ்சி என்னும் இடத்திலிருந்து செல்ல
வடதிசையில் நின்று எதிர்ப்பவர்கள் கலங்குமாறு மந்தார
மாலையோடு வேங்கைப் பூவாலான வெற்றிமாலை சூடுகின்ற
மேன்மையையும் பெறுவது உறுதி எனச் சாற்றுதலானான்.
போர்புரியச் செல்லும் வீரர்கள் அடையாளப் பூக்களாகத்
திணைக்குரிய மாலைகளைச் சூடுவது மரபு ஆதலின் செங்குட்
டுவன், சிறப்புடைய வஞ்சியும் சிறப்புப்பெற்ற வீரர்களுக்குரிய
வஞ்சியும், பெருஞ்சோற்று வஞ்சியும், வெற்றிச் சிறப்பின்மிக்க
உரல் பாட்டும் பனம்பூமாலையும் வஞ்சி நகரின் புறத்தே வெற்றி
கொள்ளும் தன் வீரவாளுக்கு வஞ்சிமாலை சூடுவதாகவும் சபதம்
செய்தான்.
No comments:
Post a Comment