அக்னிப்புரட்சி இன்றைய (22.09.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.09.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.09.2020) முக்கிய செய்திகள்.

* உலகளவில் கொரோனா தொற்று:

பாதிப்பு - 3.14 கோடி.

குணமடைந்தோர் - 2.30 கோடி.

உயிரிழப்பு - 9.86 லட்சம்.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,52,674 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 989 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,57,614 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 8,947 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,406 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 4,97,377 பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்து ரூ.84.14க்கும், டீசல் விலை 13 காசுகள் குறைந்து ரூ.76.72க்கும் விற்பனை.

* இரவு முழுவதும் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடிய 8 சஸ்பெண்ட் எம்பிக்கள். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய தர்ணா.

ராஜ்யசபாவில் கடும் அமளியில் ஈடுபட்டதாக  8  எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஒ பிரைன், சஞ்சய் சிங் உள்ளிட்ட 8  எம்பிக்கள்  விடிய விடிய போராட்டம்.

* போராடும் எம்பிக்களுக்கு காலையில் தேநீர் கொண்டு வந்தார் ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ்.

தன்னை அவமதித்தவர்களுக்கும் தேநீர் வழங்க ஹரிவன்ஷ் முன்வந்தது அவரது மகத்துவத்தை காட்டுகிறது.

மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷை வாழ்த்துவதில் நாட்டு மக்களுடன் இணைகிறேன் - பிரதமர் மோடி.

* ரேஷன் கடைகளில் விற்பனை இயந்திர மாற்றம் காரணமாக செப்.25, 26க்கு பதில் 28, 29ல் ரேஷன் பொருட்களை பெறலாம் என அறிவிப்பு.

ஒருநாள் உண்ணாவிரதம்:
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

வேளாண் மசோதா விவாதத்தின் போது தன்னை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்நடந்து கொண்டதால் உண்ணாவிரதம்  என ஹரிவன்ஷ் அறிவிப்பு.

* எதிர்கட்சிகளுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உரிமை உள்ளது - மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு:

எம்பிக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையானது அவர்களின் செயலுக்கு எதிரானதே தவிர அவர்களுக்கு எதிரானது அல்ல - மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு.

* நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள், பிரதமர் மோடியுடன் சந்திப்பு: திமுக எம்பிக்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்தனர்.
8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற கோரிக்கை எனத் தகவல்.

* வேளாண் மசோதாவை மறுபரிசீலனை செய்யவும்  வலியுறுத்தல். பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு!":

"தமிழகத்திற்கு பாதகமான எந்த திட்டமும் அனுமதிக்கப்படாது என பிரதமர் மோடி உறுதி!".

மேகதாது, காவிரி விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரதமரிடம் அளித்த பின்னர் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டி.

* உழவர்கள் நலன் இம்மியளவும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் இராமதாசு அய்யா

இந்தியாவில் சபிக்கப்பட்ட சமுதாயம் என்றால், அது உழவர்கள் தான்
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையை முழுமையாக செயல்படுத்துக இராமதாசு அய்யா

* மீன்பிடி தொழிலும் ராமநாதபுரத்தில் மேற்கொள்ளப்படுகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

* குடிமராமத்து திட்டம் மூலம் விவசாயிகள் நல்ல பலன் கிடைத்துள்ளது - முதலமைச்சர்.

குடிமராமத்து பணிகளால் பருவகால மழைநீர் வீணாகாமல் சேமிக்கப் படுகிறது. ரூ.48 கோடி மதிப்பீட்டில் 308 குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நதிகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை - முதலமைச்சர்.

ஆர்.எஸ். மங்கலம் கண்மாய் நவீனப்படுத்தப்பட்டுள்ளது - முதலமைச்சர்.

* உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை:

உரிமை குழு அனுப்பிய புதிய நோட்டீசை எதிர்த்த வழக்குகள் விசாரணையில் இருந்து நீதிபதி ரவிச்சந்திரபாபு விலகியதை அடுத்து திமுக தரப்பில் முறையீடு.

திமுக தரப்பு வழக்கறிஞர் முறையீட்டை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஒப்புதல்.

* முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பாக கேரளாவை சேர்ந்த 3 பேர் மனு தாக்கல்:

கண்காணிப்பு குழுவால் ஏற்படுத்தப்பட்ட  துணைக்குழுவை கலைக்க கோரி மனுவில் கோரிக்கை.
பதிலளிக்க மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு.

* சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ்:
போராட்டத்தை கைவிடுவதாக எம்.பி.க்கள் அறிவிப்பு.

* வேளாண் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியதற்கு எதிராக மாநிலங்களவையில் அமளி.

அமளியில் ஈடுபட்ட 8 எம்.பி.க்கள் அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 8 எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, சவரன் ரூ.39,040-க்கு விற்பனை:
ஒரு கிராம் தங்கம் ரூ.4,880-க்கு விற்பனை.

* இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு தற்காலிக சர்வதேச விமான சேவை துவக்கம்.  ஜப்பான், கத்தார், அமெரிக்கா, பிரிட்டன் உள்பட 13 நாடுகளுக்கு செல்லலாம்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அல்லாதவர்களும் இந்தியா வரலாம்.

* சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கவாழ் இந்தியர் ஜாமீன் கோரிய வழக்கு; தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

* பொதுவிநியோக திட்டத்தில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது - மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் பேச்சு.

குடும்ப அட்டை தாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கியவர் ஜெயலலிதா - எஸ்.ஆர். பாலசுப்ரமணியன்.

குறைவான விலையில் உணவு வழங்க அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியம் வழங்கவும், வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான வழி முறைகளையையும் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் - எஸ்.ஆர். சுப்பிரமணியன்.

* 2015ம் ஆண்டிலிருந்து தற்போது வரை பிரதமர் மோடி மொத்தம் 58 நாடுகளுக்கு பயணம்!" - வெளியுறவுத்துறை அமைச்சகம்.

* அனைத்து பேருந்துகளும் தயார் நிலையில் உள்ளன; கொரோனா தொற்று குறைய, குறைய பொது மக்கள் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும்!. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்.

* தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறப்பு சாத்தியம் இல்லை  - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

* ஊரக உள்ளாட்சி பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர் களுக்கு இடர்படி வழங்க கோரிய வழக்கு மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* கல்லூரி, பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்கும் - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.

அக்டோபர் 31 ந் தேதிக்குள் முதலாம் ஆண்டு சேர்க்கையை நிறைவு செய்து நவம்பர் 1 முதல் வகுப்புகளை தொடங்கலாம்.

முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டும் - ரமேஷ் பொக்ரியால்.

* பொதுமக்கள் - காவல்துறை நல்லுறவை ஏற்படுத்தவும், குற்றங்களைத் தடுக்கவும் புதிய வாட்ஸ்அப் குழு திருச்சி மாநகரில் விரைவில் தொடக்கம். - திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் ஜே. லோகநாதன்.

* பெங்களூரு வன்முறை: NIA விசாரணை: கடந்த மாதம் 11ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற வன்முறை குறித்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமை விசாரணைக்கு ஏற்றது.

ஐஜி அந்தஸ்திலான மூத்த அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெறும் என தகவல்.

* அத்தியாவசிய பொருட்களின் பட்டியலிருந்து தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை அகற்றுவதற்கான அத்தியாவசிய (திருத்த) மசோதா மாநிலங்களவை யில் நிறைவேறியது.

* இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையின் போது பிராந்திய ஒத்துழைப்பு, இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்கக் கூடும் எனத்தெரிகிறது.

* திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 3 பேர் அடுத்தடுத்து மரணம்.

மின்தடையால் ஆக்சிஜன் விநியோகத்தில் தடை ஏற்பட்டு மரணம் என தகவல். மரணம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி.

நோய் பரவலை தடுக்க அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில்  வைக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர்.

ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைய உள்ளதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன் பெறுவார்கள் - முதலமைச்சர்.

நீர்நிலைகளை புதுப்பிக்கும் திட்டம் மூலம் ரூ.12 கோடியில் சீரமைப்பு பணி நடைபெறுகிறது - முதலமைச்சர்.

ரூ.4.20 கோடியில் பரமக்குடி மருத்துவமனையில் விபத்து சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது - முதலமைச்சர்.

ரூ.14 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும் காவேரி - குண்டாறு  இணைப்பு திட்டத்தின் கீழ் 1 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பயனடையும் - முதலமைச்சர்.

விவசாயம் பார்த்து வருகிறேன், அதனால் நான் ஒரு விவசாயி என்று தான் சொல்ல முடியும்.

ராமநாதபுரத்தை பசுமையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - முதலமைச்சர்.

* திருப்பூர் நல்லூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மரணம்:

ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் காவல் நிலையத்தில் மரணம். மணிகண்டனின் உடல் உற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம். விசாரணைக்காக வந்த கோட்டாட்சியரை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

* முகக்கவசம் அணியாததால் 9 நாட்களில் 2000-க்கும் மேற்பட்ட Metro பயணிகளுக்கு அபராதம்:

சுமார் 6 மாத இடைவெளிக்குப் பிறகு, டெல்லி மெட்ரோ, கடுமையான COVID-19 வழிகாட்டுதல்களுடன் தனது இயக்கத்தை செப்டம்பர் 7 ஆம் தேதி தொடக்கியது. முகக்கவசம் அணியாதவர்கள் மெட்ரோ ரயில்களில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தனி மனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் பல நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற Delhi Metro பயணிகளுக்கு அறிவுறுத்தியது.

இருப்பினும், 15 நாட்களுக்குள்ளேயே பலர் DMRC நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்பது தெரிய வரவே, DMRC நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (DMRC) 9 நாட்களில் (செப்டம்பர் 11-20 முதல்) 2,214 பயணிகளுக்கு ஸ்டேஷன் வளாகத்திலும், ரயில்களிலும் முகக்கவசம் அணியாததற்காக அபராதம் விதித்துள்ளது.

* இந்தி மொழி வெறி, எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது - திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை:

தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்.. சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு; எச்சரிக்கை.

இந்தி தெரியாது என்பதால் ஒய்வு பெற்ற மருத்துவருக்கு கடன் தர வங்கி அதிகாரி மறுத்தது தொடர்பாக மு.க‌. ஸ்டாலின் அறிக்கை.

* கொரோனா வார்டில் 3 பேர் மரணம் குறித்து  சுகாதார துறை அறிக்கை கேட்பு: சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்.

"திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வழங்கும் பணி ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டுள்ளது".

திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 3 பேர் அடுத்தடுத்து மரணம். குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிவு- மாவட்ட ஆட்சியர் தகவல்.

* சீன அதிபரை ‘கோமாளி’ என விமர்சித்த பிரபல தொழிலதிபர் - ஊழல் வழக்கில் 18 ஆண்டுகள் சிறைதண்டனை:

சீன அரசுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் குழுவின் முன்னாள் தலைவராக இருந்தவர் 69 வயதான Ren Zhiqiang. இவர் பதவியில் இருந்த போது ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவருக்கு 18 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர் தனது குற்றங்களை ஒப்புக் கொண்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்னதாக அவர், சீன அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா விவகாரம் பற்றி பேசுகையில், அதிபர் ஜி ஜின்பிங்கை 'கோமாளி' என விமர்சித்திருந்தார். விதிமுறைகளை மீறி கடும் வார்த்தைகளை பயன்படுத்தி வந்ததற்காகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதுமட்டுமல்லாமல் அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து அவர் கட்டுரைகளும் வெளியிட்டு வந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

* தேர்தலின்போது ஆன்லைன் மூலம் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது தொடர்பான கோரிக்கை மனுவை மத்திய அரசிடம் அளிக்கவும் மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.

* தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. நீட் தேர்வுக்கு எந்த மாணவரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. - வினோஜ், பாஜக இளைஞரணி மாநில தலைவர்.

* தமிழகத்திலும் ஆணவக்கொலைகள் நடக்கிறதா? - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி:

கோகுல்ராஜ் கொலை வழக்கு விவகாரத்தில் யுவராஜ்க்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

* அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி.

மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார் சோனியாகாந்தி.

* உளவுத்துறையினர் தன்னை மிரட்டியதாக வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவை சபாநாயகரிடம் புகார்:

தான் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் உளவுத்துறையினர் அத்துமீறி நுழைந்ததாகவும் எம்.பி. கதிர் ஆனந்த் புகார்.

*:சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,800-க்கு விற்பனை.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.4,850-க்கு விற்பனை.

* அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கு இல்லம் அமைக்க கோரிய வழக்கு:

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

* அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - முதலமைச்சர் பழனிசாமி:

தமிழகத்தில்தான் அதிக அளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேளாண் மசோதா பற்றி தெரியாமல் பேசுகிறார் ஸ்டாலின்.
வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

விவசாயிகளை பாதிக்க கூடிய எந்த சட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது.

தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டத்தை ஒட்டியே இந்த சட்டமும் உள்ளது - முதலமைச்சர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்; ஒப்பந்தத்தில் உள்ளபடியே விவசாயிகளுக்கு விலை கிடைக்கும்.

விவசாயிகள் ஒப்பந்தம் செய்துகொள்வது கட்டாயமல்ல. - முதல்வர் பழனிசாமி.

5 - 6 மாதத்தில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என ஸ்டாலின் கூறிவருகிறாரே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு;

“நாங்கள் ஜோசியம் பார்க்கவில்லை, மக்களை பார்க்கிறோம் என முதல்வர் பழனிசாமி பதில்.

பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் வேளாண் சட்டத்தில் குறைகாண முடியாது - முதலமைச்சர் பழனிசாமி.

எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள்.

காவல் மரணங்களில் விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியவரும் - முதலமைச்சர் பழனிசாமி.

* ஐபிஎல் கிரிக்கெட் தொடர் - ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு.

* புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்:
- மீன்வளத்துறை.

கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவுறுத்தலை தொடர்ந்து மீன்வளத்துறை உத்தரவு.

* திருப்பூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இருவர் உயிரிழந்தது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு:

இருவர் மரணத்துக்கும் அதிமுக அரசின் அலட்சிய போக்கே காரணம். மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது - ஸ்டாலின்.

* ஒரே நாடு ஒரே ரேஷன் தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை.

கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அமைச்சர்களுடன் தலைமைச் செயலகத்தில் நாளை பிற்பகல் முதல்வர் ஆலோசனை.
அத்துமீறி நுழைந்து என்னிடம் விசாரணை நடத்தினர்’:

வேளாண் மசோதா தொடர்பாக திமுக என்ன மாதிரியான போராட்டங்களை முன்னெடுக்கப்போகிறது என்று கேட்டனர்.

உளவுத்துறை அதிகாரிகள் எனக்கூறி என் அறைக்குள் நுழைந்த நபர்கள் குறித்து போலீசில் புகார். - எம்.பி கதிர் ஆனந்த்.

* வேளாண் மசோதாக்களை கண்டித்து வரும் செப்.28 இல் புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழக விவசாயிகளின் கஷ்டம் முதல்வர் பழனிசாமிக்கு தெரியவில்லை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

* ஐபிஎல் தொடர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ரன்கள் இலக்கு:
ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவிப்பு.

* எல்லையில் கூடுதலான படைவீரர்களை குவிப்பதை நிறுத்திக் கொள்வது என இந்தியாவும், சீனாவும் முடிவு செய்துள்ளன. - சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages