சிலப்பதிகாரம் அறிவோம்!- மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சிலப்பதிகாரம் அறிவோம்!- மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சிலப்பதிகாரம் அறிவோம்!- மருத்துவர் இராமதாசு அய்யா

12. கோவலன்மாதவியைப்பிரிந்து செல்லுதல்

கானல்வரி யான்பாடத்தான் ஒன்றின் மேல்மனம்வைத்து

மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என்

யாழின் இசை மேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின்

உவவு உற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக் கைஞெகிழ்ந்தன னாய்ப்

பொழுது ஈங்குக் கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது,

ஏவலாளர் உடன்சூழ் தரக் கோவலன் தான்போன பின்னர்த்

தாதவிழ் மலர்ச்சோலை ஒதை ஆயத்து ஒலி அவித்து

கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள்புக்கு

காதலனுடன் அன்றியே மாதவி தன் மனைபுக்காள்

ஆங்கு,

மாயிரு ஞாலத்து அரசு தலைவணங்கும்

சூழியானை சுடர்வாட் செம்பியன்235

மாலை வெண்குடை  கவிப்ப

ஆழி மால்வரை அகவையா எனவே!

தெளிவுரை:

மாதவி யாழிசை விளங்கப் பாடிய பாடல்களைக் கேட்ட
கோவலன் தான் பாடிய பாடல்களை ஒட்டிப் பாடாது வேறு ஒரு
ஆடவனை எண்ணிப் பாடுகின்றனளே! என்று ஐயம்கொண்டான்.
ஊழ்வினை யானது யாழின் மீது சுமர்ந்து வெருட்டியது. சந்திரன்
போன்ற முகத்தையுடைய மாதவியைப் பற்றியவாறு இருந்த தன்
கைகளைக் கோவலன் விலக்கிக் கொண்டான். நீண்ட பொழுது
கழிந்ததால் அங்கிருந்து அகன்று செல்லலாம் என்று உரைத்த
மாதவியின் சொற்களையும் செவியிற்கொள்ளாது அவன்
ஏவலர்கள் சூழ்ந்து வர அங்கிருந்து அகன்று சென்றனன்.

கோவலன் அங்கிருந்து சென்ற நிலையில் பூந்தாதுகள் விளங்கும்
கடற்கரைச் சோலையில் உள்ள தோழியர் தம் ஆட்டமும் பாட்டும்
அடங்க மாதவி மனம் வருந்தியவளாய்த் தனிவண்டியில்
ஏறியமர்ந்து தன் மாளிகையை அடைந்தாள்.
இந்திரவிழா நிறைவில் உலகத்தில் உள்ள அரசர்கள் எல்லோரும்
தலைவணங்க மேவும் பட்டத்து யானையும், சிறப்பின் ஒளிரும்
வீரவாளும் உடைய சோழமன்னனும், அவனது வெண்கொற்றக்
குடையும் வாழ்க! என மங்கல மரபின்படி யாவரும் வாழ்த்தினார்கள்.
                                          

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages