அக்னிப்புரட்சி இன்றைய (08.09.2020) முக்கிய செய்திகள்.
* உலகம் முழுக்க 27,477,062 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு.
இதுவரை உலகம் முழுக்க 896,397 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
19,570,737 பேர் கொரோனாவில் இருந்து விடுப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 194,008 பேர் உலகம் முழுக்க பாதிப்பு.
* இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 90 ஆயிரத்து 802-பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்து 80 ஆயிரத்து 423-ஆக உயர்ந்தது.
கொரோனா பலி எண்ணிக்கை 1,133-ஆகும். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கையும் 70 ஆயிரத்து 626 ஆக அதிகரித்து இருக்கிறது.
தொற்று பாதிப்புடன் 8 லட்சத்து 83 ஆயிரத்து 697-பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 33 லட்சத்து 23 ஆயிரத்து 951 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
*தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 5,684 பேர் பாதிப்பு
மொத்த பாதிப்பு(4.74.940)
சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 988 பேர் பாதிப்பு
இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 6,599(total 4.16.715)
தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணி்ககை 87 (மொத்தம் 8,012)
சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 988 பேர் பாதிப்பு
இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 6,599(total 4.16.715)
தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணி்ககை 87 (மொத்தம் 8,012)தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 5,684 பேர் பாதிப்பு
மொத்த பாதிப்பு(4.74.940)
* சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.85.04 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.78.48 க்கும் விற்பனை.
* ஒரு முறை ராஜா சாலையில் ஒரு பெரிய பாறாங்கல்லை வைத்து, யாராவது அந்த பாறாங்கல்லை அந்த வழியில் இருந்து அகற்றுகிறார்களா என்று மறைந்து பார்த்து கொண்டிருந்தார். நாட்டில் உள்ள சில செல்வந்த வியாபாரிகளும், அரசவையினரும் அந்த வழியாக சென்றனர், ஆனால் யாரும் அதை கண்டுக் கொள்ளவில்லை.
சாலைகளை நன்கு பராமரிக்கவில்லை என்று பலர் உரத்த குரலில் ராஜாவை குற்றம் சாட்டினர், ஆனால் அவர்களுள் யாரும் அந்த பாறாங்கல்லை நகர்த்தவில்லை.
காய்கறிகளை சுமந்து கொண்டு விவசாயி ஒருவர் அந்த வழியாக வந்தார். சாலையில் பாறாங்கல் இருப்பதைக் கண்டு, தனது சுமையை கீழே இறக்கி வைத்து, சாலையிலிருந்து பாறாங்கல்லை நகர்த்த முயன்றார், இறுதியாக அவர் வெற்றியும் பெற்றார்.
விவசாயி பிறகு தன்னுடைய காய்கறிகளை எடுக்கச் சென்ற போது, பாறாங்கல் இருந்த இடத்தில் பணப்பை ஒன்று இருப்பதை கவனித்தார். அவர் பணப்பையை திறந்த பார்த்த போது, அதில் பல தங்க நாணயங்களும், ராஜா எழுதிய ஒரு குறிப்பும் இருந்தது. அதில், சாலையில் இருந்து பாறாங்கல்லை அகற்றிய நபருக்கு தான் இந்த பொற்காசுகள் என்று.
நம் கடமையை நாம் செய்வோம்.. அதன் பலன் தானாக கிடைக்கும்...
* 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு.
http://www.dge.tn.gov.in/என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும்.
இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள் களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனவும் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
* அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் - அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியானது:
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என ஆக.30ந் தேதி ஏஐசிடிஇ கடிதம்.
உத்தரவை மீறினால் அண்ணா பல்கலை.யின் அங்கீகாரம் பறிக்கப்படும் - ஏஐசிடிஇ தலைவர்.
ஏஐசிடிஇ அமைப்பிடம் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை என உயர்கல்வி அமைச்சர் மறுத்து வந்த நிலையில் கடிதம் வெளியானது.
அரியர்ஸ் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தால் எந்த தொழில் நிறுவனமும், உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்காது - ஏஐசிடிஇ.
* கிழக்கு லடாக் எல்லையான பாங்கோங் த்சோ ஏரி பகுதியில், இந்திய - சீன ராணுவத்தினர் நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - சீனா இடையிலான லடாக் எல்லையில், கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதில் கல்வான் பள்ளத்தாக்கில் ஜுன் 15ம் தேதி நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தாலும், சீனா தரப்பில் இதுவரை அதுபற்றிய விவரங்களை வெளியிடாமல் உள்ளது. இந்நிலையில் கிழக்கு லடாக் எல்லையான பாங்கோங் த்சோ ஏரி பகுதியில், இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பதாக சீன ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
இதனால் இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. படைகளை விலக்கிக் கொள்ள இருதரப்பினரும் முன்வந்தபோது, இந்திய ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், இதுபோன்ற ஆபத்தான நகர்வுகளில் இந்தியா ஈடுபடக் கூடாது எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்தியாவின் முக்பாரி சிகரத்தை நோக்கி சீன ராணுவத்தினர் அத்துமீறி செல்ல முயன்றதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, இந்திய தரப்பில் இன்று விளக்க அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* கொரோனா தொற்று நோய் பாதிப்புகள் காரணமாக, கடன் தள்ளுபடி அறிவிப்புகளை அரசு வெளியிட இருப்பதாக பலர் புரளி கிளப்பி விடுவதாகவும்; சிலர் இதை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களிடம் பணம் பறிக்கும் செயலில் இறங்கி இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.
குறிப்பாக, நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இத்தகைய பிரச்னையை அதிகம் எதிர்கொள்வதாக இத்துறையை சேர்ந்த, 'சத்யா மைக்ரோ கேப்பிட்டல்' எனும் நிறுவனம் புகார் கூறியிருப்பதுடன், அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேக் திவாரி தெரிவித்து உள்ளதாவது:
தற்போதைய நிலையை பயன்படுத்தி, சில சமூக விரோத சக்திகள் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்து வருகிறார்கள். அவர்கள், அரசாங்கங்கள் கடன்களை தள்ளுபடி செய்ய இருப்பதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, கடன் தள்ளுபடி அறிவிப்பை விரைவில் வெளியிட அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் போராட இருப்பதாகவும் கூறி, நிறுவனத்தின் உறுப்பினர்களிடம், 500 அல்லது 1,000 ரூபாய் என வாங்கி வருகிறார்கள்.
வசூலாகும் இந்த பணத்தை தங்கள் சொந்த செலவுக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள். எனவே அரசு இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - தினமலர்
* பிரபல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி ஆந்திராவில் இன்று அதிகாலை காலமானார்
* அதிகார தீண்டாமையை கடைபிடிக்கிறதா திமுக? : பிரபல நாளேடு கட்டுரை
* நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும் தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்.
சென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.39,080-க்கு விற்பனை.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.4,885-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* ஏ.ஐ.சி.டி.இ. அனுப்பியதாக ஊடகங்களில் வெளியான மின்னஞ்சல் போலியானது -அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தரப்பில் விளக்கம்.
எனது தரப்பில் இருந்து எந்த மின்னஞ்சலையும் வெளியிடவில்லை- சூரப்பா. மின்னஞ்சல் குறித்து துணை வேந்தர் சூரப்பாவிடம் விளக்கம் கேட்கப்படும் என்று உயர்க் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
* பிறந்த நாளில் போலீஸாருக்கு விடுமுறை அளிக்கப்படும் - சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு.
பிறந்தநாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு மற்ற காவலர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். சென்னை காவலர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த காவல் ஆணையர்.
* லடாக்கில் சீன-இந்திய எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை:
- துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா கூறிய குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் மறுப்பு.
* மாணவர்களின் கல்வியுடன் அரசு விளையாடக் கூடாது: நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்.
தமிழை வளர்ப்பதற்கு டீ-ஷர்ட் போடவில்லை; இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கே டீ ஷர்ட் போட்டோம்" - உதயநிதி ஸ்டாலின்.
* திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகின்ற 9 ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். - மாவட்ட ஆட்சித தலைவர் மு.விஜயலட்சுமி.
* SCO கூட்டத்தில் பங்கேற்க ரசியாவிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார்
45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய-சீன எல்லையில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்திருக்கும் நிலையில், அவர் அங்கு சீன வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல்.
* தனியார் டிவியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சி ஒன்றிற்கு மத்திய அரசு மற்றும் ட்ராய் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து, அந்த நிகழ்ச்சி அந்த டிவியின் யுடியூப் தளத்தில் இருந்து அகற்றப்பட்டது.
தனியார் டிவியில் கடந்த ஞாயிறு இரவு ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் என்ற பெயரில் ஒருவர் பங்கேற்றார். தி.மு.க எம்.பி., கனிமொழி தயாரித்து கொடுத்த சிகப்பு டி - ஷர்ட் ஒன்றை அணிந்திருந்தார். "அந்த டி -ஷர்ட்டில் இந்தி தெரியாது போடா" - என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது. பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொண்டு கனிமொழி தயாரித்து கொடுத்த டிஷர்ட்டை அணிந்துக் கொண்டு கலந்துக் கொண்டது மத்திய அரசு கவனத்திற்கு சென்றது.
இதையடுத்து மத்திய அரசு, டிராய் அமைப்பு மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் டிவி நிர்வாகத்தை எச்சரித்தனர். இதையடுத்து ஞாயிறு அன்று ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியை யுட்யூபில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் இனிமேல் ராதாகிருஷ்ணனை நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை எனவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
* முல்லைப்பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாக உள்ளது:
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்.
பருவமழை காலத்தில் அணையின் நீர் மட்டத்தை 130 அடியாக குறைத்து நீரை தேக்ககோரிய மனுவுக்கு பதில்.
"முல்லை பெரியாறு அணையில் எந்த
அபாயத்தையும் மேற்பார்வை குழு
கண்டறியவில்லை".
சட்ட நடைமுறைகளுக்கு முரணான ரசூல் ஜாய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்".
* தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே ஒப்பந்தம் அவசியம்:
ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் புதிய படங்களை வெளியிட முடியாத சூழலுக்கு தள்ளப்படுவோம்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கு பல தயாரிப்பாளர்கள் இணைந்து
கடிதம்.
"qube/ufo-க்கான vff கட்டணத்தை தயாரிப்பாளர்கள் இனி செலுத்த முடியாது".
"திரையரங்கில் காட்டப்படும் விளம்பர வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டும்".
"ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் கிடைக்கும் தொகையில் தயாரிப்பாளர்களுக்கு பங்கு தரவேண்டும்".
* சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம்: ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டே நடவடிக்கை".
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தகவல்.
* தமிழக சட்டப்பேரவை கூட்டம் 3 நாட்கள் நடைபெறுகிறது:
செப். 14 முதல் 16ம் தேதி வரை நடத்த முடிவு. சபாநாயகர் தலைமையில் நடந்த
அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை அவசியம்.
* 100 சதவீத கட்டணம் வசூலித்ததாக 108 பள்ளிகள் மீது புகார்:
34 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது பள்ளிக்கல்வித் துறை 74 பள்ளிகள் மீது பெற்றோர் அளித்த புகார் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை.
* கடலூர்:விருத்தாச்சலம் அருகே கார் மீது மீன் ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்து. 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு - 5 பேர் படுகாயம்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் கோவிலுக்கு செல்லும் வழியில் விபத்தில் சிக்கிய சோகம்.
* மணல் கடத்தலை தடுக்க நீதிமன்றம் எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும் அதிகாரிகள் மதிப்பதில்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை: காவல்துறையினருக்கு தெரியாமல் நடப்பதில்லை - நீதிபதிகள்.
*பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளது - மருத்துவ அறிக்கை. எக்மோ, மற்றும் செயற்கை சுவாச சிகிச்சை தொடர்வதாகவும் மருத்துவ அறிக்கையில் தகவல்.
சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல்.
* தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கம்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் ஆலோசனை.
* புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய குழு அமைப்பு. 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு. பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் குழு அமைப்பு.
* செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளை திறப்பதறகான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
* ஊரடங்கை மீறுவோருக்கான அபராதத்தை யாரெல்லாம் வசூலிக்கலாம் என்ற விவரங்களை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை.
பொதுசுகாதாரத்துறையில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் அபராதம் வசூலிக்கலாம்.
வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் அபராதம் வசூலிக்கலாம்.
காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்களும் அபராதம் வசூலிக்கலாம் - அரசு.
No comments:
Post a Comment