சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
7. கோவலன்கலைத்திறம்விளங்க
மேலும்இசைத்துப்பாடுதல்!
துறைமேல் வலம்புரி தோய்ந்து
மணல்உழுத தோற்றம் மாய்வான்
பொறை மலிபூம் புன்னைப்பூ உதிர்ந்து
நுண்தாது போர்க்கும் கானல்
நிறைமதி வாள் முகத்து
நேர்கயல் கண் செய்த
உறைமலி உய்யா நோய் ஊர்சுணங்கு
மென்முலையே தீர்க்கும் போலும்!
நிணங்கொள் புலால் உணங்கல்
நின்றுபுள் ஒப்புதல் தலைக்கீடு ஆகக்
கணங்கொள் வண்டு ஆர்த்து உலாம்
கன்னிநறு ஞாழல் கையில்ஏந்தி
மணம் கமழ் பூங்கானல்
மன்னி மற்று ஆண்டு ஓர்
அணங்கு உறையும் என்பது அறியேன்
அறிவேனேல் அடையேன் மன்னோ !
10. வலைவாழ்நர் சேரிவலை உணங்கும்
முன்றில் மலர்கை ஏந்தி
விலைமீன் உணங்கல் பொருட்டாக
வேண்டு உருவம் கொண்டு வேறுஒர்
கொலை வேல் நெடுங்கண்
கொடுங்கூற்றம் வாழ்வது
அலைநீர்த் தண்கானல் அறியேன்
அறிவேனேல் அடையேன் மன்னோ
இவள்பெண்தானோ என வியந்துரைத்தல்
கயல்எழுதி வில்எழுதிக் கார்எழுதிக் காமன்
செயல் எழுதித் தீர்ந்த முகம் திங்களோ காணீர்!
திங்களோ காணீர்! திமில் வாழ்நர் சீறூர்க்கே
அங்கண் ஏர்வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே!
எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஒடும்
கறை கெழுவேல் கண்ணொடு கடும் கூற்றம் காணீர்!
கடுங்கூற்றம் காணீர் கடல் வாழ்நர் சீறூர்க்கே
மடம்கெழு மென்சாயல் மயல்ஆயதுவே!
புலவுமீன் வெண்உணங்கல் புள்ஒப்பிக் கண்டார்க்கு
அலவநோய் செய்யும் அணங்கு இதுவோ காணீர்!
அணங்கு இதுவோ காணீர் அடும்பு அமர்தண்கானல்
பிணங்கு நேர்ஐம்பால் ஓர்பெண் கொண்டதுவே!
தெளிவுரை:
கடற்கரையில் வந்து செல்லுகின்ற அலைகளின் வாயிலாகப்
பரவும் வலம்புரிச்சங்குகளின் சுவடுகளை மறைப்பது போன்று
ஆங்குள்ள புன்னை மரங்கள் பூந்தாதுகளை உதிர்க்கின்றன.
அத்தகைய பெருமை மேவும் சோலையில் முழுநிலவைப் போன்ற
முகமும் கயலைப் போன்ற கண்களும் உடைய தலைவியைக்
கண்டதால் தலைவன் அடைந்த காமநோய்க்கு மருந்தாவது
அவளது அழகிய மார்பகமே போலும்.
கடற்கரையில் உலர்த்தி வைக்கப்பட்டிருக்கும் மீன்களைக் கவர்
வதற்காக வருகின்ற பறவை இனங்களை விரட்டுவதற்கு எனக்
காவல்புரியும் பெண்களில்ஒருத்தி, தன்கையில்வைத்துள்ள
நறுமணம் கொள்ளும் பூங்கொத்துகளைக் கொண்டுள்ளனள்.
அப்பூங்கொத்தில்உள்ள பூக்களில்வண்டுகள்தேனை உண்பதற்காக
மொய்க்கின்றன. இத்தகைய மணம்வீசும்சோலையில்ஆடவரை
ஈர்க்கும்தெய்வ அணங்கு ஒருத்தி இருப்பதை அறியாமல்
இருந்தனனே! அவ்வாறு அங்கு ஒருத்தி இருப்பாள் என்று
அறிந்திருந்தால் நான் அங்குச் செல்லாதிருந்திருப்பேன்! மற்றும்
அவள் பால் காதல் கொண்டிருக்கவும் மாட்டேன்.
குறிப்பு:
இங்குக்கோவலன் வேறு ஒருத்தியின் பால் காதல் கொளவதாக
மாதவி கருதிய நிலையில் மனத்தில் சலனம் கொண்டவளாகிப்
பின்னர் வேறுபட்ட நிலையில் தானும் பாடுவதற்
அடிப்படையாயிற்று என்க.
கடற்கரையில் மீன்உலர்த்துதலையும் அத்தகைய மீன்களைக்
கவருவதற்கு வந்த பறவையினங்களையும் பற்றித் திருத்தொண்டர்
புராணம் அதிபத்த நாயனார் புராணத்தில் சேக்கிழார் சுவாமிகள்
உலர்ந்த மீன்களைக் கவரவந்த பறவைகளோடு சேர்ந்து வந்த '
அன்னப்பறவைகள் பரதவ குலப்பெண்களின் அழகிய நடையைக்
கண்டு நாணம் கொண்டு புன்னைமரக் கிளைகளிலேயே
தங்கியிருந்தன என்பதனைக் கூறும் வகையில்,
“உணங்கல் மீன்கவர் உறுநசைக்
குருகுடன் அணைந்த
கணங்கொள் ஒதிமம் கருஞ்சினைப்
புன்னையங் கானல்
அணங்கு நுண்ணிடை நுளைச்சியர்
அசை நடைக்கு அழிந்து
மணங்கொள் கொம்பரின் மருங்குநின்று
..... :“இழியல மருளும்”
என அருளியவாறும்காண்க,
வலைவீசி மீன்பிடித்தலைத்தொழிலாக உடைய பரதவர்கள்
வாழும்மனையின் முற்றத்தில் வலையை உலர வைத்தும், மீன்களை
விலை கூறி விற்கும் பெண்கள் மலர்களைக் கையில்ஏந்திய
நிலையில் வேறு ஒரு தோற்றமும் உடையவர்களாய்க் கொலைத்
தன்மையுடைய வேழ்படையைக் கண்ணாகக் கொண்டுள்ளனர்.
இவர்கள் இத்தன்மையில் கூற்றுவன் போல்வர் என்று அறிந்திலேன்.
அவ்வாறு அறிந்திருந்தால் நான் இங்கே வந்திருப்பேனோ?
குறிப்பு:
இப்பாடல் வாயிலாகக் கோவலன் தெரிவித்த கருத்தானது
தான் வேறு ஒருத்தியின் மீது நாட்டம் கொண்டுள்ளது போன்று
மாதவிக்குப் புலனாயிற்று. இதுவே அவன் மனம்வேறுபடுதல்
போன்று மொழிவதற்குக் காரணம் ஆயிற்று என்க.
இனி, இவள்பெண்தானோ என்று வியந்து உரைத்தலைச்
சாற்றுதலாம்.
மீனைக் கண் எனவும், வில்லைப் புருவம் எனவும், கரிய
மேகத்தைக் கூந்தல் எனவும், கொண்டு எழுதிய மன்மதன் இவை
தீர்ந்திலது என்று கூறும்படிச் சந்திரனை முகம் என்று படைத்தனன்.
இவள் வானில் இருந்தால் பாம்பு கவ்விவிடும் என்று அஞ்சிக்
கடற்கரைச் சோலையில் வந்து வாழும் முழு நிலவோ! எங்ஙனம்
ஏத்தி மகழ்வேன்?
கைவளையல்கள் ஒலிக்க வேல் போன்று சுழன்று ஓடும்
கண்களையுடைய இவள் கூற்றுவனோ? கடல்வளம் நிறைந்த
இச்சிற்றூரில் வாழும் இவள் பெண்தானோ?
புலால் நாற்றம் உடைய உலர்ந்த மீனைக் கவர வரும்
பறவைகளை விரட்டும் இவள் காதல்நோய் செய்யும் தெய்வப்
பெண்ணோ? நெய்தல் மலரானது கடற்கரைச் சோலையில் மேவும்
பெண் வடிவம் கொண்டனளோ!
இத்தன்மையில் கோவலன் வியந்து போற்றும் வகையில் காதற்சுவை விளங்கப்பாடினான்.
No comments:
Post a Comment