காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு:
சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன.
மக்கள் அதிகம் வந்து செல்லும் மாவட்டங்களாக இருப்பதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் நோய் பரவல் அதிகம்.
வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் அதிகம் வருகின்றனர்.
மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன.
காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை.
அறிகுறி உள்ளவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை.
தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 5,500 பேருக்கு பாதிப்பு.
7 ஆயிரம், 8 ஆயிரம் என்று இருந்த
பாதிப்பு எண்ணிக்கை குறைந்து
வருகிறது.
அரசின் நடவடிக்கையால்தான் நோய் பாதிப்பு குறைந்துவருகிறது.
அரசியல் ஆதாயத்திற்காக சிலர் வேண்டுமென்றே குற்றம்சாட்டுகின்றனர்.
மருந்தே இல்லாதபோதும், சுமார் 88 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இறப்பு எண்ணிக்கையும் தினமும் குறைந்துவருகிறது.
100, 110 என்று இருந்த உயிரிழப்பு எண்ணிக்கையும் பாதியளவுக்கு குறைந்துவிட்டது.
நேரடியாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.
மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனா கட்டுக்குள்வந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.
எதிர்க்கட்சிகள் அரசைக் குறைகூறி வருகின்றன.
மருத்துவர்கள்,செவிலியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கொரோனா ஆய்வுக்குப் பின் முதலமைச்சர் பேட்டி:
ஊரடங்கு காலத்தில் வேளாண்பணிகள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை.
ஏரிகள் குடிமராமத்து பணிகளின் மூலம் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
ராசியான காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் துவங்கப்பட்டன.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாலாற்றின் குறுக்கே ரூ.19 கோடியில் தடுப்பணை அமைக்கப்படுகிறது.
அரசு கட்டடங்கள், மகப்பேறு மருத்துவமனை கட்டடங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
பாலாற்றின் குறுக்கே மேலும் 2 தடுப்பணைகள் கட்டும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 38,000க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
ரூ.1,800 கோடிக்கு மேல் சுயஉதவி குழுவினருக்கு கடன்.
No comments:
Post a Comment