சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

15. கோவலன் தான் மதுரையைக் கண்டு வந்த
செய்தியைக் கவுந்தியடிகளிடம் கூற மாடலன்
என்னும் மறையவன் அங்கு வந்து  சேர்தல்

நிலத்தரு திருவின் நிழல்வாய் நேமி
கடம்பூண்டு உருட்டும் கெளிரியர் பெரும் சீர்க்
கோலின் செம்மையும், குடையின் தண்மையும்,

வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்
பதிஎழு அறியாப் பண்பு மேம்பட்ட
மதுரை மூதூர் மாநகர் கணடு ஆங்கு,
அறம்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் போழிளிடம் புகுந்து
தீது தீர்மதுரையும், தென்னவன் கொற்றமும்,
மாதவத்து ஆட்டிக்கு கோவலன் கூறுழித்
தாழ்நீர் வேலித்தலைச் செங்கானத்து
நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலம்கொண்டு
குமரியம் பெருந்துறை கொள்கையில் படிந்து
தமர்முதல் பெயர்வோன் தாழ்பொழில் ஆங்கண்
வகுந்து செல்வருத்தத்து  வான்துயர் நீங்கக்
கவுந்தி இடவயில் புகுந்தோன் தன்னைக்
கோவலன் சென்று சேவடி வணங்க,
நாவல் அந்தணன் தான் நவின்று உரைப்போன்.

தெளிவுரை: 

நிலவுலகத்தில் செல்வ வளம் பெருக ஆட்சிச் சக்கரத்தைச்
செலுத்திய பாண்டிய மன்னர்களின் செங்கோல் ஆட்சியில் நீதி
தவறாத தன்மையும், வெண்கொற்றக்குடையின் தண்ணருளும்,
வேற்படையின்ஆற்றலும்சிறந்து விளங்க மதுரை நகரம்பெருமை
யுடன்திகழ்கின்றது. எனவே அவ்வூரில் வாழ்பவர்கள் வேறு
ஊர்களுக்குச் சென்று வாழ வேண்டும் என்று நினையாதவர்களாத
உள்ளனர்.  இவ்வாறு கண்ட கோவலன், மதுரை நகரின் வெளிவாயிலுக்கு
வெளியே பூஞ்சோலையில் இருந்த கவுந்தியடிகளிடம்
பாண்டிய நாட்டின் பெருமையை உரைத்தனன்.
அப்போது கடலை வேலியாக உடைய தலைங்செங்காடு
என்னும் ஊரில் வாழ்பவனும் நான்கு வேதங்களையும் நன்கு கற்றுனர்ந்தவனுமான
மாடலன் என்னும் அந்தணன். அகத்திய முனிவர் மேவும். பொதிய மலையை
வணங்கிக் குமரிக்கடலில் புனித நீராடி தன்னுடைய ஊரை நோக்கித் திரும்பும் வழியில்
மதுரையை அடைந்தான். வழிநடந்த களைப்புத் தீர அவன்
சோலையொன்றைச் சார, ஆங்குக் கவுந்தியடிகள் இருக்கக் கண்டு
வணங்கினான். அம்மறையவனைக்கண்ட கோவலனும் அவனை
வணங்கித் தொழுதான். கோவலனைக் கண்ட மாடலன் வியப்பின்
மேவி அவனை நோக்கிக் கூறுதலானான்.

                    

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages