திருவண்ணாமலை பா.ம.க நகர முன்னாள் செயலாளர், மாவட்டத் துணை செயலாளர் அருணை சேகர் இறப்பு செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். - பாமக தலைவர் ஜி.கே.மணி
திருவண்ணாமலை அருணை சேகர் ஆரம்ப காலத்திலிருந்து பா.ம.கவில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். திருவண்ணாமலை நகரச் செயலாளர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் பொறுப்பு வகித்தவர். 1996 சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதி பா.ம.க வேட்பாளராக போட்டியிட்டவர். அவரது இறப்பு அவரது குடும்பத்திற்கும் பா.ம.கவுக்கும் பேரிழப்பாகும். பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அவரது மறைவால் துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது மகன்கள் பாலாஜி, கோபி, அமர்நாத் ஆகியோரிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினோம்.
No comments:
Post a Comment