மிகவும் தொலைவான நட்சத்திர பால்வெளி - இந்திய வானியலாளர்களுக்கு நாசா பாராட்டு: - Agnipuratchi

மிகவும் தொலைவான நட்சத்திர பால்வெளி - இந்திய வானியலாளர்களுக்கு நாசா பாராட்டு:

Share This

மிகவும் தொலைவான நட்சத்திர பால்வெளி - இந்திய வானியலாளர்களுக்கு நாசா பாராட்டு:

பூமியில் இருந்து 9.3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திர பால்வெளியை கண்டுபிடித்த இந்திய வானியலாளர்களுக்கு நாசா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

புனேவின் வானியல் ஆய்வு நிறுவனமான IUCAA-ஐ சேர்ந்த டாக்டர் கனக் சஹா தலைமையிலான வானியலாளர்கள் இதுதொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டனர். ’ஆஸ்ட்ரோசாட்’ என்ற விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள் மூலம் பூமியில் இருந்து 9.3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திர பால்வெளியில் இருந்து அதிக அளவிலான புற ஊதாக் கதிர்கள் வெளிப்படுவதை கண்டறிந்துள்ளனர். இதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு நாசா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. மனிதகுலத்தின் தோற்றம் குறித்த புரிதலை வளர்ப்பதற்கு இந்த முயற்சி உதவும் எனவும் பாராட்டியுள்ளது. இதுதொடர்பாக மேலும் கூறுகையில், ‘விஞ்ஞானம் என்பது உலக நாடுகளின் கூட்டு முயற்சி. இதுபோன்ற கண்டுபிடிப்புகள் நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே செல்கிறோம் என்பதை புரிந்து கொள்ள உதவும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

பிரபஞ்சத்தில் தொடக்கத்தில் இருந்த இருள் எப்படி முடிவுக்கு வந்தது, ஒளி எவ்வாறு தோன்றியது என்பதை தெரிந்து கொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவும் என IUCAA இயக்குநர் சோமக் ரே சவுத்ரி கூறியுள்ளார். ’ஆஸ்ட்ரோசாட்’ செயற்கைக்கோள் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட்டது நினைவுகூறத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages