புதுடில்லி : ஜி.எஸ்.டி., இழப்பீடு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., ஆளாத மாநிலங்களை சேர்ந்த, 6 மாநில முதல்வர்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். - Agnipuratchi

புதுடில்லி : ஜி.எஸ்.டி., இழப்பீடு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., ஆளாத மாநிலங்களை சேர்ந்த, 6 மாநில முதல்வர்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

Share This

புதுடில்லி : ஜி.எஸ்.டி., இழப்பீடு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., ஆளாத மாநிலங்களை சேர்ந்த, 6 மாநில முதல்வர்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, நாடு முழுதும், 2017ல் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, ‘ஏற்கனவே இருந்த வரி விதிப்பு முறையில் இருந்து புதிய முறைக்கு மாறுவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பு ஈடு செய்யப்படும்’ என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுவரை வசூலான வரியில், மாநிலங்களுக்கான பங்கை பகிர்ந்தளிப்பதிலும் நிலுவை உள்ளது. இந்தப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் தலைமையிலான, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்தது.

அதில், நிலுவையில் உள்ள தொகைகளை, ரிசர்வ் வங்கியில் இருந்து மாநிலங்கள் கடனாக பெறும் இரண்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. வரி வசூலில் கடுமையான இழப்பு இருந்தாலும், மாநிலங்களுக்கான நிலுவைத் தொகை நிச்சயம் முழுதுமாக அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், மாநிலங்கள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெற்று, திருப்பி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., அல்லாத மாநிலங்களை சேர்ந்த 6 மாநில முதல்வர்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

தமிழக முதல்வர் பழனிசாமி, டில்லி முதல்வர் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் சட்டீஸ்கர் முதல்வர் பூபேஸ் பேகல் ஆகிய 6 முதல்வர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.



‘தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகை, 12 ஆயிரத்து, 250 கோடி ரூபாயை, உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என, பிரதமருக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், இந்த புதிய கடன் திட்டம், மாநிலங்களுக்கு மேலும் சுமையாகவே இருக்கும் என்றும், 2022ம் ஆண்டுக்குப் பின்னரும் செஸ் வரியை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எழுதியுள்ள கடிதத்தில், செஸ் வசூலில் கடனை உயர்த்தி அசலும், வட்டியும் வழங்க வேண்டும் எனவும், தெலுங்காவுக்கு மட்டும் 83 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி., புதிய அறிவிப்பு, குழப்பமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. வேலை வாய்ப்புகளை பலர் இழந்துள்ளனர். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இந்த சூழலில், மாநிலத்திற்கான நிலுவை தொகையை திருப்பி செலுத்தும் வசதி தேவை. இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages