மத்திய அரசு தனிப்பட்ட முறையில் லாக்டவுன் முடிவை எடுக்க முடியாது: மம்தா பானர்ஜி
இந்தியாவில் கொரோனா தொற்றை தடுக்க மார்ச் மாதம் 25-ந்தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மே மாதத்தில் இருந்து மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஆனால், கொரோனா தொற்று குறையாத மாநிலங்கள் சில தளர்வுகளை அளிக்க விரும்பவில்லை. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருந்தது.
கடந்த மாதம் தொடக்கத்தில் இ-பாஸ் தேவையில்லை, ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு வாகனங்கள், நபர்கள் செல்ல தடையில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதில் பெரும்பாலான மாநிலங்களுக்கு உடன்பாடு இல்லை.
மத்திய அரசின் இந்த தளர்வுகளை ஏற்க மறுத்தது. அதன்பின் அனைத்து மாநில முதன்மை செயலாளர்களுக்கும் மத்திய அரசு சார்பில் கடிதம் எழுப்பப்பட்டது.
இந்நிலையில் மாநிலங்களில் லாக்டவுனை அமல்படுத்தும் முடிவை மத்திய அரசு தானாகவே எடுக்க முடியாது என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில் ‘‘மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தும் முடிவை மத்திய அரசு தானாகவே எடுக்க முடியாது. மாநில அரசுக்கு அமல்படுத்தும் அதிகாரிகள் உள்ளது. அதன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். உத்தரவுகளை வழங்குவது மட்டும் போதாது. களத்தில் என்ன நடக்கிறது என்பது மாவட்ட நிர்வாகத்திற்குத்தான் தெரியும். இதுதான் கூட்டாச்சியின் அடிப்படை தத்துவம். ஆகவே, அனைத்திலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.
No comments:
Post a Comment