சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
16. மாடலன், மாதவியின் மகளுக்கு மணிமேகலை
என்னும் பெயர்வைத்த காரணத்தை உரைத்தல்
“வேந்துறு சிறப்பின் விழுச்சீர் எய்திய
மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால் வாய்க் குழவி பயந்தனள் எடுத்து
வாலா மைந்நாள் நீங்கிய பின்னர்,
மாமுது கணிகையர், “மாதவி மகட்கு
நாம நல்லுரை நாட்டுதும்”' என்று
தாம் இன் புறூஉம் தகைமொழி கேட்டுஅங்கு
“இடையிருள் யாமத்து எறிதிரைப் பெருங்கடல்
உடைகலப் பட்ட எங்கோன் முன்நாள்
புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின்,
நண்ணுவழியின்றி நாள்சில நீந்த
இந்திரன் ஏவலின் இங்கு வாழ்வேன்
வந்தேன் அஞ்சல் மணிமே கலையான்
உன்பெரும் தானத்து உறுதி ஒழியாது
துன்பம் நீங்கித் துயர்க்கடல் ஒழிகென
விஞ்சையில் பெயர்த்து விழுமம் தீர்த்த
எம்குல தெய்வப் பெயர் ஈங்கு இடுக என
அணிமே கலையார் ஆயிரம் கணிகையர்.
மணிமே கலை யென வாழ்த்தியஞான்று,
மங்கல மடந்தை மாதவி தன்னோடு
செம்பொன் மாரி செங்கையில் பொழிய
தெளிவுரை:
மாடலன் என்னும் மறையவன் கோவலனை நோக்கி,
“கோவலனே! அரசனால் தலைக்கோல் சிறப்பும் மற்றும் பெரும்
புகழும் பெற்ற மாந்தளிர் போலும் மேனியுடைய மாதவி ஒரு
பெண் குழந்தையைப் பெற்ற நிலையில் அதன் சூதகநாள் கழிந்த
பின்னர்ச் சித்திராபதி முதலிய மூத்தமாதர்கள் அக்குழந்தைக்கு
நல்ல பெயரைச் சூட்டுதல் வேண்டும் எனத் தெரிவித்தார்கள்.
அப்போது நீ, ஒரு சமயம் நள்ளிரவில் நடுக்கடலில் என் மூதாதை
யர்கள் சென்றபோது மரக்கலம் உடைந்து அவர்கள் அலைகடலில்
தவித்தார்கள். அப்போது ஒரு பெண் தெய்வம் தோன்றி, தான்
இந்திரனது ஏவலால் அனுப்பப்பட்டு, மணி பல்லவம் என்னும்
தீவில் வாழ்பவள். அவர்கள் முற்பிறவியில் புண்ணியச் செயல்களைச்
செய்தமையால் காப்பாற்ற வந்ததாகக் கூறி ஒரு மந்திரத்தால்
கடலிலிருந்து எடுத்துக் கரையில் சேர்த்துக் காப்பாற்றியது.
ஆதலால் என் முன்னோர் அடைந்த துன்பத்தைப் போக்கிய எம் குலதெய்வப் பெயரான மனிமகளை என்பதை என்குல மகளுக்குச் சூட்டுக என் உரைத்தனை. உடனே ஆயிரம் பெண்களும் மணிமேகலை எனக்கூறிப் பெயர்சூட்டி வாழ்த்தினார்கள்.
அப்போது உன் கை சிவக்குமாறு பொன்னை அள்ளிப் பூ மழை எனப் பொழிந்தனை என்று கூறினான்
No comments:
Post a Comment