அக்னிப்புரட்சி இன்றைய (02.10.2020) முக்கிய செய்திகள்.
* உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 3,44,64,456 பேர் பாதிப்பு.
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,27,042 பேர் மரணம்.
உலகில் கொரோனா தொற்றில் இருந்து 25,647,795 பேர் குணமடைந்தனர்.
உலகில் கொரோனா பாதிப்புடன் தற்போது 77,89,619 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,595 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,08,885 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,278 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,70,025 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 67 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 9,653 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,603 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 5,52,938 பேர் குணமடைந்துள்ளனர்.
* சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் 15 காசுகள் குறைந்து ரூ.75.95 க்கும் விற்பனை.
* காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.
மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் உன்னத எண்ணங்களிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
வளமான மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை உருவாக்குவதில் காந்தியின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்- பிரதமர் மோடி.
* காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து:
உண்மை, அகிம்சை மற்றும் அன்பு பற்றிய காந்தியின் சிந்தனை சமூகத்தில் நல்லிணக்கத்தை உண்டாக்குகிறது.
காந்திய சிந்தனை உலக நலனுக்கான பாதையை அமைக்கிறது. மகாத்மா காந்தி மனிதகுலத்திற்கு உத்வேகம் அளிப்பவர்- குடியரசுத் தலைவர்.
* கொரோனா காலத்தில் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் வகுப்புகள் செல்லும்:
ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி இல்லை என மருத்துவ கவுன்சில் கூறியதற்கு தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம்.
* தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை காமராசர் - காமராசரின் 45வது நினைவு தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி புகழாரம்.
சீனாவில் சுற்றுலா தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் பலி.
ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் நகரின் தீம் பூங்காவில் தீ விபத்து.
பனி சிற்பங்களின் கண்காட்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் வரை படுகாயம்.
* அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கொரோனா தொற்று உறுதி!
அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா.
கொரோனா சிகிச்சை தனக்கும், தனது மனைவிக்கும் உடனடியாக தொடங்கியுள்ளதாகவும் டிரம்ப் தனது ட்வீட் பதிவிட்டு உள்ளார்.
* கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் மீண்டார் : மருத்துவமனை அறிக்கை.
விஜயகாந்த், பிரேமலதா இருவரும் கொரோனாவில் இருந்து மீண்டனர்.
உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள் - மருத்துவனை.
* அரசின் தடையை மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரட்டூர் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு.
100 பெண்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு. கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ஸ்டாலின்.
* மகாத்மா காந்தியின் பிறந்த நாள்:
சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை.
வருகிற 6ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ க் கள் அனைவரும் சென்னைக்கு வர அழைப்பு. அதிமுக எம்.எல்.ஏ க்களுக்கு தலைமை கழகம் உத்தரவு.
7ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அழைப்பு.
அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு 7ம்தேதி வெளியாக உள்ளது.
* வணக்கம். மிக முக்கிய சுதந்திரப் போராட்ட போராளியான கடலூர் அஞ்சலை அம்மாள் வரலாற்றை செய்தியாளர் ராஜாவாசுதேவன்
300 பக்கங்களில் விறுவிறுப்பான நடையில் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய வரலாற்றுப் புதினம் இது..... தொடர்புக்கு: தழல் பதிப்பகம்
+91 93608 60699.
* திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சியில் தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக வழக்கு.
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு.
சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், பஞ்சாயத்து தலைவர் கந்தபாபு மீதும் வழக்கு. 143, 188 ஆகிய பிரிவின் கீழ் வெள்ளவேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.
* புதுச்சேரியில் சந்தேக வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பு-கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு விளக்கம்:
புதுச்சேரி- காரைக்காலில் வரும் 5ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.. 8ம் தேதி முதல் மாணவர்களுக்கான சந்தேக வகுப்புகள் நடைபெறும்.
திங்கள் - சனி கிழமை வரை வகுப்புகள் நடைபெறும் 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கு முதல் மூன்று நாட்களும். 9ம் வகுப்பு 11ம் வகுப்புகளுக்கு 3 நாட்களும் வகுப்புகள் நடைபெறும்.
காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
மாணவர்களுக்கு வருகை பதிவேடு எடுக்கப்படாது, பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும்- கல்வித்துறை இயக்குனர்.
* சென்னையில் அக்டோபர் 5-ம் தேதி முதல், அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம்:
தெற்கு ரயில்வே அறிவிப்பு.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைகாட்டி பயணிக்கலாம்.
சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
* நாளை முதல் கூடுதல் விலையில் நெல் கொள்முதல்:
தமிழகத்தில் 523 கொள்முதல் நிலையங்களில் நாளை முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும்.
குவிண்டாலுக்கு கூடுதலாக ரூ.53 என்ற விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் - அமைச்சர் காமராஜ்.
* உ.பி - ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம்: எஸ்.பி, டிஎஸ்பி சஸ்பெண்ட்’:
சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர், அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு.
முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது உ.பி அரசு.
* சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி!
SRH - 164/5 (20 overs)
* அதிக ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்று, மகேந்திர சிங் தோனி சாதனை:
முன்னாள் கேப்டன் தோனி, அதிக ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
SunRisers Hyderabad-க்கு எதிராக தனது 193-வது போட்டியில் களமிறங்கிய தோனி, ஐ.பி.எல் தொடரில் அதிகப் போட்டிகளில் விளையாடிய Suresh Raina-வின் சாதனையை சமன் செய்தார்.
சி.எஸ்.கே வீரர் Suresh Raina இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய நிலையில், 192 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவும், அடுத்த போட்டியில் ரெய்னாவின் சாதனையை சமன் செய்வார்.
No comments:
Post a Comment