அக்னிப்புரட்சி இன்றைய (04.10.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (04.10.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (04.10.2020) முக்கிய செய்திகள்.

* உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.51 கோடி.

கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10.37 லட்சமாகும்.

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.61 கோடியாகும்.

மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66,267.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,19,996 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,348 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,72,773 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 66 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 9,784 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,558 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 5,58,534 பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னையில் விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

* பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவின் சுற்றுலாத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சி.டி.ரவி.

முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

* எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை-அமெரிக்க அரசு அதிரடி உத்தரவு.

புதிய கொள்கை அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு.

* ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை - நீதி கேட்டு ஆளுநர் மாளிகை நோக்கி திமுக நாளை பேரணி.

நாளை மாலை 5 மணிக்கு ஒளியேந்தி ஆளுநர் மாளிகை நோக்கி திமுக பேரணி.

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் பேரணி நடைபெறுகிறது.

* கொரோனா சமயத்தில் வேளாண் மசோதாக்களை சட்டமாக்க வேண்டியதின் அவசியம் என்ன?:

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 3 வேளாண் சட்டங்களையும் குப்பைத்தொட்டியில் வீசுவோம்.

ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். -
ராகுல்காந்தி.

* ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

* லடாக் எல்லையில் நிலவும் பதற்றம்: இந்தியா-சீனா இடையே வரும் 12ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை:

லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்துக்கு தீர்வு காண்பது குறித்து வரும் 12ம் தேதி, ராணுவ கமாண்டர்கள் நிலையில் இந்தியாவும் சீனாவும் மீண்டும் பேச்சு நடத்தவுள்ளன.

லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் நேரிட்ட மோதலை அடுத்து இருதரப்பும் அங்கு வீரர்களை குவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

இந்த பதற்றத்தை தணிக்க இருநாடுகளும் இதுவரை 6 கட்டங்களாக, ராணுவ கமாண்டர்கள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இருப்பினும் லடாக் எல்லையில் பதற்றம் இன்னும் தணியாமல் உள்ளன.

இந்நிலையில் லடாக்கின் கிழக்கு பகுதியில் 12ம் தேதி இந்தியா, சீனா ராணுவ உயரதிகாரிகள் நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* ஜூலை 2021க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த இலக்கு.

கொரோனா தடுப்பூசிகள் தயாரானவுடன் நியாயமாகவும், சமமான அளவிலும் விநியோகம் செய்யப்படும்- மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.

* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை ஆளுநரை சந்திக்கிறார்:

நாளை மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக 7ஆம் தேதி அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் ஆளுநருடன் சந்திப்பால் பரபரப்பு.

* நாமக்கல் மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட 1,619 பேரிடம் ரூ.62.58 லட்சம் வசூல்: - மாவட்ட ஆட்சியர் மெகராஜ்.

முறைகேட்டில் தொடர்புடைய ஒப்பந்த ஊழியர்கள் 36 பேரை பணியிட மாற்றம் செய்தும் ஆட்சியர் நடவடிக்கை.

* ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி:

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 179 ரன்கள் இலக்கு.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில்; சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages