அக்னிப்புரட்சி இன்றைய (05.10.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (05.10.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (05.10.2020) முக்கிய செய்திகள்.

* உலக அளவில் கொரோனாவிற்கு  35,387,541 பேர் பாதிப்பு.

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 26,609,676 ஆக உயர்வு.

கொரோனாவினால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,041,538 பேராக அதிகரிப்பு.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 7,736,327 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்தியாவில் கொரோனாவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 74,442 பேர் பாதிப்பு:

நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,23,816 ஆக உயர்வு.

கடந்த 24 மணி நேரத்தில் 903 பேர் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் கொரோனாவிற்கு 1,02,685 பேர் மரணமடைந்துள்ளனர்.

55,86,704 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

* தமிழகத்தில் புதிதாக 5,395 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 6,25,391 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழப்பு.

மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 9,846. சென்னையில் மேலும் 1,367 பேருக்கு கொரோனா பாதிப்பு.
சென்னையில்  மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 4,028 பேருக்கு தொற்று.
தமிழகத்தில் இன்று 5,572 பேர் டிஸ்சார்ஜ்!

* சென்னையில் விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

* புதுச்சேரியில் நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் மணிகண்டன் வெட்டிக் கொலை. இச்சம்பவம் குறித்து உருளைப்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

* 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்றுமுதல் தினமும் விசாரணை:

சிபிஐ, அமலாக்கத்துறை தொடுத்த மேல்முறையீடு வழக்கில் இன்றுமுதல் தினசரி பிற்பகல் 2.30க்கு விசாரணை நடத்தப்படவுள்ளது.

* சென்னையில் அரசு ஊழியர்களுக்காக புறநகர் மின்சார ரயில்சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது:

கொரோனா முன்களப் பணியாளர்களும் புறநகர் மின்சார ரயிலில் செல்லலாம்; பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

* சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,542 கனஅடியில் இருந்து 12,903 கனஅடியாக அதிகரிப்பு:

அணையின் நீர்மட்டம் 98.22 அடியாகவும், நீர் இருப்பு 62.55 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. அணையிலிருந்து பாசனத்தேவைக்காக டெல்டாவுக்கு 6,000, கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 850 கனஅடி நீர் திறப்பு.

* இன்றுமுதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:

42 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கிறது.

காணொலியில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

* உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.

5 நாள் அறிவிக்கப்படும் பரிசுகளில் முதல்நாளான இன்று மாலை 3 மணிக்கு மருத்துவத்துறைக்கு நோபல் பரிசு அறிவிப்பு.

நாளை இயற்பியலுக்கும், அக்.7 வேதியலுக்கும், அக்.8 - ல் இலக்கியத்திற்கும் நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளன.

அக்.9ல் அமைதிக்கான நோபல் பரிசும், அக்.10ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படுகின்றன.

அதன் படி 2020-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.

ஹெபாடிடிஸ் சி வைரஸ் என்ற கிருமியை கண்டுபிடித்ததற்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிப்பு.

ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹங்டன், சார்லஸ் எம்.ரைஸ் ஆகியோருக்கு மருத்துவததிற்கான நோபல் பரிசு அறிவிப்பு.

* அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ட்வீட்:
தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே இதுவரை முடிவுகளை எடுத்துள்ளேன், இனியும் அவ்வாறே இருக்கும். - துணை முதல்வர் ஓபிஎஸ்.

வரும் 7ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ட்வீட்.

* புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

இன்று முதல் 7ம் தேதி வரை வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு, தனிநபர் இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்படவுள்ளன. வாரத்தில் 6 நாட்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும்.

9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ள விருப்பத்தின் பேரில் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம்.

திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில், 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. 

* தமிழகத்தில் அக்.2ல் ரத்துசெய்யப்பட்ட கிராம சபை கூட்டத்தை நடத்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு.

* இன்று மாலை சென்னை திரும்புகிறார் ஓ.பி.எஸ்:

கடந்த 2ம்தேதி சொந்த ஊருக்கு சென்றிருந்த ஓ.பி.எஸ், இன்று சென்னை திரும்புகிறார்.

நாளை மறுநாள் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இன்று சென்னை திரும்புகிறார் ஓ.பி.எஸ்.

அதிமுக தொண்டர்கள் நலன் கருதி முடிவெடுக்க உள்ளதாக இன்று காலை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

* தேனி நாகலாபுரத்தில் நகரும் நியாய விலைக்கடை திறப்பு நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ் பங்கேற்றார். ஊரில் இருந்த சில நாட்களில் அதிமுக நிர்வாகி களையும் - ஓ.பி.எஸ் சந்தித்தார்.

* கொரோனா காலத்தில் வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரம்:

விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம்.
ஒரு வார காலம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.

அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம்.

* புதிய கல்விக் கொள்கை தொடர்பான நிபுணர் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது:

பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கல்வியாளர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் பங்கேற்பு.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.38,416க்கு விற்பனை.

* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் வருகிற 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கக்கூடும்.

* நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஜே.இ.இ முதன்மை தேர்வும், கடந்த செப்டம்பர் மாதம் அட்வான்ஸ்டு தேர்வும் நடந்து முடிந்த நிலையில், இந்த தேர்வை நாடு முழுவதும் 1.6 லட்சம் பேர் எழுதினார்கள்.

தற்போது இந்த தேர்வுக்கான முடிவுகள் result.jeeadv.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

* தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: - உயர்நீதி மன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல்.

* சென்னை:வரும் 7ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை:

அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

* ஜம்மு காஷ்மீரின் புல்வாமா அருகே தீவிரவாதிகளின் தாக்குதலில் 2 சி ஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்.

புல்வாமாவில் சி ஆர்பிஎப் வீரர்கள் முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூட நடத்தினர்.

* உத்தரப்பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த பெண்ணுக்கு நீதி கேட்டு திமுக பேரணி.

ஆளுநர் மாளிகை நோக்கி திமுக மகளிர் அணி எம்பி கனிமொழி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி.

ஹத்ராஸ் போன்ற பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை - திமுக தலைவர் ஸ்டாலின்.

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம் உ.பி. இன்று ரத்த பிரதேசமாக மாறிக் கொண்டிருக்கிறது.
- திமுக தலைவர் ஸ்டாலின்.

* எஸ்ஐ தேர்வு இறுதி பட்டியலை வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை:

பட்டியலை வெளியிடவோ, பணி நியமனம் செய்யவோ கூடாது என நீதிபதிகள் அறிவுரை.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு
வாரியத்துக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு.

கடந்த ஜனவரி 12, 13ம் தேதிகளில் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.

எழுத்து தேர்வில் முறைகேடு நடந்ததாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு.

மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, இடைக்கால தடை விதித்து
உத்தரவு.

* உ.பி. பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு நடந்த பேரணியில் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி கைது.

ஆளுநர் மாளிகை நோக்கி போலீசாரின் தடையை மீறி பேரணி சென்றபோது திமுக மகளிரணியினர் கைது.

* வருமானத்திற்கு அதிகமாக ரூ.74.93 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மீது சிபிஐ வழக்குப்பதிவு.

14 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.57 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்; விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

* மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்க மத்திய அரசு முடிவு.

மாநிலங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை வழங்க உள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

இன்று இரவே ஜிஎஸ்டி நிலுவை வழங்க
உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பு. இதுவரை வசூலிக்கப்பட்ட இழப்பீட்டு வரியில் ரூ.20 ஆயிரம் கோடியை வழங்க முடிவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages